Feb 6, 2021

Anbu Kavithai in tamil | அன்பு கவிதைகள் வரிகள்

Anbu kavithai in tamil - இந்தப் பதிவில் நம் வாழ்க்கையில் முக்கியமான பங்களிக்கும் உண்மையான அன்பு பற்றிய கவிதைகளை தான் காண போகிறோம்.


Anbu kavithai in tamil


அன்பு பற்றிய கவிதை வரிகள் | Anbu kavithaigal in tamil


செடியில் பூத்த மலர் மண்ணில் உதிர்ந்து போகும் ஆனால் உன் மனதில் பூத்த அன்பு என்றும் உதிர்வதில்லை.


அழகை பார்த்து காதலித்து விடாதீர்கள் இளமையில் மோகமே அழகாக தெரியும் முதுமையில் அன்பு தான் எல்லாமுமாய் தெரியும்.


அன்பு எவ்வளவு கிடைத்தாலும் சலிக்காது! வெறுத்தாலும் விட்டு விலகாது!


அன்பு கோபத்திலும் குறையாதது சாகும் வரையிலும் விடாதது.


தூய்மையான அன்பு பனவெல்லம் போன்றது திகட்டத் திகட்டத் என்றாலும் சுவை மாறாது.


உண்மையான அன்பு மலைகளில் தோன்றும் அருவி போல ஆயிரம் கசப்பான செடிகளை சுமந்து வந்தாலும் அனைத்தும் மூலிகையை ஒருமுறை பழகினால் போதும் பாசம் மாறாமல் உன் பின்னால் வரும் உயிரினங்களின் அன்பு.


அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு அதை பெற்றாலும் கொடுத்தாலும் மகிழ்ச்சியே.


அன்பு கிடைத்த அவர்களுக்கு பொக்கிஷம் அன்பை இழந்தவர்களுக்கு தேடும் புதையல்.


நேசம் போன்று நடிப்பவர்களின் நடிப்பிற்கு அன்பின் நாமங்களை சூடாதீர்கள். அவர்கள்  அன்பின் எதிரிகள், அன்பின் கொலைகாரர்கள்.


அன்பு நினைவுகளை இனிதாக்கும் சந்தோசம் மனதை உருக்கும்.


அன்பே  வீட்டோடத விழுது ஆகும் நிழல்தரும் நிஜமாகும்


அன்பே எதிர்பாராதது எதிர்திசை ஏற்கும் ஏக்கம் எனும் தாகம் தணிக்கும்.


அன்பே வெறுப்பை உண்டு உரமாக்கும் புன்சிரிப்பு நம் முகத்தில் அன்பால் பூக்கும்.


அன்பு மேடு பள்ள உலகை நேராக்கும் பிரிவில்லா புரிதல் கொள்ளும்.


அன்பை கொடுக்கும் மனம் கொண்டால் இரக்கமும் நம் இயல்பாகும்.


விதைக்கும் விதையே அன்பான நாள் நாளை மலரும் தலைமுறையிலும் அன்பே சிவமாகும்.


அன்பு என்னும் புத்தகத்தின் முடிவுரை, பெரும்பாலும் பிரிவாகத்தான் இருக்கிறது.


அன்பின் வடிவம் பல கோணத்தில் வரலாம்

ஆனால், உன்மையான அன்பு 

உருவத்தில் உருவாகுவதில்லை உள்ளத்தால் உருவாகுவதே.


வாழ்க்கைக்கு தேவை பணமோ பொருளோ அல்ல

புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காத மற்றும் விட்டு விலகாத உண்மையான அன்பு மட்டுமே.


ஒருவரின் அன்பு வண்ணத்து பூச்சியை போலத்தான் வலுக்கட்டாயமாக விரட்டி பிடிக்க நினைத்தால் அது பறந்துவிடும் இல்லை இறந்துவிடும். சீண்டாமல் ஒதுங்கி நின்றால் அதுவே உன் தோள்களில் வந்து அமரும்.


