ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள் | George bernard Shaw quotes in tamil

George bernard Shaw quotes in tamil – இந்தத் தொகுப்பில் ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்கள் கூறிய பொன்மொழிகளை காணப்போகிறோம்.

george bernard Shaw quotes in tamil

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள் | George bernard Shaw quotes in tamil

மனிதர்களுள் இருவகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை மற்றவர்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.

பணப் பற்றாக்குறை அனைத்துத் தீமைகளுக்கும் வேர்.

மிருகங்கள் எனது நண்பர்கள், நான் எனது நண்பர்களை உண்பதில்லை.

பெண்களில் இரண்டே பிரிவினர்தான். ஒன்று அழகானவர்கள், மற்றொன்று அழகற்றவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.

பிறரை சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.

சந்தேகத்தை வெற்றி கொள்ளுங்கள், தோல்வியைத் தவிர்த்திடலாம்.

இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை.

நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்மதிப்பாகும்.

பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது.

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல். புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.

அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதைவிட புத்திசாலியான எதிரியிடம் சேர்வது மேல்.

சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியடைகிறார்கள்

பெண்ணை ஒரு பொருள்போல நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.

செல்வத்தை சம்பாதிக்காமல் அனுபவிக்க உரிமை கிடையாது. அதுபோலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகரமுடியது.

வாழ்க்கை என்பது உங்களைக் கண்டுபிடிப்பதல்ல, வாழ்க்கை என்பது உங்களை உருவாக்குவதே!

இதுபோல் பல உயர்ந்த மனிதர்கள் கூறிய உபயோகமான பொன்மொழிகளை காண,

Robin sharma quotes in tamil | ராபின் ஷர்மா பொன்மொழிகள்

சார்லி சாப்ளின் பொன்மொழிகள் | Charlie Chaplin quotes in tamil

1 thought on “ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள் | George bernard Shaw quotes in tamil”

  1. "நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்".ஆம் … அசைக்கமுடியாத பேருண்மை …

    Reply

Leave a Comment