Husband and wife jokes in tamil | கணவன் மனைவி ஜோக்ஸ்

Husband and wife jokes in tamil – இந்த தொகுப்பில் கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் ஜோக்குகளை காணப்போகிறோம்.

Husband and wife jokes in tamil

கணவன் மனைவி ஜோக்ஸ் | Husband and wife jokes in tamil

1. கணவன் : உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?

மனைவி : உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?

கணவன் : ?????

2. கணவன் : உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?

மனைவி : நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்.

3. கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல் தான் பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்..

கணவன்: ?????

4. கணவர் : டாக்டர்… என் பொண்டாட்டி அவசரத்துல பெப்சின்னு நினைச்சிட்டு பெப்சி பாட்டில்ல இருந்த பெட்ரோல குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர் ?

டாக்டர் : ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போயிடும்..

கணவர் : ???

5. மனைவி: ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்-னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க.

கணவர்: அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட.

மனைவி: ????????

6. மனைவி: அன்பே.. இன்று நமது கல்யாண நாள். எப்படி கொண்டாடுவது?

கணவன்: 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்..

மனைவி: ??????????

7. கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே.. என்ன போட்ட?

மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.

8. கணவன்: வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல.

மனைவி: தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே.

9. கணவன்: குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா?

மனைவி: இல்லே, அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் சாப்பிட்டுகிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் சாப்பிட்டாரு அதான்.

கணவன்: ???

10. கணவன்: அரைமணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?

மனைவி: எனக்கு கரடி பாசை புரியலேன்னு அர்த்தம்.

11. மனைவி : ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு மறந்திட்டேன்… கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க..! 

கணவன் : பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி…! 

மனைவி : ???

12. மனைவி : ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?

கணவன் : வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தறே, பேசாம உன் தங்கச்சியை வரவழைச்சிடு!

மனைவி : ???

13. மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க ?

கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு.

14. மனைவி : நான் பொங்கல் வெச்சதும் எங்கே கிளம்பிட்டீங்க?

கணவன் : போய் கலெக்டர்கிட்ட நம்ம வீட்டை வெல்லம் (வெள்ளம்) பாதித்த பகுதியா அறிவிக்கணும்-னு ஒரு மனு தந்துட்டு வந்துடறேன்..!

மனைவி : ????

15. மனைவி : மாட்டுப் பொங்கல் அன்னைக்கு நம்ம மாட்டுக்கு என் கையால நானே பொங்கல் பண்ணி ஊட்டி விடணும்ங்க?

கணவன் : நமக்கு நல்லது செய்யற வாயில்லா ஜீவனுக்கு நீ செய்யற பதில் நன்றி இதுதானா ?

மனைவி : ????

16. கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?

மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி சொல்றீங்க..!

17. மனைவி: என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?

கணவன்: நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.

மனைவி: ????

18. மனைவி : எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க ?

கணவன் : ஏன் உனக்கு சொல்லணும் ?

மனைவி : நீங்கன்னு நெனச்சு, அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்.

19. மனைவி: ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்ல எப்படி சொல்லுவாங்க??

கணவன்: Unmarried-னு சொல்லுவாங்க…

மனைவி: யோவ் நில்லுய்யா ஓடாத!!

20. மனைவி: நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க.

கணவன்: அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை பத்திரமா இருக்கும்.

Husband and wife jokes in tamil

21. மனைவி: என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க??

கணவன்: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.

மனைவி: ????

22. மனைவி : வர வர நீங்க இளைச்சிக்கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க.

கணவன் : நீ என்ன சொன்னே? 

மனைவி : ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு, வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்-னு சொன்னேங்க.

23. மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!

கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!

24. மனைவி: உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல.

கணவன்: வேற என்னதான் போட்ட?

மனைவி: பேசாம பட்டிணி போட்டேன்.

25. மனைவி: உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு.

கணவன்: எப்படி சொல்ற?

மனைவி: சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே.

26. மனைவி : கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க? 

கணவன் : ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!

27. மனைவி : ஒரு மணி நேரமா ரூம்ல எதையோ தேடிக்கிட்டு இருக்கீங்களே பேசாமல் கண்ணாடியை போட்டுட்டு தேட வேண்டியது தானே?

கணவன் : அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.

மனைவி : ???

28. மனைவி : குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு டாக்டரைக் கேளுங்க.

கணவன் : அவரை எதுக்கு கேட்கணும் ?

மனைவி : டாக்டரை கேட்காம இந்தக் குழந்தைக்கு எதுவும் தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க.

29. மனைவி : நேத்து மூக்குப்பிடிக்க சாப்பிட்டிங்களே, அதே சாம்பார்தான் இன்னிக்கும்.

கணவன் : சரி, இன்னிக்கு மூக்கைப் பிடிச்சுட்டு சாப்பிடறேன்.

30. கணவன்: ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற?

மனைவி: நீங்க தானே சொன்னீங்க! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!

31. கணவன் : சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே ?

மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.

32. கணவன் : லதா… எதுக்கு நீ வெள்ளிக்கிழமை மட்டும் ரொம்ப ருசியா சமைக்கிற?

மனைவி : அன்னைக்கு தானே உங்கம்மா சாப்பிடாம விரதம் இருக்காங்க!

இதுபோல் பல ஜோக்ஸ் கலை படிக்க வேண்டுமா? கீழே உள்ளது,

சந்தானம் காமெடி | Santhanam Comedy in tamil

மொக்க ஜோக்ஸ் | Mokka jokes in tamil

கடி ஜோக்ஸ் | Kadi jokes in tamil

Leave a Comment