மாம்பழம் நன்மைகள் தீமைகள்

முக்கனிகளில் சிறந்து விளங்க கூடியது மாம்பழம். கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த மாம்பலத்தில் பல நன்மைகள் உள்ளன. இந்த மாம்பழத்தில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் விட்டமின் ஏ போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மாம்பழங்களில். கோடை காலத்தில் இயற்கையாக கிடைக்கக்கூடிய மாம்பழங்களை உண்ண தவறாதீர்கள்.

மாம்பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்

மாம்பழத்தில் அதிகப்படியாக வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், ஜிங் சத்து  இந்த மாதிரியான பலவித சத்துக்கள் மாம்பழத்தில் உள்ளன.

கண்பார்வை மேம்படுத்தும்

மாம்பழத்தில் வைட்டமின் சி  மற்றும்வைட்டமின் ஏட்டமின் சி அதிகமா இருப்பதனால் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த மாம்பழங்கள் நமது கண்களின்  பார்வைத் திறனை அதிகரிக்கும்  மேலும் பார்வை கோளாறு போன்றவை நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

மாம்பழங்களில்  வைட்டமின் சி அதிகமா காணப்படுவதால் அவற்றை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.  சளி இருமல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் அடிக்கடி மாம்பழத்தை உண்டுவந்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதன் மூலமாக சளி இருமல் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சருமத்தின் செல்களை புதுப்பிக்க கொலாஜின் என்ற சத்து மிகவும் முக்கியமானது மாம்பழங்களில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுவதால் இந்த வைட்டமின் சி கொலாஜினை அதிக அளவில் உற்பத்தி செய்யும் இதனால் சருமம் பொலிவுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும் .

மூட்டுகளை ஆரோக்கியமாக்கும்

மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்க மாம்பழங்கள் பெரிதும் உதவுகின்றன. மூட்டுகளில் லேகமென்ஸ் மற்றும் டெண்டா அவைகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி மிகவும் முக்கியமானது, அதனால் மாம்பழங்களை உண்டு வந்தால் மூட்டுக்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

 மலச்சிக்கலை  தடுக்கும்

மாம்பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக இருப்பதால் புற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மாம்பழங்களில் நார்ச்சத்து அதிகமாக  இருப்பதால் இவை ரத்த சர்க்கரையின் அளவை உடலில் சீராக வைக்க உதவுகின்றன. இந்த மாம்பழங்கள் குடல் மற்றும் ஜீரண  உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட உதவுகின்றன.

உடல் எடையை குறைக்கவும் இந்த மாம்பழங்கள்உதவுகின்றன. மாம்பழங்களை அடிக்கடி உண்டு வருவதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

ரத்த சோகையை தடுக்கும்

மாம்பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக காணப்படுவதால் இவை ரத்த சோகையை தடுக்கும் மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் உள்ளதனால் பெண்கள் இந்த  மாம்பழங்களை உண்டு வருவதனால் ஹீமோகுளோபின் அளவைஅதிகரிக்கும். இந்த மாம்பழங்கள் ரத்தத்தின் உற்பத்திக்கு உதவி புரிகின்றன.

மாம்பழம் சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொள்ள கூடாத சில உணவுப் பொருட்கள்

  1. மாம்பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் அவை வயிற்று வலி மற்றும் அமில கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து நீர் அருந்துவது நல்லது.
  2. மாம்பழம் சாப்பிட்டவுடன் கசப்பான பொருட்களை உண்பது உடலுக்கு தீமை விளைவிக்கும். அவ்வாறு மாம்பழம் சாப்பிடும் கசப்பான பொருட்களை உண்பதால் குமட்டல் வாந்தி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
  3. மாம்பழம் சாப்பிட்ட உடனே நிறைய தயிர் உண்பது உடலில்   தோல் பிரச்சினை மற்றும் உடலில் தேவையற்ற நச்சு பொருள்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
  4. மாம்பழங்களில் சர்க்கரை  இருப்பதால் இவற்றை குளிர்பானங்களுடன் எடுத்துக் கொள்ளும் போது நீரழிவு நோயாளிகளுக்கு உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

Leave a Comment