நீங்கள் என்னை வெறுத்தால் நானும் வெறுப்பேன், நீங்கள் என்னை துரத்தினால் நானும் துரத்துவேன், நீங்கள் என்னை மறந்தால் நானும் மறப்பேன், ஆனால் மறு ஜென்மம் என்று ஒன்றிருந்தால், அங்கும் உங்களை தேடி வந்து தொல்லை பண்ணுவேன், 

காலம் தான் தோற்குமே தவிர என் அன்பு தோற்காது.


அன்பு கொண்ட அனைவரும் விலகிச் செல்வதால், சில நேரம் நேசிப்பவர்களிடம் அன்பை சொல்ல கூட அச்சம் வருகிறது, சொன்னால் பிரிந்துவிடுவார்களோ என.


வாழ்வில் அனுபவம் ஒருவனை எப்படி வேணாலும் மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றுகிறது.


அன்பு இருக்கும் உள்ளம் எப்போதும் அமைதியுடன் இருக்கும் அன்பு மட்டுமே யாரையும் காயப்படுத்தாத அனைவரையும் வீழ்த்தக் கூடிய ஆயுதம்.


அன்பை உணர வேண்டுமானால் முதலில் உண்மையாக இருக்க வேண்டும்! உண்மை இல்லாத உள்ளத்தில் அன்பு என்பது வெறும் நாடகமே!


அவளுக்கு பிடிக்காததை ஒன்று செய்து விட்டேன். அதனால் என்னை விட்டு சென்றுவிட்டாள் அவளுக்கு பிடிக்காதது அதிகமாய் அன்பு வைப்பது.


நாம் விலகினாலும் தேடி வந்து பேசும் சில அன்பான உள்ளங்களுக்கு தேவைக்காக பழகும் சுயநலம் ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை அன்பு ஒன்றே இலக்காக.


அன்பு வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது அதுவும் அளவோட இருக்கனும் இல்லை என்றால் அதுவும் நஞ்சு தான்.


கள்ளமில்லா நல்ல அன்பு வேண்டுமென்றால் 

நாட வேண்டிய ஒரே இடம் 

குழந்தைகளிடம் மட்டுமே.


வேண்டாம் என்று வெகுதூரம் நாம் விலகிச்சென்றாலும் மீண்டும் விட்ட இடத்திற்கே நம்மை அழைத்து வந்து விடுகிறது ஒரு சிலரின் அன்பு.


குணம் மாறா அன்பு புரிதலுடன் விட்டுக் கொடுக்கும் போது ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத அன்பு வளர்கிறது பேரன்பாக.


நடிக்க தெரியாத அன்பில் அதிகம் இருப்பது கோபமும், சண்டையும் தான்.


அன்பு ஒரு திரவம் கொதிப்பவர்களிடம் ஆவியாகிவிடுகிறது, குளிர்கிறவர்களிடம் உறைந்துவிடுகிறது.


அன்பை கொட்டவும் அக்கறை காட்டிடவும் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனம் ஏங்குவதென்னவோ விரும்பி சிறைபட்ட அந்த ஒற்றை இதயத்திடம் மட்டுமே.


நாம் இந்த உலகத்தில் தங்கி செல்லும் காலத்திற்கான வாடகை, மற்றவர் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே.


சிலரின் போலி அன்பு  என்ற காகித கப்பல்களை உருவாக்கி கொண்டு இருக்கிறேன் அவை மூழ்கிவிடும் என தெரிந்தும்.


உண்மையான அன்பு கிடைக்கும் போது அதன் மதிப்பு தெரியாது அப்படி பட்ட உண்மையான அன்பை தேடும் போது தான் அதன் மதிப்பு தெரியும்.


