சாக்ரடீஸ் பொன்மொழிகள் | Socrates quotes in tamil

0

Socrates quotes in tamil - இந்த தொகுப்பில் உலகில் மாபெரும் தத்துவ ஞானிகளில் ஒருவரான சாக்ரடீஸ் அவர்களின் பொன்மொழிகளை தான் காண போகிறோம்.


உள்ளடக்கிய தலைப்புகள்


  • Socrates thathuvam tamil
  • சாக்ரடீஸ் பொன்மொழிகள்
  • சாக்ரடீஸ் சிந்தனை வரிகள்

socrates quotes in tamil


சாக்ரடீஸ் பொன்மொழிகள் | Socrates quotes in tamil


1. அழகுக்கு ஆயுள் மிகக் குறைவு.


2. அற்ப மனமுடையோர் பழிவாங்கும் பண்புடையோர்.


3. ஆசைகளை அடக்க வேண்டியதில்லை, அதைச் சீரமைப்பதுதான் முக்கியம்.


4. ஆடம்பரம் என்பது போலியான வறுமை, மனநிறைவு என்பது வற்றாத செல்வம்.


5. பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்; தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது.


6. உங்கள் பேச்சைக் கொண்டுதான் உங்கள் அன்பு மதிக்கப்படும். உங்கள் அன்பைப் போலத்தான் உங்கள் நடத்தை இருக்கும். உங்கள் நடத்தையைப் போலத்தான் இருக்கும் உங்கள் வாழ்க்கை.


7. தமக்குத் தீங்கிழைத்தவன் தன் வசம் சிக்கிய போதிலும் அவனை மன்னிப்பவனே இறைவனுக்கு நெருக்கமாகிறான்.


8. உலகில் நல்லது ஒன்றே அறிவு, தீயது ஒன்றே அறியாமை.


9. உனது அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்ளவிட்டால் அது உன்னை அழித்துவிடும்.


10. நீ ஒருவனிடத்தில் உதவியாகப் பெறக்கூடியதை எக்காரணத்தை முன்னிட்டும் உரிமையாகக் கேட்காதே.


11. மிகக் குறைந்ததைக் கொண்டு திருப்தியடைபவனே முதன்மையான செல்வம். ஏனெனில் இயற்கையின் செல்வம் திருப்திதான்.


12. தேவைகள் குறையும் அளவிற்கே தெய்வத்தன்மையை அடைவோம்.


13. மலர்களைச் சுற்றி மணம் கமழும்; அதுபோலத் தான் செயற்கரிய செயல்களைச் சூழ்ந்து புகழ் திகழும்.


14. பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன், தன் குறையைக் காண்பவன் முழு மனிதன்.


15. மனிதன் குறையுள்ளவன் மட்டுமல்ல, குறை காண்பவனும் ஆவான்.


16. உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.


17. அஞ்சக்கூடியது மரணமல்ல. தர்மத்திற்குப் புரம்பானவற்றைச் செய்யவே அஞ்ச வேண்டும். அதர்மம் ஆபத்தானது.


18. புரிந்து கொள்ளாதபோதும் பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாகக் கருதி விடுகிறான்.


19. உலகை ஆட்டிவைக்க விரும்புபவன் முதலில் தன்னை இயக்கிவைக்க வேண்டும்.


20. என்னால் எதையும் கற்பிக்க முடியாது! அவர்களை சிந்திக்க வைக்கவே முடியும்!


21. நேர்மையாய் இருந்து சாவது, நேர்மையின்றி வாழ்வதைவிட மேலானது.


22. எப்படி இருந்தாலும் திருமணம் செய்து கொள். நல்ல மனைவியாக கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பாய். மோசமான மனைவி கிடைத்தால் நீ அறிஞனாவாய்.


23. ஆடம்பரம் என்பது நாமே தேடிக் கொள்ளும் வறுமை.


24. மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்று, மிகச் சிறப்பாக சிந்தனை செய்வது. ஆனால் முட்டாள் தனமாகச் செயல்படுவது.


25. மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்று, மிகச் சிறப்பாக சிந்தனை செய்வது. ஆனால் முட்டாள் தனமாகச் செயல்படுவது.


