ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் | Nehru quotes in tamil

0

Nehru quotes in tamil - இந்த தொகுப்பில் நம் இந்திய நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்களின் பொன்மொழிகளை காணப்போகிறோம்.


உள்ளடக்கிய தலைப்புகள்


  • Rojavin raja nehru in tamil
  • Nehru kavithaigal in Tamil
  • Nehru speech in tamil
  • ஜவகர்லால் நேரு கவிதைகள்

Nehru quotes in tamil


ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் | Jawaharal Nehru quotes in tamil


1. அறநெறியை மறந்துவிடில் அழிவொன்றே விளைவாகும்.


2. திட்டமிடாத செயல், துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது.


3. அடக்கம் நல்லதுதான். ஆனால், அது அடிமைத்தனமாக இருக்கக்கூடாது.


4. அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும்.


5. இதயத்தைப் பொறுத்தே இனிய சுதந்திரம்.


6. உலக வரலாற்றைப் படிப்பதைவிட உலகில் வரலாறு படைப்பதே இனிமை.


7. உங்கள் உடல் நலனை எப்படிப் பாதுகாக்கிறீர்களோ அதே போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.


8. நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது, அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.


9. வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மையே.


10. சொல்லும், செயலும் பொருந்தி வாழ்கிற மனிதனே, உலகில் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.


11. புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், எந்தக் கொள்கையை நீங்கள் பின்பற்றிய போதிலும் மிகவும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.


12. பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது.


13. செயலில்லாத சிந்தனை அழிவைத் தரும். சிந்திக்காது புரிகின்ற செயல் அர்த்தமற்றது, எனவே சிந்தனையும் செயலும் ஒன்றுபடும் முயற்சி வேண்டும்.


14. நம்முடைய முக்கியக் குறைபாடு எதுவென்றால், நாம் காரியங்களைச் செய்வதற்குப் பதிலாக, அவற்றைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம் என்பதுதான்!


15. மனிதனைவிட சக்திவாய்ந்தது சூழ்நிலையே.


16. கோழைத்தனம் என்பது அனைத்தையும் பாழாக்கும். வீரமே அனைத்தையும் வெல்லும். கோழைகள் தான் வன்முறையில் ஈடுபடுவார்கள். வீரர்கள் எப்போதும் சமாதானத்தைத்தான் நாடுவார்கள்.


17. அச்சம் அறிவுக்கு ஆரம்பம் பொய்மையின் மிக நெருங்கிய நண்பன்.


18. மிரட்டிப் பணிய வைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.


19. கோபமாகப் பேசும்போது அறிவு தன் முகத்திற்கு திரையிட்டுக்கொள்கிறது.


20. என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல. என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.


21. துணிந்து செயல்படுகிறவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும். கோழைகளின் பக்கம் வெற்றி தலை வைத்துப் படுப்பதில்லை.


22. ஒரு நாட்டின் உண்மை வலிமை அதன் மக்களின் கட்டுப்பாடு நிறைந்த உழைக்கும் ஆற்றலிலேயே காணப்படுகிறது. கடுமையான உழைப்பே நமக்கு செல்வத்தைத் தரும், நமது வறுமையை ஒழிக்கும். எனவே நாம் அனைவரும் பாடுபட்டு உழைக்க வேண்டும்.


23. ஜாதகத்தையும் ஜோதிடத்தையும் நம்பி அதில்வாழ்க்கையைத் தேடாதீர்கள். நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது.


மேலும் இதுபோன்று பல இந்தியத் தலைவர்களின் பொன்மொழிகளை படிக்க,


அண்ணாதுரை பொன்மொழிகள் | C. N. Anadurai quotes in tamil

கருணாநிதி பொன்மொழிகள் | kalaignar quotes in tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்