சுதந்திர தின கவிதை | Independence Day Kavithai in tamil

இந்தப் பதிவில் சுதந்திர தினத்திற்காக நம் இணையதளத்தில் சுதந்திர தின கவிதைகளை தான் காணப்போகிறோம்.

Independence Day Kavithai in tamil

சுதந்திர தின கவிதை | Independence Day Kavithai in tamil

சுதந்திர காற்றை சுவாசிக்க பல உயிர்களின் மூச்சுக்காற்று நின்றது.

உழைப்பாலும், உண்மையாலும் உயர்ந்து நாமும் காட்டுவோமே! அயல்நாடு, அசந்து பார்க்கும் அளவுக்கு நம் தேசத்தை உயர்த்திக் காட்டுவோமே!

இந்திய மண்ணிற்கு இது உன்னத நாள்! சுதந்திரக்காற்றை சுகமாய் சுவாசித்த நன்னாள்! அகிம்சை வழி கிடைத்த அன்பு திருநாள்! அடிமை சங்கிலியை உடைத்த அற்புத நாள்! வெள்ளையனை வெளியேற்றி வெற்றி பெற்ற பெருநாள்! இமயத்தையும் குமரியையும் இணைத்த இனிய நாள்! கம்பீரமாய் மணிக் கொடி ஏற்றும் ஆனந்த நாள்!

நேசம் கொண்டு தேசம் போற்றும் பொன்னாளில் சமுதாய ஒற்றுமை காப்போம்! சரித்திரம் படைப்போம்! வந்தே மாதரம் வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ்.

தேசிய கீதம் பெருமித பாடலாய் வந்து தேசமெங்கும் ஒற்றுமையை பரப்புதே! இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்கு உலகமே பயந்து மிரண்டதே!

வீரத்தின் அடையாளத்தை எல்லையில் காட்டி நாட்டை காக்கும் இராணுவமே! உயிரை பனையம் வைத்து மக்களின் உயிர்காக்கும் ராணுவத்தை எப்போதும் போற்றுவோமே!

ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, உறைவிடம் என அனைத்து கிடைக்க செய்வோமே! ஓங்கி நமது குரல் ஒலிக்க நம் உரிமைகளை மீட்டெடுப்போமே!

சுதந்திரத்தை நினைத்து துள்ளிக் குதிக்கிறோம்! சுதந்திரப் போராட்டத்தை நினைத்துப் பார்ப்போம்!

சுகபோகமாய் வாந்திடாமல்… சுதந்திரம் பெற உழைத்தவர்கள்… மறக்காமல் நினைத்திடுவோம்… மண்ணின் மைந்தர்களை…

முன்னோர்கள் விட்டு தந்த உரிமைகளை நாம் மீட்போம்! என்னாளும் ஒற்றுமையாய் நின்று நம் பாரத தேசத்தைப் பேணிக்காப்போம்!

சாதி,மத பேதங்கள் நம் நாட்டிற்கு வேண்டாமே! நம் வீட்டுக்குள் சண்டையிட்டு வெளி நாட்டினரை விட வேண்டாமே!

மேலும் இது போன்று சில பதிவுகளை கீழே கொடுத்துள்ளேன் மறக்காமல் படித்து மகிழுங்கள்.

சுதந்திர தின வாழ்த்துக்கள்

1 thought on “சுதந்திர தின கவிதை | Independence Day Kavithai in tamil”

Leave a Comment