திரு.வி.க பொன்மொழிகள் | Thiru vi ka quotes in tamil

 இந்தப் பதிவில் தமிழ்க் கவிஞர்களுள் ஒருவரான திரு.வி.கல்யாணசுந்தரம் கூறிய பொன்மொழிகளை தான் காண போகிறோம்.

Thiru vi ka quotes in tamil

திரு.வி.க பொன்மொழிகள் | Thiru vi ka quotes in tamil

ஒழுக்கம் உடையவனின் முகத்தில் அழகு தெய்வம் குடியிருக்கும்.

பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது.

யாரிடமும் உயர்வு, தாழ்வுடன் பழகக்கூடாது. எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.

வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் பயிலும் கல்வி வேர் போல துணைநிற்கிறது.

பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது.

மனிதராகப் பிறந்தவர் எல்லாம் மனிதராக மாட்டார். இயற்கையை ஒட்டி வாழும் தெய்வீக வாழ்க்கையே பயனுடையதாகும். தன்னிடம் இருக்கும் தெய்வீகசக்தியை மனிதன் உணராமல் வாழ்வதில் பொருளில்லை.

மற்றவர்களுக்காக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

அறிவுரை கூற விரும்புபவர்கள், தன்னிடம் உள்ள குறைகளையும் போக்கிய பிறகே, பிறருக்கு போதனை செய்ய வேண்டும்.

பணக்காரர்கள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது.

பெண்ணின் ஆபரணம் கற்பு. அதைக் காப்பது தலையாய கடமை.

ஒழுக்கமுள்ளவனிடம் எல்லா அழகுணர்வும் நிறைந்து வாழ்வு ஒளி பொருந்தியிருக்கும்.

ஆன்மிக சக்தி நம் மனதில் எழுச்சி பெற அன்பு, தியாகம் போன்ற நல்ல குணங்கள் இருக்க வேண்டும்.

கடவுள் அளித்த அரிய கொடை இந்த உடல். அதை நல்வழியில் பயன்படுத்துவது நம் கடமை.

கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் விலங்கு நிலைக்கு ஆளாவான்.

எல்லா உயிர்களையும் தன்னுயிராக எண்ணி, மறந்தும் பிறருக்கு கேடு செய்யாமல், தன்னலம் கருதாமல், எல்லா உயிர்களையும் கருணையால் நேசிப்பவனுமே மேலான மனிதன்.

மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல.

தீயகுணங்களை வளர்த்துக் கொள்ளத் துணிந்தால் அசத்தியத்தையும், தெய்வீக குணங்களை வளர்த்துக் கொண்டால் சத்தியத்தையும் அடையமுடியும்.

மனிதப்பிறவி விலங்கு உணர்விற்கும் தெய்வீக உணர்விற்கும் இடைப்பட்ட நிலையாகும். அதனால் தான் மனித மனங்களில் பொறாமை, காமம் போன்ற தீயகுணங்களும், அன்பு, கருணை போன்ற தெய்வீக குணங்களும் இருக்கின்றன.

இந்த பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள். மேலும் பல பதிவு படிக்க,

பிளேட்டோ பொன்மொழிகள்

Leave a Comment