Type Here to Get Search Results !

தன்னம்பிக்கை வரிகள் | Motivational quotes in tamil

Motivational quotes in tamil - இந்த பதிவில் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையிலும் மற்றும் ஊக்கம் கூட்டும் சில மொடிவேஷனல் கோட்ஸ் நான் காண போகிறோம்.


Motivational quotes in tamil


தன்னம்பிக்கை வரிகள் | Motivational quotes in tamil


உன் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இரு நீ உயரும் வரை அல்ல உன்னை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை.


உன் வாழ்க்கையின் கஷ்ட காலத்தில் பல கைகள் உனக்கு கை கொடுக்கலாம் ஆனால் உன் நம்பிக்கை கொடுப்பது போல் யாராலும் கொடுக்க முடியாது.


நான் தோற்றது இவரால்தான் என பிறரை காட்டி தப்பித்துக்கொள்ளும் மனங்கள் என்றுமே இங்கே ஜெயிப்பது கிடையாது.


நான் செய்வது சரியோ தவறோ எதையும் துணிந்து செய்யும் மனங்களை இங்கே வெற்றி அடைகின்றது.


வெற்றியை மட்டும் நோக்கி ஓடு தடைகள் எல்லாம் தானாகவே விலகி நிற்கும்.


நிமிடத்திற்கு நிமிடம் மாறும் நம் எண்ணங்களை கலைத்துவிட சில நொடிகளே போதும் ஆனால் நினைத்ததை அடைய பிடிவாதமாக இருந்தாலே உனது வெற்றி உறுதியாகும்.


உன் வாழ்க்கையை இருட்டாக இருப்பதை நினைத்து கவலை கொள்ளாதே இருட்டில்தான் பல கனவுகள் வரும்.


யார் வேணாலும் உன்னை வெறுக்கலாம் ஆனால் ஒரு பொழுதும் உன்னை நீ வெறுக்காதே.


முயற்சிகள் இருந்து அதில் ஆசைகள் இல்லை என்றால் அந்த முயற்சி வீண்! அதேபோல் ஆசைகள் இருந்து முயற்சி இல்லை என்றால் அந்த ஆசை வீண்!


மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களை உங்கள் கடந்த காலத்தை வைத்து ஒப்பிட்டு கொள்ளுங்கள்.


தோல்விகள் நம்மை துரத்தும் பொழுது தான் நாம் முயற்சியுடன் வெற்றியை நோக்கி ஓட வேண்டும்.


உன்னை அவமானப்படுத்தும் பொழுது உன் வாழ்க்கையை வெறுக்க தான் தோணும் ஆனால் அந்த நொடிக்கு பின்புதான் உன் வாழ்க்கை நொடி தொடங்கும்.


வருத்தப்பட்டு ஒன்றும் இங்கு ஆகப்போவது கிடையாது இங்கு விழுந்தோம் என சிறந்தது.


மனது வலித்தால் அழுத்தி விடுங்கள் ஆனால் அழுது கொண்டே இருக்காதீர்கள் ஏனெனில் அதைத்தான் உன்னை காயப்படுத்தியவர்கள் எதிர்பார்ப்பார்கள்.


மற்றவர்களைப் பார்த்து பயந்து வாழ்வதைவிட ஒருமுறை வீழ்ந்து வாழ்வது சிறந்தது.


பல முயற்சிகள் உனக்கு தோல்விகள் அளித்திருக்கலாம் ஆனால் எத்தனை தோல்விகள் வந்தாலும் முயற்சி செய்வேன் என்பதே உனக்கு வெற்றி தான்.


உனக்கான பாதையை இல்லை என்று கவலை கொள்ளாதே உனக்கான பாதையை நீயே உருவாக்கிக்கொள்.


தகுதி மீறி நீ ஆசைப்படு ஏனெனில் அப்போதுதான் உன் தகுதியை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வாய்.


ஒரு வெற்றி மட்டுமே உன் வாழ்க்கையை உயர்த்தி விடாதே பல தோல்விகள் தான் உன் வாழ்க்கையை உயர்த்தி விடும்.


முயற்சித்துப் பார் அதன்பின் உலகமே உன்னை திரும்பிப் பார்க்கும்.


உயர்ந்த இடத்தில் இருக்கும் பொழுது உலகமே உங்களை பாராட்டும் ஆனால் உன் நிலைமை கீழே இறங்கும் போது உன் நிழல் கூட உன்னை மதிக்காது.


முதலில் உன்னை நீ நம்பு அதன் பின்பு உலகம் உன்னை நம்பும்.


முட்டாள்தனத்தால் ஏமாந்தவர்களை விட இரக்க குணத்தால் ஏமாந்தவர்களே இங்கு அதிகம் ஏனென்றால் இது பச்சோந்திகளின் துரோகிகளும் வாழும் உலகம்.


எவர் ஒருவரின் வார்த்தை உன் மொத்த மனநிலையும் மாற்றுகிறதோ? அவரே உன் வாழ்நாள் பொக்கிஷம்.


