கடி ஜோக்ஸ் | Kadi Jokes in Tamil with Answer

Kadi jokes in tamil – இந்த தொகுப்பில் தமிழிலுள்ள சிறந்த கடி ஜோக்களை தான் காண போகிறோம். வயிறு குலுங்க குலுங்க சிரிக்க தயாராகுங்கள், சரி கடி ஜோக்ஸ்களை பார்க்கலாம்.

kadi jokes in tamil

கடி ஜோக்ஸ் | Kadi Jokes in Tamil with Answer

1. வாடிக்கையாளர்: சார், ஆறு வருஷத்துல நீங்க போட்ட பணம் இரட்டிப்பாகும்னு சொன்னீங்களே என்ன ஆச்சு?

வங்கி ஊழியர்: இரட்டிப்பாகும்னு தானே சொன்னோம் திருப்பித் தர்றதா சொல்லலையே!

2. கடைக்காரர்: சார், இந்த பேண்ட் 10 வருஷமானாலும் சாயம் போகாது, கிழியாது.

வாடிக்கையாளர்: அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?

கடைக்காரர்: 10 வருஷமா நம்ம கடைலதான இருக்கு.

3. வாடிக்கையாளர்: இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை? 

கடைக்காரர்: பத்து ரூபா. 

வாடிக்கையாளர்: லூசுன்னா எவ்ளோ?

கடைக்காரர்: எல்லாருக்கும் ஒரே விலை தான்பா.

4. தரகர்: பொண்ணுக்கு என்ன வயசு ஆகுது?

அப்பா: ஆடி வந்த 18 முடியுது.

தரகர்: அப்போ ஆடாம வந்தா?

5. பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?

பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி வைக்கணும்!

பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரேன்.

6. ஒருவர்: எனக்கு ஏதாவது லெட்டர் வந்திருக்கா?

தபால்காரர்: உங்க பேர் என்ன?

ஒருவர்: அதுதான் லெட்டர் மேலேயே எழுதியிருக்குமே!

7. வக்கீல்: எதுக்காக எடிட்டரை தாக்குனீங்க?

குற்றவாளி: தலையங்கத்துல அவரு எங்க தலைவரை தாக்குனாரு, பதிலுக்கு அவர் தலை அங்கத்தை நாங்க தாக்குனோம்.

8. ஓட்டல்காரர் : 2005 ஆம் வருடத்திலேயே சுத்தமான ஓட்டல்னு பாராட்டுப் பெற்ற ஓட்டலாக்கும் இது.

வந்தவர் : அதுக்கப்புறம் சுத்தம் செய்யவே இல்லையோ.

ஓட்டல்காரர் : ???

9. கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது இரண்டு வரம் கேள்?

பக்தன் : நான் தூங்கும்போது சாக வேண்டும்.

கடவுள் : ஆகட்டும். மற்றொரு வரம்?

பக்தன் : எனக்கு தூக்கமே வரக்கூடாது.

கடவுள் : ??

10. ஒருவர் : உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

மற்றவர் : அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான் அதான்?

ஒருவர் : ??

11. அப்பா : மகளே, முன்னாடி நீ என்னை அப்பானு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே.. ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற?

மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலஞ்சிடும் டாடி அதான்.

அப்பா : ???

12. மகன் : அப்பா எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்!

அப்பா : அது என்னடா தெய்வீகக் காதல்?

மகன் : என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!

13. தந்தை : டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?

மகன் : ஏம்பா அப்படின அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?

தந்தை : ???

14. அப்பா : ஏண்டா பார்முலா-லாம் விரல்ல எழுதி வச்சுருக்க.

மகன் : எங்க ஆசிரியர் தான் சொன்னாங்க பார்முலா-லாம் ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு.

அப்பா : ???

15. அப்பா : ஆண்டவன் கிட்ட எனக்கு நல்ல புத்தியக் கொடுன்னு வேண்டிகடா.

பையன் : ஆண்டவா! எங்கப்பாவுக்கு நல்ல புத்தியக்கொடு.

16. மாமனார் : மாப்பிள்ளைக்கு காது கேக்காதுங்கற விஷயம் தலை தீபாவளி அன்னிக்குத்தான் தெரிஞ்சது!

அத்தை : எப்படி?

மாமனார் : இந்த வருஷம் தீபாவளிக்கு ஏன் யாருமே பட்டாசு வெடிக்கலைன்னு கேட்டாரு!

17. மகள் : Valentine’s Day அப்படினா என்னம்மா?

அம்மா : எதுக்கு நீ கேக்குற?

மகள் : காலையில அப்பா யாருக்கோ போன் பண்ணி Valentine’s Day வாழ்த்துகள்-னு சொன்னாரே.