26. நல்லொழுக்கம், சிந்தனைத் தெளிவு, தன்னடக்கம், கருணை, பணிவு, கட்டுப்பாடு, நேர்மை, புலனடக்கம் இவையே உண்மையான ஞனாத்திற்குரிய பண்புக் கூறுகள் வாழ்க்கையில் வெற்றி அடைய இந்தப் பண்புக் கூறுகள் துணை செய்யும்.


27. நட்பைப் பெறுவதில் நிதானமாக இரு. நட்பைப் பெற்றவுடன் உறுதியுடன் நீடித்து நட்பைக் காப்பாற்று.


28. மற்றவர்களால் முடியாததை செய்து காட்டுவது திறமை; திறமையால் முடியாததை செய்து காட்டுவது மேதாவித்தனம்.


29. தவறுக்கு வருந்தாதே. திருத்திக் கொள்வதில் வெட்கப்படாதே.


30. பணிவு வேண்டும்; ஆனால் கோழைத்தனம் கூடாது. துணிவு வேண்டும்; ஆனால் தலைக்கனம் கூடாது.


31. புரிந்துகொள்ளாதபோதும், பொறாமைப்படும்போதும், மனிதன் மற்றவனை முட்டாளாகக் கருதி விடுகிறான்.


32. ஒருவன் எத்தனை ஆடுகள் உன்னிடம் உள்ளன என்று கேட்டால், அவன் எளிதில் கூறிவிடுகிறான். ஆனால், தனுக்கு எத்தனை நண்பர்கள் என்று மட்டும் அவனுக்கே தெரிவதில்லை. நண்பர்கள் மீது அவன் வைத்துள்ள மதிப்பு அவ்வளவுதான்.


33. தன்னைப் பூரணமாக அறியாதவன் பிறரை ஒரு நாளும் சரியாக அறிய முடியாது.


34. நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் தெரியும்.


35. யோசனைகளைக் கூறுங்கள் என்று பிறரைக் கேட்கிறோம், ஆனால், நம் கருத்தை அவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம்.


36. சாகச செயல்களின் நறுமணம்தான் புகழ்.


37. தன்னை வெல்ல முடிந்தவனே மிகப்பெரிய வீரன்.


38. உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.


39. இப்போது செய்வதைவிட, இன்னும் சிறப்பாக பணியாற்ற திறமையும், வாய்ப்பும் இருந்தும் அப்படி செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.


40. அடகு வைக்கப்பட்ட நேர்மை ஒருபோதும் திருத்தப்படுவதில்லை.


41. எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும்.


42. உங்களுடைய காரியமாகட்டும், உங்கள் எசமானர் உத்தரவிட்ட காரியமாகட்டும் கடமை என்று தோன்றினால் அதைக் கட்டாயம் செய்து முடியுங்கள். மரணமே வரக்கூடும் என்றாலும் காரியத்தில் பின் வாங்காதீர்கள். ஆனால் குற்றமென்று தெரிவதை ஒருபோதும் செய்யாதீர்கள்.


43. உங்களைவிட உயர்ந்தவர்களிடமும், உங்களுக்குச் சமமானவர்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். ஆனால் அதைவிட முக்கியம் உங்களைவிட கீழான நிலையில் இருப்பவர்களிடம் காட்டும் நேர்மைதான்.


44. சிந்திப்பதும், தனது சிந்தனையில் தோன்றியதைச் சொல்வதும் தனிமனிதனின் பிறப்புரிமை, அதனைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ எவருக்கும் உரிமையில்லை. மனிதன் தடையின்றிச் சிந்திக்கிற நாட்டில்தான் உண்மையான மக்களாட்சி மலரும்.


45. கொண்ட கொள்கையில் உறுதியாய் இருங்கள். வாழ்வில் சிறந்த நிலையை அடைய விரும்பினால் உங்களிடம் கொள்கை, இலட்சியம் பிடிப்பு இருந்தாக வேண்டும். கொள்கையற்றவர் தாமும் நன்மை அடைவதில்லை, இந்தச் சமுதாயத்திற்கும் நன்மை செய்வதில்லை.


மேலும் இதுபோன்று பல பயனுள்ள பொன்மொழிகளையும் படிக்க,


கருத்துரையிடுக

0 கருத்துகள்