கணவன் மனைவி கவிதை | Husband and wife quotes in tamil

0

Husband and wife quotes in tamil - இந்த பதிவில் கணவன் மனைவி உறவின் பாசத்தை பற்றிய கவிதை வரிகளை இப்பொழுது காணப் போகிறோம்.


  • கணவன் மனைவி காதல் கவிதைகள்
  • Husband and Wife Love kavithai in Tamil
  • கணவன் மனைவி பாசம்
  • Husband wife pirivu kavithai in Tamil
  • கணவன் மனைவி சண்டை கவிதைகள்

husband and wife quotes in tamil


கணவன் மனைவி கவிதைகள் | husband and wife quotes in tamil


தேவதையை போல எனக்குள்ளே அவள் வந்தாள் நெடுந்தூர பயணத்தை தொடங்கி வைத்தாள்.


தாயின் அன்பு வளரும் காலமே மனைவியின் அன்பு நெடுந்தூர பயணம் மனதில் தொய்வு என்பதே இல்லை.


துன்பங்களைத் தாங்கும் மருந்தாகவும் இன்பங்களை வாரி கொடுக்கும் இணையாகவும் கிடைத்த உறவு மனைவி மட்டுமே.


வெளியில் முறைப்பதும் உள்ளுக்குள் அணைப்பதும் கணவனின் உண்மையான அன்பால் மட்டுமே.


வயதுகள் நூறு கடந்தாலும் தலை முடி நரைத்தாலும் கணவன் மனைவி பந்தத்தில் முளைத்த அன்புக்கு மட்டும் வயதுகள் என்பதே கிடையாது.


நம்மிடம் எதையும் எதிர்பார்த்து இருப்பதில்லை மனைவியின்  உறவு அன்பை மட்டும் கொடுத்தால் போதும் தன் வாழ்நாள் வரையிலும் வேலைக்காரியாய் இருப்பாள்.


நோய் என்று படித்தால் உன் வழியாகவும் துன்பம் என்று வந்தால் அதைத் தாங்கும் இதயமாகவும் உன்னை தாங்கிப் பிடித்தவள் மனைவி மட்டுமே.


தந்தையின் அன்பு போல கணவனின் அன்பு உண்மையானது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற துடிப்பவன் கணவன் மட்டுமே.


கருவறையை சுமக்கும் தாய் போல அவள் நெஞ்சில் எனை சுமந்தாள்! ஆயுள் வரைக்கும் என்னை சுமக்க பல தியாகங்களையும் விட்டாள் என் ஆருயிர் மனைவி!


கேட்காமல் கொடுப்பது தந்தையின் குணம் எதையும் யோசிக்காமல் செய்வதை கணவனின் மனம் இவை இரண்டு உறவுகளுக்கும் வேறுபாடுகள் இல்லை.


உன் நிழல் கூட உன்னை விட்டு பிரியலாம் உன் உடல் கூட மண்ணைவிட்டு மறையலாம் ஆனால் உன் மனைவியின் எண்ணங்கள் மட்டும் உன்னை விட்டுப் பிரியாது.


எத்தனையோ பாரங்களை சுமந்து அத்தனையும் சுகங்களாக மாற்றி தன்னையே தொலைத்து நிற்பவள் மனைவி மட்டுமே.


அவள் உதிரத்தில் முளைக்காத பூவாக நான் இருக்கலாம்! என்னாளும் எனை வேற்றுமையாய் அவள் பார்த்ததே இல்லை!


வடதுருவம், தென்துருவமாய் தாங்கி என்னை பிடிப்பவன்! என் நிழல் போல எப்பொழுதும் கூடவே நின்று கடவுளாக எனை காப்பவன் என் கணவன்!


கோபப்பட்டு நான் பேசினாலும் குழந்தை போல் அடுத்த நிமிடமே மாறிவிடுவாள்! கோயிலுக்கு அவள் சென்றாலும் என் நலனையே வேண்டிவிடுவாள்!


என் தாய்க்கும் என் மனைவிக்கும் வேறுபாடு தெரியவில்லை இரண்டு இதயமும் எனக்காக வந்த தெய்வங்கள் தான் என நினைக்கிறேன் நான்.


எத்தனை கனவுகள் எனக்குள்ளே முளைத்தாலும் தடை போடாமல் என்னை எப்பொழுதுமே கை கொடுத்து நிற்க வைப்பான் என் கணவன்.


தினம் ஒரு படிகளை சிறுக சிறுக கட்டி வைத்தாள் அதில் என்னை நடக்க வைத்து சிகரத்தை தொட வைத்தவள் என் மனைவி.


புன்னகை பூ போல சிரித்து என்னை அரவணைப்பாள் ஆசைகளை எல்லாம் அடி நெஞ்சில் ஒளித்து வைப்பாள் எனக்காக மட்டுமே.


நான் உண்ட பின்பு அவள் உண்டு தினம் கழிப்பாள்! அவள் நேசம் நான்தான் என்று எனக்குள்ளே ஒழிந்து இருப்பாள் என் உயிராக!


இரு உயிராய் நாங்கள் பிரிந்து இருந்தாலும் என்னாளும் எனை விட்டு அவள் பிரிந்து இருக்க மாட்டாள் என்னை கண்ட பின்புதான் பெருமூச்சு விட்டு உறங்கச் செல்வாள் என் அன்பு மனைவி.


இதுபோல் பல அழகான மற்றும் உறவுகளை பற்றிய கவிதைகளை படிக்க,


Tamil Amma Kavithai | அம்மா கவிதைகள்

அன்பு கவிதை வரிகள் | Anbu Kavithai Tamil

இயற்கை கவிதை | Nature quotes in tamil

கல்வி கவிதைகள் | Kalvi kavithai in tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்