Albert Einstein quotes in tamil | ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்

Albert Einstein quotes in tamil – இந்தத் தொகுப்பில் உலகிலுள்ள மாபெரும் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் பொன்மொழிகளை இப்பொழுது காண போகிறோம்.

Albert Einstein quotes in tamil

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் | Albert Einstein quotes in tamil

1. தொழில்நுட்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம் முட்டாள்களால் நிறைந்திருக்கும்.

2. அறிவை விட கற்பனை முக்கியமானது. அது, நம்மை உறுதியாக நம்ப வைத்து இருபது மடங்கு ஆற்றலுடன் இலட்சியத்தை அடையச் செயல் வீரராக உருவாக்கிவிடும் சக்தி படைத்தது.

3. தனி மனிதனின் தனி உரிமையான சிந்தனையால் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை.

4. இந்த உலகம் அபாயகரமான இடம். தீங்கு, தீமை செய்பவர்களால் அல்ல. ஆனால் இவர்களைப் பார்த்து கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களே அவர்களால்தான்!

5. வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.

6. தேடுதலும், உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற விடாமுயற்சியும் தெளிந்த அறிவும் உங்களை உயர்ந்தோனாக்கிக் காட்டும்.

7. அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.

8. பள்ளியில் தான் கற்ற அனைத்தையும் மறந்துவிட்ட பின்பும் ஒருவனிடம் எஞ்சியிருப்பது எதுவோ, அதுவே உண்மையில் அவன் கற்ற கல்வி.

9. மனிதன் நிச்சயமாக ஒரு முழுப் பைத்தியக்காரன்தான் அவனால் ஒரு புழுவைக்கூட உண்டாக்க முடியாது. ஆனால் டஜன் கணக்கில் கடவுளை உண்டாக்கிக் கொண்டேயிருப்பான்.

10. துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.

11. ஒரு செயலைச் செய்யும்போது உண்டாகும் தடை, அடுத்த முயற்சிக்கான ஆரம்பம்.

12. சிறு செயல்களிலும் உண்மையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.

13. அறிவை ஆனந்தமாக போதிக்க கற்றவனே அற்புதமான ஆசிரியன்.

14. எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

15. ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால், அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம்.

16. மரம் ஏறுவதுதான் தேர்வுமுறை என்றாகிவிட்டால், மீன்கள் அதில் தோற்றுப்போகும்; வாழ்நாள் முழுவதும் தாம் முட்டாள் என்ற என்னத்துடனேயே அவை வாழ்ந்து மடியும்.

17. படித்தவர்கள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் நல்லவர்கள் தேவைப்படுகிறார்கள் நல்ல தன்மையில்லாத அறிவாளியினால் தொல்லைகளே விளையும்.

18. மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது.

19. நாம் இந்தியாவுக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம். எண்களைக் கொண்டு எண்ணச் சொல்லிக் கொடுத்தவர்கள் அவர்கள்தாம். அது இன்றி நாம் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளையெல்லாம் கண்டுபிடித்திருக்க இயலாது.

20. இயற்கையை ஆழ்ந்து நோக்குங்கள். பிறகு எல்லாவற்றையுமே நீங்கள் சிறப்பாகப் புரிந்து கொள்வீர்கள்.

21. கடவுள் நிச்சயம் புத்திசாலி. ஆனால் அவன் ஒரு போதும் நேர்மையற்றவனாக இருந்ததில்லை.

22. வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றிமீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிட அனுமதிக்கக்கூடாது.

23. சிறந்த பல சிந்தனைகள் தோன்றத் துணை புரிவது தனிமை தான். தனிமையான சூழ்நிலையில் தரமான எண்ணங்கள் தோன்றக்கூடும். இனிய எண்ணங்களின் விளைவாக நல்ல பல செயல்கள் மலரும்.

24. ஒரு விஷயம் ஆழமாக பார்க்கப்படுவதால் மட்டுமே அதனைப்பற்றிய முழுமையான புரிதல் உண்டாகிறது.

25. ஒருவன் நன்றாக முன்னால் தாண்டிக் குதிக்க வேண்டும் என்றால், அதற்காகப் பின்னாலும் போகத்தான் வேண்டும்.

26. அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள்.

27. மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்தான்.

28. மனிதனாகப் பிறந்தவன் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திக்கச் சிந்திக்க மனிதனின் எண்ணங்கள் உருப்பெற்றுச் சிறப்படையும் சிந்திப்பது மனிதனுடைய தனி உரிமை சிந்திக்கத் தெரிந்தவனே மனிதன் அறிவாளி.

29. எண்ணக்கூடியனவெல்லாம் எண்ணத்தகுந்தனவல்ல. எண்ணத்தகுந்தனவெல்லாம் எண்ணக்கூடியனவல்ல.

30. அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது.

31. புத்தி கூர்மையின் உண்மையான அறிகுறி அறிவு சம்பந்தப்பட்டதல்ல, அது கற்பனைத்திறனுடன் தொடர்புடையது.

32. கல்வியின் மதிப்பு அதிக தகவல்களை கற்றுக் கொள்வதல்ல; ஆனால் பாடப்புத்தகங்களிலிருந்து கற்றுக் கொள்ள முடியாதன பற்றி எண்ணுவதற்கு மனத்திற்குப் பயிற்சியளிப்பதாகும்.

33. ஒரு பிரச்சினை எந்த வழியில் ஏற்பட்டதோ, அதே வழியில் அதற்கான தீர்வைப்பற்றி யோசிக்கும்போது நம்மால் அதை தீர்க்கமுடியாது.

34. எந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும். ஆனால், ஒரு மேதையால் மட்டுமே அவற்றை எளிதாகச் செய்ய முடியும்.

35. முட்டாள்களுக்கும் மேதைகளுக்கும் உள்ள வித்தியாசம், மேதைகள் எப்போதும் அவர்களின் எல்லை என்னவென்று அறிந்தவர்கள்.

இதுபோல் பல அறிவியலாளர்களின் பொன்மொழிகளை படிக்க,

Elon musk quotes in tamil | எலான் மஸ்க் பொன்மொழிகள்

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள் | George bernard Shaw quotes in tamil

Abraham Lincoln quotes in tamil | ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

Leave a Comment