உலகில் விலை 

மதிப்பில்லாத விஷயங்கள் இரண்டு உண்டு, ஒன்று தாய்மையில் உருவாகி 

மரணம் வரை தொடரும்

அன்பு இன்னொன்று, எதையும் எதிர்ப்பாக்காம

மற்றொருவர் மீது நாம்

வைக்கும் நம்பிக்கை.


தூக்கியெறிந்த பிறகும் தூற்ற மனம் வருவதில்லையெனில் உங்களின் அன்பு உண்மையானது தான்.


அதிகாரத்தால் விலைக்கு வாங்க முடியாததில் முதன்மையானது பெண்மையின் அன்பு.


அறியா வயதில் அன்பை பற்றி அனைவருமே அதிகம் அறிந்திருப்போம்.


முக்கியத்துவம் இருப்பதால் அன்புக்காட்ட வேண்டாம், அன்பு வைத்தப்பிறகு முக்கியத்துவம் கொடுங்கள்.


அடுத்தவர் மனதில் என்ன உள்ளது என்பதை அறியாமல், அவர்களிடம் நம் அன்பை வெளிப் படுத்துவது மிகப் பெரிய முட்டாள் தனம்.


️உடைத்தெரிய ஆயிரம் இருக்க, உயிர்த்தெழ ஏதாவது ஒரு காரணத்தை வைத்திருக்கிறது அன்பு.


ஆசை என்பது பனித்துளி போல நொடியில் மறைந்து வீடும். உண்மையாக வைத்த அன்பு கடல் போன்றது என்றும் நிலைத்திருக்கும்.


வலிகளையும் கடந்து தன்னம்பிக்கையோடு வரும் புன்னகையைவிட பேரழகு ஏதுமில்லை. அழகு என்பது ரசிக்கவே அன்பு மட்டுமே போதும் அழகாய் வாழ்ந்திட.


ஒருவர் மீது அதிக அன்பு வைத்திருப்பதை நிரூபிக்க மற்றொருவரின் மனதைக் காயப்படுத்தாகி வேண்டுமென்பது  அவசியமில்லை.


அளவில்லாமல் அன்பை தந்து அனைத்தையும் துச்சமாக எண்ணி தூக்கி ஏறிபவர்களிடம் அன்பை மீண்டும் அள்ளி அள்ளிக் கொடுத்து அன்றாடம் மன்றாடும் மதி கெட்ட அற்ப மனங்களை ஏராளம்.


அன்பின் பஞ்சாயத்து எப்போதும் தீராது அன்பு வைத்து விட்டு கிடைக்கவில்லை என்று சிலர் அன்பு போதும் என்று ஒதுங்கி ஓடும் சிலர்.


சிலரின் அன்பு வார்த்தையில் மட்டுமே இருக்கும் அவர்கள் செயலிலோ மனசிலோ இருக்காது பெருமைக்காக சொல்லும் இவர்கள் காரியவாதியாக இருப்பார்கள்.


உன்னிடம் பழகிய நொடியில் இருத்து உன் அன்பு எனக்கு தெரிந்தது, ஆனால் உன்னை பிரிந்த  பின்தான் உன் அன்பு எனக்கு புரிந்தது.


உன் அன்பின் அதீதத்தை உணர்ந்த பின் வேறெதுவும் 

பெரிதாய் இருந்திடவில்லை அன்பே.


உலகை அன்பினால் ஆழுங்கள். அன்பை அன்பினால் கொண்டாடுங்கள்.


இதுபோல் பல பொன்மொழிகள் மற்றும் கவிதைகளைப் படிக்க,


Tamil Amma Kavithai | அம்மா கவிதைகள்

இயற்கை கவிதை | Nature quotes in tamil

Abraham Lincoln quotes in tamil | ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

கருணாநிதி பொன்மொழிகள் | kalaignar quotes in tamil

ராபின் ஷர்மா பொன்மொழிகள் | Robin sharma quotes in tamil

No comments:

Post a Comment