சேகுவேரா பொன்மொழிகள் | Che guevara quotes in tamil

0

Che guevara quotes in tamil - இந்தத் தொகுப்பில் இளைஞர்களின் புரட்சி நாயகனாக திகழும் சேகுவேரா பொன் மொழிகளை தான் காணப்போகிறோம்.


உள்ளடக்கிய தலைப்புகள்


  • Che guevara thathuvam Tamil
  • Che Guevara Tamil Status
  • Che Guevara in Tamil
  • சேகுவேரா சிந்தனை வரிகள்
  • சேகுவேரா வசனம்

che guevara quotes in tamil


சேகுவேரா பொன்மொழிகள் | Che guevara quotes in tamil


1. விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை.


2. ஒருவனின் காலடியில் வாழ்வதைவிட, எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.


3. உலகளாவிய அரசியலிலும் சமூகப் போராட்டத்திலும் தணியாத இலட்சியத்தாகம் இளைஞர்களுக்குள் சுடர் விட்டு எரிய வேண்டும்.


4. போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.


5. நான் சாகடிக்கபடலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்.


6. நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!


7. ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீ எனது தோழன்.


8. வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன் வாழ்க்கையை முழுவதுமாக வாழவில்லை என்றுதான் அர்த்தம்.


9. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்.


10. எந்த ஒரு மனிதன் சுயநலமின்றி மக்களுக்காக போராடுகிறானோ அவனே உண்மையான தலைவன்.


11. நான் சுமந்து செல்லும் துப்பாக்கிகளில் இருந்து வரும் தோட்டாக்கள் ஒவ்வொன்றும் முதலாளித்துவம் எனும் முதலைகளை வேட்டையாடும்.


12. மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.


13. விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம்.


14. எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.


15. இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும், வெறுப்பும் நீ குமறியெழுவாயானால் அதுவே விடியலின் அடையாளம்.


16. எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.


17. புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல, நாம்தான் அதை விழச் செய்ய வேண்டும்.


இதுபோல் பல புரட்சியாளர்களின் பொன்மொழிகளை படிக்க,


பிரபாகரன் பொன்மொழிகள் | Prabagaran tamil quotes

Abraham Lincoln quotes in tamil | ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

அண்ணாதுரை பொன்மொழிகள் | C. N. Anadurai quotes in tamil

கருணாநிதி பொன்மொழிகள் | kalaignar quotes in tamil

பகவத் கீதை பொன்மொழிகள் | bhagavad gita quotes in tamil


கருத்துரையிடுக

0 கருத்துகள்