இதயத்தில் வலிமை இருந்தால் இமயத்தில் ஏறலாம் முடியாது என்று முடிந்தால் அங்கே முடிந்து விடும் உன் கதை.


 எப்பொழுதும் உன் அடையாளத்தை யாருக்காக விட்டுக் கொடுக்காமல் இருந்தால் உன் வழி வெற்றி வழியாக இருக்கும்.


நல்ல பாதையில் நடை போடுவது சுலபம் ஆனால் வாழ்க்கையில் நல்ல பாதையில் நடைபோடுவது கடினம்.


மற்றவர்களுக்கு கீழ் இருப்பதால் நீ தாண்டி விட்டாய் என்று நினைக்காதே! அனைத்தையும் தாங்கும் பூமியை உன் காலடியில் தான்.


தன் இரைக்காக வலை பின்னும் சிலந்தியின் கவனம் கொண்டால் உன் வாழ்வின் சூழ்நிலைகள் பின்னும் வலைகளில் இருந்து  தப்பிவிடலாம்.


வெற்றி பெற்ற மனிதர்கள் யாரும் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது இன்னும் இதைவிட நம்மால் செய்ய முடியும் என்ற நோக்கம் மட்டுமே மனதில் இருக்கும்.


நல்வினை நீ செய்தால் தீவினை சேரும் இங்கே! கரடுமுரடான பாதை இங்கே எதற்கு மனிதா கவலை இங்கே!


வெற்றி என்றால் மேல்படி. தோழிதானே முதல் படி. துணிந்தால் ஏறிவிடலாம். ஏணியாய் எழுந்திடலாம்..!


கூச்சலிட தேவை இல்லை. கூக்குரலும் தேவையில்லை. தடைகளை உடைத்தெறிந்ததால் படைகளை ஜெயித்திடலாம்!


சாதிக்க நீ நினைத்தால் சாதிகளை தூக்கிவிடு சதிகளை நாம் நினைத்தால் வரலாற்றுகளை யார் படைப்பார்?


பயணமும் வெகுதூரம் பாதையோ தெரியவில்லை பாய்மரங்கள் ஏதுமில்லை போட வேண்டும் எதிர்நீச்சல்.


வருத்தங்கள் ஏதுமின்றி உங்கள் இதயத்தில் மகிழ்ச்சியை நிரப்ப பள்ளங்கள் எப்படி உருவாகும்.


முடியும் என்றே முயன்று தோன்றி தோற்றிடு முடியாது என்றால் பயின்று வென்றிடு.


பட்டைத் தீட்டினால் தான் வைரம் கூட மின்னும்! அடிமேல் அடித்தால் தான் தங்கமும் ஜொலிக்கும்!


கடவுள் கல்லாய் தான் மனிதனை படைத்தான் அந்த கல்லை செதுக்கும் சிற்பிகள் தான் நாம் செய்யும் முயற்சிகள் மற்றும் தோல்விகள்.


உன்னை நீயே செதுக்கி விடு சிலை ஆகிடு! இல்லை சிற்பி ஆகிடு!


பரமபதத்தில் பாம்பு விழுங்கி விட்டால் ஏணியை நினைத்து விளையாடுவது இல்லையா அதுபோல்தான் வாழ்க்கையும்.


இதுவும் பரமபதம் தான் சில மனிதர்கள் பாம்பாய் சில மனிதர்கள் ஏணியாய் வாழ்க்கை என்பது இதுவே.


வீழ்ச்சி இல்லாமல் என்றும் எழுச்சி இல்லை! தோல்வி இல்லாமல் இன்றும் வெற்றி இல்லை!


சருகாய் விழுந்தால் நாளை உரமாக்கலாம்! விதையாய் விழுந்தாய் நாளை மாறலாம்! எப்படி விழுவது என்று நீயே முடிவு செய்.


தோல்வியைக் கூட வெற்றியாய் நினை அது தான் உனக்கு முதல் வெற்றியாகும்.


வஞ்சனை இல்லாமல் வாழ கற்றுக் கொள் வாழ்க்கை போட்டி தான் என்பதையும் மறவாதே.


நீ விளக்காக இல்லாவிடினும் ஒளியூட்டும் சிறிய தீக்குச்சி இரு.


வானம் வசப்படாமல் போகலாம் அதையும் தாண்டி நாம் காணும் கனவுகள் ஒரு நாள் நம் வசம் சேரலாம்.


போராட்டங்கள் தான் இங்கே வாழ்க்கை என்றால் போராடி உன் வாழ்க்கையை வென்றிடு.


சில உறவுகளை மருந்தால் மட்டுமே என்னால் வாழ முடியும் என்றால் மருந்து தான் ஆக வேண்டும்.


மேலும் இதுபோன்ற சில பதிவுகளை கீழே கொடுத்துள்ளேன் அதையும் மறக்காமல் படியுங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad