Sad Quotes in Tamil | சோகமான கவிதை வரிகள்

Sad quotes in tamil – இந்தப் பதிவில் சில சோகமான மற்றும் மனதில் உள்ள வலிகளை உணர்த்தும் வரிகளை இங்கு பதிவிட்டுள்ளேன்.

  • Sad Relationship Quotes In Tamil
  • Sogam quotes in tamil
  • Heart Pain Quotes in Tamil Words
Sad Quotes in Tamil

சோகமான கவிதைகள் | Sad quotes in tamil

இனி சிந்திட ஏதுமில்லை கண்ணீர் வற்றிய கண்களும் கடைசி ஒரு முறை உன்னை கண்டிட ஏங்குகிறது.

அன்று நமக்காக நேரம் ஒதுக்கி அவர்கள் இன்று நம்மையே ஒதுக்குகிறார்கள்.

விரல் இடையில் நழுவிச் செல்லும் நீர் போல நமக்கே தெரியாமல் சில உறவுகள் நழுவிச் செல்கிறது.

புதுமைகள் புகுந்துவிட்டால் பழைய உறவுகள் தூக்கி எறியப்படுகிறது.

வலி கண்களில் வரும் கண்ணீர்களில் தான் இருக்கிறது என்று அர்த்தமல்ல! அது சில பொய்யான சிரிப்பிலும் மறைந்து இருக்கும்!

எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் கனவாக மாறுவது நம் நம்பிக்கைக்குரிய நபரிடம் தான்.

ஒருவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் இறந்தால் அவர்களுக்கு இறப்பு கிடையாது வெறும் எண்ணிக்கை தான்.

நிராகரிப்பு இதனை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் இதன் வலியும் வேதனையும் மரணத்தை விட கொடியது.

எதையோ தேடி வானத்தில் வட்டமிட்ட படி பறக்கும் பருந்தைப் போல் உன் நினைவுகள் என்னை சுற்றி சுற்றியே.

நம் மனது அதிகமாக இல்லாத ஒன்றை தான் அதிகமாக தேடும்.

கனவில் வரும் நிஜமும் நீ, நிஜத்தில் காணும் என் கற்பனையும் நீ.

இல்லாத ஒன்றில் கிடைக்கும் சந்தோஷம் நிஜம் தருவதில்லை.

சோர்ந்து போகும் தருணத்தில் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தனிமை தான்.

ஏற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றவே மனம் ஆசைப்படுகிறது தேடி தேடியே உன்னிடம்.

அதிக அன்பு பாசம் கிளையும் தலையும் போல் ஒருநாள் இல்லையெனில் ஒரு நாள் உதிர்ந்து போகும்.

ஆசைகள் மலை போல குவிந்து இருக்கிறது ஆனால் அது இருக்கும் இடமோ பாதாளத்தில்.

உள்ளத்தின் உளறல்கள் பலருக்கு புரிவதில்லை அது உடைந்து கிடந்தாலும் கவனிக்க யாருமில்லை.

மனதின் வலிகளை மறைத்து போலி வேடமிட்டு புன்னகைக்கிறது பல முகங்கள்.

நினைவுகள் நிறைந்து கொண்டே செல்கிறது ஆனால் நிலையாய் நிஜத்தில் பாதி பேர் கூட இல்லை.

வார்த்தைகளால் சிதைவது மனம் மட்டுமல்ல அந்த உறவும் தான்.

என் தலையணைக்கு தாகம் போல தினமும் கண்ணீரை கடனாக கேட்கிறதே.

தேவைக்கு அதிகமான நினைவுகளும் கடனும் தூக்கத்தை பறித்துக்கொள்ளும்.

நிஜம் ஒரு நொடி வலி நினைவு ஒவ்வொரு நொடியும் வலி.

பேச நிறைய இருக்கும் போது பேசுவதற்கு பிடித்தவர்கள் அருகில் இருப்பதில்லை.

அடுத்தவர் ரசிக்கும் அளவிற்கு வாய் விட்டு சிந்தும் puன்னகையில் சொல்ல முடியாத சோகங்கள் மறைந்தே இருக்கிறது.

எவ்வளவு தூரம் கடந்து தான் சென்றாலும் சில நினைவுகள் நிழலை விட மோசமாக பின் தொடர்கிறது.

என் சிரிப்புக்குப் பின்னால் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்று என்னை புரிந்தவர்கள் மட்டுமே தெரியும். எனவே காலம் என்பது ஒரு நாள் மாறக்கூடும்.

தனிமையின் பிடி ரண வேதனை கற்றுக் கொடுத்தது வாழ்க்கையின் மறுபக்கத்தை.

புரிதல் இல்லையெனில் பிரிதலே மேல் அது எந்த உறவாக இருந்தாலும்.

அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு.