18. அப்பா: உலகத்துலயே காசுதாண்டா முக்கியம் காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.

மகன்: ஏன் கடன் வாங்கலாமே! 

19. அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

20. ஒருவர் : டேம்ல வேலை பார்க்கிறவரோட பெண்ணைக் கட்டினது பெரிய வம்பாப் போச்சுன்னு சொல்றீயே ஏன்?

மற்றவர் : தினமும் ஐந்தாறு கன அடி கண்ணீர் விடுறா?

ஒருவர் : ???

22. சுரேஷ்: உங்க மனைவிக்கு நாய் கடிச்சதா கேள்விப்பட்டேன் நீங்க முதல்ல என்ன செஞ்சீங்க?

ரமேஷ்: உடனே அந்த நாய்க்கு பிரியாணி வாங்கி போட்டேன்.

சுரேஷ்: ???

23. ராமு : அவன் தான் அவங்கவீட்டுல கதவுமாதிரி?

சோமு : அது என்னடா கதவுமாதிரி?

ராமு : அவன வீட்ல யார்வேணாலும் போட்டு சாத்து சாத்துன்னு சாத்துவாங்க!

24. நபர் 1 : கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி!

நபர் 2 : நீ பரவாயில்லே என் மனைவி என்னை அடிச்சுத் தீர்த்துடறா!

25. பக்கத்துவீட்டுகாரர் : உங்க வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?

ராமு : மனைவி என்மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன்! பட்டதுன்னா அவள் சிரிப்பா.

26. திருடன் : திருடுவியா திருடுவியான்னு போலீஸ் அடி பின்னிட்டாங்க.

நண்பன் : அப்புறம்?

திருடன் : திருடுறேன்னு உறுதியா சொன்னப்புறம் தான் விட்டாங்க.

மரண ஜோக்ஸ் Kadi jokes in Tamil for students

27. நண்பர் 1 : மேனேஜர் இன்னிக்கு மதியத்துக்கு மேலதான் ஆபீஸ் வருவார்னு எப்படிச் சொல்றே?

நண்பர் 2 : காலையில 6 மணிக்கு நான் வாக்கிங் போகும்போது, அவர் ஏ.டி.எம் வரிசையில் நின்னுட்டு இருந்தாரே.

நண்பர் 1 : ???

28. தோழி 1: சொன்னதெல்லாம் கேக்கற நாய் ஒண்ணு வளர்த்தியே இப்ப எங்கேடி அது காணோம்!

தோழி 2: எனக்குத் தான் இப்ப கல்யாணம் ஆயிடுச்சே அதனால அதை வித்துட்டேன்!

29. ராமு: சார், ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?

சோமு: நோயோடதான்!

ராமு: ??????

30. சோமு: டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!

ராமு: என்னிடம் சுத்தமா இல்ல.

சோமு: பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

31. நண்பர் 1 : உன் மகனுக்குத் திருமண ஆசை வந்துடுச்சின்னு எப்படிச் சொல்றே?

நண்பர் 2 : முகூர்த்த நாளெல்லாம் காலண்டர்ல பெரிய வட்டம் போட்டு வைச்சிருக்கானே!

நண்பர் 1 : ????

34. நண்பர் : டாக்டர் உன்னை எதுக்குத் திட்டறாரு?

பெயிண்டர் : “மீண்டும் வருக”ன்னு போர்டு எழுதச் சொன்னாரு. நான் “மீண்டு வருக”ன்னு எழுதிட்டேன். அதான்.

Love Kadi Jokes Tamil

35. கணவன் : கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் சங்கு சக்கரம் சுத்தமாட்டேங்குது!

மனைவி : முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க அது கொசுவத்திச் சுருளு!

36. கணவன் : நீ தான் எனக்கு மனைவியா வருவன்னு எங்க ஸ்கூல் மிஸ் அப்பவே சொன்னங்க.

மனைவி : எப்படி சொன்னாங்க.

கணவன் : பண்ணி மேய்க்க தான் நீ லாயக்குன்னு சொன்னங்க.

37. ராமு : காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?

சோமு : அவங்க “மெய்” மறந்து காதலிக்கிறவங்களாச்சே!

ராமு : ????

38. சுரேஷ் : நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்.

ரமேஷ் : அப்புறம்?

சுரேஷ் : களைப்பா வந்திருப்பீங்க காபியோட வரேன்னு குரல் கேட்டது. சரி, இது நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டு வெளிய வந்துட்டேன்.

39. நீதிபதி : நகைகளை திருடியதாக உன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்.

குற்றவாளி : அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சார்?

நீதிபதி : ????

40. நீதிபதி : நீ தங்கத்தைக் கடத்தியது உண்மைதானா?

கைதி : ஆமாங்க.

நீதிபதி : எத்தனை கிலோ தங்கத்தை கடத்தினாய்?

