இந்தப் பதிவில் அனைவருக்கும் பிடித்த புதிர் விளையாட்டில் கேட்கப்படும் புதிர்களை தான் இப்பொழுது காணப்போகிறோம்.
ஒரு சொற்றொடரில் ஒரு பொருளின் பெயரை மறைமுகமாக வைத்து ஒரு பொருளின் பெயரையோ அல்லது சொற்களையோ கண்டுபிடிப்பதுதான் புதிர் ஆகும். சரி வாருங்கள் புதிர்களை பார்ப்போம்.

விடுகதைகள் | Riddles in tamil
1. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன? செருப்பு
2. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? சைக்கிள்
3. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன ? தென்னை
4. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன? குயில்
5. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன? நிலா
6. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம்அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்
7. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன? சவப்பெட்டி
8. தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? நெல்
9. ஓவென்று உயர்ந்த மலை, நடுவே உடன் பிறப்பு இருவர் ! ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை; பேசுவதும் இல்லை. அவர்கள் யார்? கண், மூக்கு.
10. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? தையல்காரர்
11. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன? கொசு
12. வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்? பூட்டும் திறப்பும்
13. காட்டிலே பச்சை; கடையிலே கறுப்பு; வீட்டிலே சிவப்பு. அது என்ன? மரம்-கரி-நெருப்பு.
14. என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்? இரகசியம்
15. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்? மணிக்கூடு
16. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன? ஈசல்
17. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்? பென்சில்
18. விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? தும்பிக்கை
19. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன? நிழல்
20. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? வாழைப்பழம்
21. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன? வழுக்கை / பொக்கை
22. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன? தற்கொலை
23. எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ? தண்ணீர்
24. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்? பட்டுத்துணி
25. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? தேள்
26. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? பட்டாசு
27. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? தலைமுடி
28. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்? வெங்காயம்
29. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? நிழல்
30. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு
31. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? விழுது
32. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்? அகப்பை
33. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன? சூரியன்
34. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? சோளக்கதிர்
35. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? பட்டாசு
36. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? மூச்சு
37. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? பூரி
38. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்? காகம்
39. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்? செல்போன்
40. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? வெண்டைக்காய்
41. பார்க்கத்தான் கறுப்பு; ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன? தேயிலை
42. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? படகு
43. பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்? சீப்பு
44. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது? உப்பு
45. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? சீப்பு
46. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? அகப்பை
47. காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்? ரேடியோ
48. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ? உப்பு
49. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? கடல்
50. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன? நத்தை
51. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்? மின்சாரம்
52. நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார் ? ஆமை
53. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்? பனம்பழம்
54. மழை காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்? காளான்
55. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன? வாய்
மேலும் பல இது போன்ற பதிவுகளை கீழே கொடுத்துள்ளேன் அதனையும் படித்து மகிழுங்கள்.