Santhanam Comedy video in tamil - இந்த பதிவில் நகைச்சுவையில் தமிழ் சினிமாவை கலக்கிய சந்தானத்தின் காமெடிகளை காண போகிறோம்.
Santhanam Comedy videos tamil
சந்தானம் காமெடி | Santhanam Comedy in tamil
1. சூரி: எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சந்தானம்: மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் மேனேஜர் நாயைக் காணோம்‘ னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
2. சந்தானத்தின் மனைவி: காரணம் இல்லாம குடிக்கமட்டேன்னு சொன்னீங்களே இப்போ ஏன் குடிச்சிங்க?
சந்தானம்: ராக்கெட் விடுறதுக்கு பாட்டில் வேணும்னு பையன் கேட்டான் அதான்.
சந்தானத்தின் மனைவி : ????
3. சந்தானம்: என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு ?
ஜோசியர்: உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க.
4. ஆர்யா : அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்ற?
சந்தானம்: சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறாரே.
5. சந்தானம் :குடி குடியை கெடுக்கும்ங்றது சரியா போச்சு
ஆர்யா : எப்படி?
சந்தானம் : எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா.
6. சந்தானம் : எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது.
ஆர்யா : தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?
சந்தானம் : இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!
7. சந்தானம் : எங்கம்மாவுக்கு மூச்சுவிட ரொம்ப சிரமமா இருக்காம்.
சந்தானத்தின் மனைவி: அவ்வளவு சிரமப்பட்டு எதுக்கு மூச்சு விடணும்னு கேக்கறேன்?
8. சந்தானம்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு ?
சந்தானத்தின் மனைவி : பொங்கலிலே சர்க்கரை போட்டிருக்கேன் அதான்.
9. சந்தானத்தின் மனைவி: என்னங்க இது, ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்றீங்க?
சந்தானம்: (கோபமாக) நீதானடி டெய்லி காலண்டர் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னே.
10. சந்தானம்: நம்ம வீட்டுக்கு சாப்பிட மேனேஷரை கூப்பிட்டிருக்கிறேன்.
சந்தானத்தின் மனைவி: என்ன திடீர்னு ?
சந்தானம் : அவர் மனைவியோட சாப்பாட்டை கொஞ்ச நாளா குறை சொல்லிக்கிட்டிருந்தாராம் அதான்.
11. சந்தானம்: வெளியே ரெண்டு கண்ணும் தெரியாத ஆசாமி சோறு கேட்குறான். போட்டுட்டு வா!!
சந்தானத்தின் சந்தானத்தின் மனைவி: அவனுக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுன்னு எதை வச்சு சொல்றீங்க.
சந்தானம்: உன்ன மகாலட்சுமி, மகராசின்னு சொல்றானே அதான்!!
12. சந்தானத்தின் மனைவி: இந்த காதலர் தினத்தில எனக்கு ஒரு ரிங் கொடுங்க.
சந்தானம்: அதுக்கென்ன கொடுத்தா போச்சு.. நம்பர் சொல்லு!
சந்தானத்தின் மனைவி: ??
13. சந்தானத்தின் மனைவி: நம்ம பையன் ஏன் இப்படி மிரண்டு மிரண்டு அழறான்.
சந்தானம்: பேய் கதை கேட்டான்... நான் உன் கதையை சொன்னேன் அதான் அழறான்.
சந்தானத்தின் மனைவி: ??
14. சந்தானம்: இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும், காற்றும் வரும்-னு டி.வி-யில சொன்னாங்க.
சந்தானத்தின் மனைவி: நீங்க கேட்டீங்களா?
சந்தானம்: இல்லை! அவங்களே சொன்னங்க.
15. ஐயர்: மாப்பிள்ளை சீக்கிரம், நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலிய கட்டுங்க.
சந்தானம் (மாப்பிள்ளை): தாலி கட்டிட்டாலே நல்ல நேரம் முடிஞ்ச மாதிரிதானே.
16. சந்தானத்தின் மனைவி: ஏங்க? உங்க புத்தகத்திலே ஆண்களுக்கென்று ஒரு பகுதி கூட கிடையாதா?
சந்தானம் : ஏன் இல்லை? சமையல் குறிப்புன்னு ஒரு பகுதி இருக்கே!
17. சந்தானம் : (சாமியாரிடம்) என் மனைவியின் வாயை கட்டிப்போட ஒரு மந்திரம் இருந்தால் சொல்லுங்களேன்?
சாமியார்: அது பண்ண முடியாம தானே நானே சாமியார் ஆனேன்.
18. சந்தானம் : குழந்தை அழுது கொண்டிருக்கு. அதைக் கவனிக்காம நீ பாட்டுக்கு சீரியல் பார்த்திட்டிருக்கியே...
சந்தானத்தின் மனைவி: சீரியலைப் பார்த்துட்டுத்தாங்க அது அழுதிட்டுருக்கு..
சந்தானம்: ????
19. சந்தானம் : என்னோட கண்ண நல்லா பாரு என்ன தெரியுது ?
சந்தானத்தின் மனைவி : உங்க உண்மையான அன்பு தெரியுதுங்க..
சந்தானம் : நாசமா போச்சு! தூசு விழுந்திருக்குடி அதை எடு..?
20. ஆர்யா : டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா ?
சந்தானம் : முடிஞ்சா வரேன் டா ?
ஆர்யா : முடிஞ்சா பிறகு ஏண்டா வர... படம் ஆரம்பிக்கும் போதே வாடா ?
சந்தானம் : ????
21. சந்தானத்தின் மனைவி : என் காதுல நீங்க போட்ட புதுத்தோடு எங்கேயோ விழுந்திடிச்சுன்னு சொன்னா, அதுக்குச் சந்தோசப்படறீங்களே ஏன் ?
சந்தானம் : நான் உன் காதுல போட்டதுல ஏதோ இந்த ஒண்ணாவது விழுந்திருக்கேனுதான்.
சந்தானத்தின் மனைவி : ?????????????
Santhanam Comedy in tamil - இதுபோல் பல காமெடிகளை படிக்க,