கைதி : அவள் எடை எனக்குத் தெரியாதுங்க!

41. நீதிபதி : என்ன! நீ திருடுனதுக்கு அவர் எழுதின கதைதான் காரணமா? அப்படி கதையப் படிச்சுட்டு என்ன திருடுன?

குற்றவாளி : அவர் எழுதின கதையத்தான்.

நீதிபதி : ????

42. நீதிபதி: உங்க காலு‌க்கு‌க் ‌கீழயே வெடிகுண்டு இருந்து‌ம் எப்படி சு‌ம்மா இருந்தீங்க?

காவல‌ர்: தொந்தி மறச்‌சிடிச்‌சி சார் அதனால தெரியாம போச்சு.

43. நீதிபதி: ஏம்மா அவரை உலக்கையாலே அடிச்சுக் கொன்னே?

பெண்: உரலைத் தூக்க முடியல்ல சாமி!

44. நீதிபதி: பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.

குற்றவாளி: ஹி ஹி  பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.

45. பேரன்: தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!

தாத்தா: அப்ப.. நீ படிச்சா கிடைக்காதா?

பேரன்: ????

46. மன்னர் : எதிரி நாட்டு மன்னனை வென்று நாம் புதிய புவியியல் படைப்போம்!

அமைச்சர் : மன்னா! அது புவியியல் இல்லை.. வரலாறு?

மன்னர் : யோவ்.. விடய்யா! ஒரு ப்ளோவுல ரைமிங்கா வந்துடுச்சி!

47. மன்னர் : புலவரே! என்னை புகழ்ந்து ஒரு உலா எழுதுங்களேன்!

புலவர் : உங்களை வைத்து பீலா வேண்டுமானால் எழுதலாம் உலாவெல்லாம் முடியாது மன்னா!

48. டிரைவர்: சாரி சார், பெட்ரோல் சுத்தமா தீர்ந்து போச்சு.. இனிமேல் ஒரு அடி கூட முன்னால நகராது.

ஓனர் : சரி ரிவர்ஸ் கியர் போட்டு எடு, அப்படியே வீட்டுக்கு போய்டலாம் !

டிரைவர்: ????

49. கடைக்காரர்: வாங்க வாங்க! இந்தத் துணி கிழியவே கிழியாது, வாங்கிப் பாருங்க!

வாடிக்கையாளர் : அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே, எப்படி கிழிப்ப?

கடைக்காரர் : !!!?

50. வீட்டுக்காரம்மா : என் புருஷன் எனக்குத் தெரியாமல் எதுவுமே செய்ய மாட்டார் டீ.

வேலைக்காரி : அப்ப என்னை சினிமாவுக்கு அழைச்சிட்டுப் போனதைக் கூட சொல்லிட்டாங்களா?

வீட்டுக்காரம்மா : !!..

51. வி‌ஞ்ஞா‌னி : ஞாபக மற‌தி‌க்கு ஒரு மா‌த்‌திரை க‌ண்டு ‌பிடி‌ச்‌சினே அது எ‌ப்படி இரு‌க்கு?

உத‌வியாள‌ர் : அட ‌நீ‌ங்க வேற… அத சா‌ப்‌பி‌ட்டவ‌ங்களு‌க்கு எ‌ல்லா‌ம் போன ஜ‌ெ‌ன்ம‌த்து ஞாபக‌ம் எ‌ல்லா‌ம் வருதா‌ம்.

52. மனிதன்: ஏன் பெண்ணை அழகாக படைத்தாய்? 

கடவுள்: நீ அவளை காதலிக்க வேண்டுமென்பதற்காக.

மனிதன்: பிறகு ஏன் அவர்களை முட்டாள்களாக படைத்தீர்கள்? 

கடவுள்: அவர்கள் உன்னை காதலிக்க வேண்டுமென்பதற்காக.

53. நடிகர்: ஒரு வாட்ச் வேண்டும்.

வாட்ச் கடைக்காரர்: இந்தாங்க சார்.

நடிகர்: இந்த வாட்ச் நல்லா ஓடுமா.

வாட்ச் கடைக்காரர்: உங்க படத்தை விட நல்லாவே ஓடும்.

54. இல்லத்தரசி: ஏண்டி அவர்தான் ஆம்பளை அப்படி நடந்துகிட்டாரு நீ என் தடுக்கலை?

வேலைக்காரி: நீங்கதானே நாங்க சொல்றதை எல்லாம் தட்டாம கேட்டு நடந்தா சம்பளம் சேத்து தாரேன்னு சொன்னீங்க.

Kadi Jokes Tamil Images – இது போல் மேலும் வயிறு குலுங்க சிரிக்க பல ஜோக்ஸ்களை பிடியுங்கள்,

Leave a Comment