Independence Day quotes in tamil – இந்த பதிவில் உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக இங்கு சுதந்திர தின வாழ்த்துக்களை பதிவிட்டு உள்ளோம்.
ஆகஸ்ட் 15 ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் இந்நாளில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு மற்றும் முக்கிய இடங்களில் கொடி ஏற்றப்படும்.
இந்நாளை சிறப்பிக்கும் விதமாக சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவிக்கும் இமேஜ் மற்றும் வாழ்த்து கவிதைகளை இங்கு கொடுத்துள்ளோம்.

சுதந்திர தின வாழ்த்துக்கள் | Independence Day quotes in tamil
இந்திய நாட்டின் மீது பற்றுடைய அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
மந்திரத்தாலும், தந்திரத்தாலும் பெற்றதில்லை நம்முடைய சுதந்திரம் உதிரத்தாலும், பல உயிர் தியாகத்தாலும் கிடைத்தது தான் நமது சுதந்திரம்.
ஜாதி மதங்களால் பிரிக்கப் பட்டாலும் மனமால் இணைவோம் இனம் மொழிகளால் வேறுபட்டாலும் நாம் இந்தியனாய் ஒன்று சேர்வோம்.
இனிப்பான இந்நாளில் ஒரு தாயின் பிள்ளைகளாக நாம் எல்லோரும் குடியரசு தினத்தை போற்றி மகிழ்ந்திடுவோம்.
நான் பிறந்தது என் தாயின் மடியில் ஆனால் நான் தவழ்ந்து நடந்தது எல்லாம் என் பாரதத்தாயின் மடியில்.
என் தாய் கூட மகிழ்ச்சியடைவார் நான் நேசிப்பது என் தாய் நாட்டை என்றால்.
இரத்தத்தையும் தன் தேகத்தையும் நமக்காக, நம் தாய் நாட்டிற்காக தியாகம் செய்தவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்தும் உன்னதத் திருநாள் இன்று.
பணத்தினாலும், மனத்தினாலும் கிடைத்ததல்ல எங்கள் சுதந்திரம் வீரத்தினாலும் விவேகத்தினாலும் கிடைத்தது எங்கள் சுதந்திரம்.
நம் தேசத்தை மீட்டெடுக்க உயிர்த்தியாகம் செய்த தலைவர்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்கிடுவோம் இந்த சுதந்திர தின நன்னாளில்.
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நம் பாரத தேசத்தை எவராலும் வெல்ல முடியாது என மார்தட்டி சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.
இமயம் முதல் குமரி வரை மூவர்ணக் கொடியை ஏற்றி இந்தியன் என ஒற்றுமையாக சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.
சுதந்திர தின வாழ்த்து | Independence Day wishes in tamil
சாதி மதம் பார்க்காமல் ஒற்றுமையாக இருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
உதிரங்களை உரமாக்கி உதித்த சுதந்திரம் – நம் சுதந்திரம்! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
உலகளவில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஒரே நாடு! ஒரே பார்வை! ஒரே அடையாளம்! ஒரே கொடி! நமது இந்தியா!
மேலும் இதுபோன்று பதிவுகளை கீழே கொடுத்துள்ளேன் மறக்காமல் படித்து மகிழுங்கள்.