சில சந்தர்ப்பங்களில் இழப்பதற்கும் தயராக இருங்கள் எதுவும் எளிதில் கிடைப்பதில்லை.

காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை புரிதலற்ற வார்த்தைகளே போதும் வலிக்க வலிக்க நின்று கொல்லும்.

நீங்கள் ஒருவரை விட்டு பிரிந்த பின் உங்கள் மனம் வலிக்கிறது என்றால் அவர்கள் தான் உங்கள் இதயம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சில சமயம் மீள முடியாதா தனிமைக்கு தள்ளப்படுகின்றேன் எனது பேச்சுக்கு பிறர் இடம் இருந்து மதிப்பு குறையும் போது.

மன காயங்கள் ஆறியபோதும் நினைவுக்கு வரும்போதெல்லாம் வலிகள் மட்டும் ஏனோ புதிதாககே இருக்கின்றது.

பிரிந்து போவாய் என தெரியும் மறந்து போவாய் என தெரியாது.

பேசி பயனில்லாத போது மெளனம் சிறந்தது! பேசியே அர்த்தமில்லாத போது பிரிவே சிறந்தது!

எரித்து கொண்டிருக்கும் நினைவுகளை அணைத்து கொண்டிருக்கின்றேன் மையில் வரிகளாக.

சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க.

பிரிவின் வலி பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல பிடித்தவர் அருகில் இல்லாதவர்களுக்கும் தான்.

சிலரது வாக்குறுதிகள் தண்ணீரில் எழுதும் எழுத்துக்களை போன்றதே.

பசித்தவருக்கு தெரியும் உணவின் அருமை! இழந்தவருக்கு புரியும் உறவின் அருமை.

சில நேரங்களில் தனிமை கடினம், சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்.

நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் இறந்து போனது.

கலைந்து போன கனவிலும் வலியான நினைவுகள்.

சில ரணங்களை மறக்க ஏதோவொன்றை மனம் ரசிக்கதான் வேண்டும்.

தொட்டுச்செல்லும் நினைவுகளை தான் விடாமல் துரத்துகின்றது மனம்.

உறக்கம் தொலைந்த இரவுகளில் உறங்கிய நினைவுகள்  விழித்துக் கொல்கிறது.

கண்களில் மிதந்த அழகிய காட்சியெல்லாம் சில நேரங்களில் தூசியாகி கண்ணீரை தருகிறது.

நினைவுகளும் சுமை மனதுக்கு தொல்லையாகும் போது.

நம் உறவாக இல்லாத போதும் அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது.

வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது.

பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில் இதயங்கள் தாங்காது.

நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது.

கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான் சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை.

கடவுளே இடைவெளி தேவை! கண்ணீர் துளிகள் காயவும்! மனதில் ஏற்பட்ட வலி மறையையும்! பழைய நினைவுகளை மறக்கவும்!

வாழ்க்கையில் சிறந்த பொக்கிஷம் என்பது கஷ்டப்படும் நேரத்தில் கிடைக்கும் ஆறுதலும் நம்பிக்கையும் தான்.

இன்பம் எப்படி இருக்கும் என்பதை உணரும் முன்பே வலி எப்படி இருக்கும் என்பதையே உணர்த்தி விடுகிறது வாழ்க்கை.

வலிகள் பல உள் இருந்தும் மௌனத்தை மொழியாய் சொல்லும் சிறப்பு உன்னிடம் மட்டுமே உண்டு சோகம்.

மனதின் ஓரத்தில் மரணவலி ஆனாலும் வெளியே சிரிக்கிறேன் கடைசிவரை சிரித்துக் கொண்டே இருப்பேன்.

உந்தன் நினைவுகள் என்றுமே உதிர்வதில்லை அவை சிறகு முளைத்த வண்ணத்துப்பூச்சியாய் என் மனதிற்குள் வட்டமிட்டு வாழ்கிறது.

நீங்கள் தேடுவது மகிழ்ச்சி என்றால் முதலில் அந்த மகிழ்ச்சியை தொலைத்து நீங்கள்தான்.

மனதிற்கு பிடித்தது எல்லா நாட்களிலும் கிடைப்பதில்லை ஆனாலும் கிடைப்பதை வைத்து அழகு பார்க்க கற்றுக் கொண்டதே மனம்.

பிரிவு வந்த பின்னும் நினைவுகள் மலருதே! நினைவுகளில் வாழ்ந்தே பயணங்கள் தொடருதே!

மேலும் இது போன்ற சில மேற்கோள் மற்றும் கவிதைகளை கீழே கொடுத்துள்ளேன்.

காதல் தோல்வி கவிதைகள் | Love Failure quotes in tamil
About Quotestamil.in 99 Articles
This quotes is collected from Various sources. So this quotes credits goes to respective writer.

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*