Periyar quotes in tamil | பெரியார் பொன்மொழிகள்

இந்த பதிவில் தமிழ்நாட்டின் பெண்கள் சுய மரியாதைக்காகவும் மற்றும் வளர்ச்சிக்காக போராடிய தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழிகளை தான் காண போகிறோம்.

periyar quotes in tamil

தந்தை பெரியார் பொன்மொழிகள் | Periyar quotes in tamil

1. சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.

2. முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்.

3. நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது.

4. புதியவற்றிலேயே முயற்சியும், ஆராய்வதில் ஆர்வமும் இருக்க வேண்டியது அவசியமாகும். அவற்றினால்தான் இயற்கையைப் படிப்பதும், முற்போக்கு அடைவதும் சாத்தியமாகும்.

5. இலட்சியத்தை அடைவதற்காக கஷ்ட நஷ்டம் என்ற விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்.

6. ஆடம்பர செலவு என்பது தரித்திரத்தை விலை கொடுத்து வாங்குவதாகும்.

7. வரவுக்கு மேல் செலவு செய்வது விபச்சாரத்தனம் செய்வதைப் போன்றதாகும்.

8. பெண்களைக் கூண்டுக்கிளி ஆக்காமல் தாரளமாக பழகவிட வேண்டும்.

9. உலகிலுள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டுள்ளன.

10. நம் நாடு ஏழை நாடு, கடவுளுக்கு ஏன் செல்வங்களைப் பாழாக்க வேண்டும்?

11. பெண்களுக்குக் குத்துச் சண்டை முதற்கொண்டு சொல்லிக் கொடுத்து ஆண்களைப் போலவே வளர்க்க வேண்டும்.

12. தேரும், திருவிழாவும் நடத்திப் பொதுமக்கள் பணத்தைப் பாழாக்குவதே மூடத்தனம்.

13. இனிமேல் தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும். அறிவை, ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியம் தேவை. அதில், இந்து மதம், ஆரியம், ஆத்திகம் மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதான் இருக்க வேண்டும்.

14. கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக்கூடாது?

15. நமது நாட்டில் வாசகசாலையின் பெருமையை மக்கள் அறியாமலிருப்பதற்கு இரண்டு காரணம், ஒன்று வாசகசாலையின் அவசியம் பற்றி கல்வி இல்லாமலிருப்பது; மற்றொன்று, மக்களுக்குப் பகுத்தறிவில்லாமலிருப்பது. இந்த இரண்டும் வாசகசாலையை ஏற்படுத்தவிடாமல் குழவிக் கல்லை நட்டுக் கோயில் கட்டுகிற வேலையில் திருப்பிவிட்டது.

16. நம் நாட்டில் புதிதாக ஒருவரைச் சந்தித்தால் அவர் உத்தியோகம் பற்றிக் கேட்போம். ரசியாவிலோ, ‘சமுதாய சேவை என்ன’ என்றுதான் கேட்பார்கள்.

17. மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை.

18. ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும்.

19. கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது.

20. இல்வாழ்க்கை என்பது ஓர் ஆண், ஒரு பெண், இருவரும் சமநிலையில் இருந்து சமமாக அனுபவிப்பதாகும்.

21. சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்க பயப்படுகிறவன் கோழை.

22. நம் பெண்களை மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும், புகழ்பெறும் பெண்மணியாக்கவும் வேண்டும். அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும்.

23. நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்.

24. யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!

25. ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்த்தும் சம உரிமையும் உண்டோ, அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மக்கள் சுகமாக வாழ முடியும்.

26. மற்றவர்களின் ஆதிக்கத்திலோ, ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றவர்களை எதிர் பார்த்தோ, அல்லது தனக்கு மற்றவர்கள் வழி காட்டக்கூடிய நிலையிலோ இல்லாமல் சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழத் தகுதியுடைவர்களாக மாற்றுவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

27. புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கைதான்.

28. பக்தி என்பதற்கு முட்டாள்தனம், பேராசை, தன்னலம் என்பவை தவிர வேறு சொற்கள் தமிழில் இல்லவே இல்லை.

29. அறிவுள்ளவருக்கு அறிவின் செயல்; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்.

30. கடவுளும் மதமும் மனிதன் சிருஷ்டியே, கடவுளும், மதமும் மக்களால் தோற்றுவிக்கப்பட்டனவே அன்றித் தாமாகத் தோன்றியன அல்ல.

31. ஜாதி ஒழிப்பு என்பது நாட்டின் லைசன்ஸ் பெற்ற திருடர்களை, அயோக்கியர்களை, மடையர்களை ஒழிப்பதாகும்.

32. பெண்களுக்கு வேண்டியது புத்தகப்படிப்பு மட்டுமல்ல; உலக அறிவும்தான்.

33. பிரார்த்தனை என்பதற்கு வேறு பெயர் பேராசை. பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.

34. உலகிலுள்ள எப்படிப்பட்ட மதக்காரனும், கடவுள் நம்பிக்கைகாரனும் நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவே மாட்டான்.

35. எதையும் முன்னோர் கூறியது என்றோ, முன்னோர் செய்தது என்றோ அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

36. பெண்கள் படித்துவிட்டால் ஆண்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள்.

37. கோவில்கள் சாமிக்காகக் கட்டியதல்ல; மற்றெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக் காட்டி மக்களைத் தாழ்த்தவும் பணம் பறித்து, ஒரு கூட்டத்தார் பிழைக்க மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாகவே கட்டப்பட்டதாகும்.

38. பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டம் போன்ற வேலைகளுக்குத் தயார் செய்யாதீர்கள்!.

39. கற்பு என்ற சொல், பெண் ஓர் அடிமை; சீவனற்ற ஒரு பொருள் என்று காட்டவே ஆகும்.

40. உண்மையைப் பேசும்போது பழிப்புக்கு ஆளாவது பற்றி கவலை கொள்ளக்கூடாது.

41. ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்!

42. நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்.

43. பெண் ஆசிரியர்கள் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

44. வாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவதுதான்.

45. பொதுத் தொண்டு செய்பவனுக்கு நேரம், காலம் கிடையாது.

46. ஓய்வு, சலிப்பு ஆகியவை தற்கொலைக்குச் சமமானவை.

47. கணவன் மனைவி என்பது கிடையாது, ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான் உண்மை.

48. ஜோதிடம் என்பது சோம்பேறிகளின் மூலதனம்; பொய் சொல்லி ஏமாற்றிப் பிழைப்பதற்கான தொழில்முறை.

49. ஒழுக்கமாய், நாணயமாய் சுயநலமில்லாமல் உழைப்பதன் மூலம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது வெற்றிக்கு வழியே ஆகும்.

50. பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாய் இருக்கிறார்கள்.

51. நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாமல் இருப்பதாகும்.

52. இலக்கியம் என்பது நாகரிகத்தைப் புகட்ட வேண்டும்; மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்தவதாக இருக்க வேண்டும்.

53. எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல, அது போலவே எவனும் எனக்கு மேலாவனும் அல்ல.

54. சிக்கனமே செல்வம், தகுதிக்கு மேல் வாழ்வதே தரித்திரம் என்பதை மனத்தில் இருத்தல் வேண்டும்.

55. மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் நினைப்பு தோன்றியிருக்க வேண்டும்.

56. மனத்துள்ளே குற்றம் குறை இருந்தால் வெளியில் செய்யும் செயலும் குறையுடையதாகவே இருக்கும்.

57. போர் முனைக்குச் செல்லும் வீரர்போல் புரட்சிக்குத் தயாராக இருங்கள்.

58. ஒரு நாட்டின் உணவு உற்பத்திக்கு எல்லை உண்டு. அதற்கு உட்பட்டுதான் மக்கள் தொகை எண்ணிக்கையும் இருக்க வேண்டும்.

59. எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகிறதோ அங்குதான் புரட்சி மலர்கள் வீறுகொண்டு பூக்கும்.

60. கல்வியின் நோக்கம் மக்கள் பகுத்தறிவு பெறும் லட்சியமாக இருக்க வேண்டுமே தவிர, அறிவை மழுங்க வைக்கும் மூட நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கக்கூடாது.

61. பணம் தேட வேண்டும் என்று கருதி அதிலிறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடும்.

62. சூழ்ச்சியில் அடைந்த வெற்றி மனிதனை, சதா சூழ்ச்சியிலேயே இருக்கச் சொல்லுமே ஒழிய, வெற்றியை அனுபவிக்கக் கூட நேரமளிக்காது.

63. தாலியும் நீண்ட கூந்தலும் பெண் அடிமைச் சின்னங்கள்.

64. அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல்.

65. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.

66. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.

67. பொதுவுடைமை என்று கூறுவதன் தத்துவமே மனிதன் கவலையற்று வாழ வேண்டும் என்பதுதான்; சொந்தவுடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வேயாகும்.

68. பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்குக் கொடுக்கும் விலை.

69. ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால், பெண்ணைத் தொழுதெழ வேன்டும் என்று ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். இதுதான் ஆண்-பெண் சரிசமம் உரிமை என்பது.

70. திருக்குறள் ஒன்று போதும், இந்நாட்டு மக்களுக்கு அறிவை உண்டாக்க.

71. சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்?

72. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

73. கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்தவே!

74. ஆணைப் போலவே பெண்ணுக்கும், வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

75. தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது.

76. அறிவுக்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசு.

77. கடவுள், மதம், ஆத்மா, பாவம், புண்ணியம், மோட்சம், நரகம், சொர்க்கம் என்பவை எல்லாம் மனிதனால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதைகளே.

78. சாமி குழந்தைகளைக் கொடுக்கிறது என்று சொல்லுகிறார்களே, அந்தச் சாமி கஞ்சியையும் ஊற்றுமா?

79. ஆசையும், சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை.

80. பெண்களுக்கு நல்ல அறிவையும், பழக்க வழக்கங்களையும் அளிக்க வேண்டும் அவர்களின் மூடநம்பிக்கையை அகற்ற வேண்டும்.

81. கடவுள் இல்லை என்று கூற ஒரு அறிவாளியால் மட்டுமே முடியும்.

82. மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ள அறிவில்லை.

83. பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது ஆகும்.

84. இந்தக் காலத்தில் பிறரை ஏமாற்றாமல், மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் இருப்பதே அறமாகும்.

85. யாராவது ஒருவர்தான் நடத்தக் கூடியவராக இருக்க முடியுமே தவிர, எல்லோரும் தலைவர்களாக இருக்க முடியாது.

86. நன்றி என்பது பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய கடமை; உதவி செய்பவர்கள் எதிர்பார்ப்பது சிறுமைக் குணமே ஆகும்.

87. ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு மூலகாரணமான கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சட்டம் இவைகளை ஒழித்தாக வேண்டும்.

இதுபோல் பல சமுதாயத்திற்கு தேவைப்படும் பொன்மொழிகளை படிக்க,

Leave a Comment