வாழ்க்கை தத்துவம் | Life quotes in tamil

Life quotes in tamil - இந்தப் பதிவில் நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் சிறந்த பொன்மொழிகள் மற்றும் நல்ல தத்துவங்களை தான் காணப்போகிறோம்.


இந்த தொகுப்பில் உள்ள அனைத்து பொன்மொழிகள் மற்றும் தத்துவங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக் கூடும்.

  • Valuable Thoughts in Tamil
  • Happy Quotes In Tamil
  • Positive Tamil quotes in one line


Life quotes in tamil


வாழ்க்கை தத்துவம் | Life quotes in tamil


பள்ளியில் கற்ற பாடத்தை விட வாழ்க்கையே அதிகமான பாடங்களை நமக்கு கற்றுத் தந்துள்ளது.


தோல்விகளை சந்திக்காத எந்த ஒரு மனிதனும் வெற்றியை அதிக தூரம் சுமக்க முடியாது.


வாழ்க்கையில் தட்டிக் கொடுத்தவர்களையும் தட்டிவிட்டவர்களையும் என்று மறவாதே.


மற்றவர்கள் பொறாமை பட வேண்டும் என்று வாழாதே பெற்றோர்கள் பெருமை படவேண்டும் என்று வாழு.


வாழ்க்கையில் ஒருவன் சொத்துசுகம் சேர்த்து  வைப்பதைவிட நாலு நல்ல மனிதர்களை சம்பாதிப்பதே சிறந்தது.


வாழ்க்கை என்பது நாணயம் போன்றது, இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் இருபக்கம்.


உன் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் தொலைக்கலாம்! ஆனால் உன் கனவை மட்டும் தொலைத்து விடாதே அதன் வலி ஆயுள் வரை நீடிக்கும்...


இன்று என்பது நமக்கு சொந்தமான நாள்! நாளை என்பது நமக்கு சொந்தமில்லை! அதனால் இன்றே நமக்குப் பிடித்தது போல் வாழ்வோம்! போட்டி, பொறாமை, வஞ்சகம் எதுவும் இன்றி...


வாழ்க்கையின் இறுதியில் வாழ்க்கை கற்றுக் கொடுப்பது, நீ உயிருடன் இருக்கும் பொழுது சம்பாதிக்க வேண்டியது பணம் அல்ல நல்ல மனிதர்களின் மனங்களை என்று.


புரிந்தும் தவிர்க்க முடியவில்லை நிழல் உலக வாழ்க்கையை.


கனவுகள் இல்லாத வாழ்க்கை அர்த்தம் இல்லாத வாழ்க்கை


வாழ்க்கையில் இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம் நம்பிக்கை இருந்தால்.


பொறாமையில் யாரையும் வீழ்த்த நினைத்தால் நீ தான் வாழ்க்கையில் நிம்மதி இழந்து தவிப்பாய்.


நீ மட்டும் இங்கே துன்ப பட வில்லை உன்னை சுற்றி உள்ள உயிர்கள் அனைத்துமே கடுமையாக போராடிக் கொண்டுதான் இருக்கின்றன தன் வாழ்க்கையை அன்றாட வாழ.


எதன் மீதும் அளவுகடந்த பற்றை வளர்த்துக் கொள்ளாதே! அது எப்போது வேண்டுமானாலும் உன்னை விட்டு பிரிந்து போகலாம்!


உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே வாழ்க்கையில் வறுமை என்பது கண்களுக்கு தெரியாமல் போகும்.


இங்கு புரியாத பாதைகள் ஒன்றும் இல்லை நீ அருகில் போகாத வரை எதுவும் உனக்கு புரிவது கிடையாது.


நம்மிடத்தில் இல்லாததை தேடுவதும் இருப்பதை தொலைப்பதும் நமக்கு வாடிக்கைதான்! நம்மிடத்தில் இருப்பதே போதும் என்று யாரும் தன் ஆசைகளை நிறுத்துவது கிடையாது.


நீ எதை கொண்டு வந்தாய் தொலைப்பதற்கு! நீ எதை இழந்து விட்டாய் நீ வருவதற்கு! நாம் எதையும் கொண்டு வரவும் இல்லை! எதையும் கொண்டு போவதும்  கிடையாது!


புகழின் உச்சியில் இருக்கும் போது பழையதை உதாசீனம் படுத்தாதே எப்போது வேண்டுமானாலும் உன் நிலைமை இறங்கலாம்.


வாழ்க்கையில் வீழ்வது ஒன்றும் தோல்விகள் அல்ல, அதை மீண்டும் முயற்சி செய்யாமல் விடுவதே தோல்வி.


எல்லோருக்கும் எல்லாமும் தான் நினைப்பது போலவே நடப்பது கிடையாது நமக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.


நேற்றைய வாழ்வை மறந்து விடு இன்றைய வாழ்வை இனிதாக மாற்ற பழகிக்கொள் எல்லாம் சரியாகிவிடும் காலப்போக்கில்.


நம் ஆசைகள் அனைத்தும் கிடைத்து விட்டது என்றாலும் மற்றொன்றின் மீது நம் ஆசைகள் முளைத்து விடுகின்றது இதுவே போதும் என்று யாரும் நிறுத்திக் கொள்வது கிடையாது!


 கிடைத்ததை தொலைப்பதும் தொலைத்ததை தேடுவதுமே இங்கு வாடிக்கை ஆனது! நமக்கு நிற்காமல் ஓடும் நமது கால்கள் என்றைக்காவது ஒருநாள் நின்று விடும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்!


நம் உறவுகளை மறந்து நம் உணர்வுகளைத் தொலைத்து நாம் என்ன சாதிக்கப் போகிறோம் இங்கே! ஒன்றுமே இல்லாத நமது நிழல் வாழ்க்கையில்.


மற்றவர்களை பார்த்தே வாழப் பழகிக்கொண்ட நமக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று நாம் அறிவது கிடையாது.


இங்கே தடுக்கி விழுவது இயல்பு தான் எதையும் தாங்கிக் கொண்டு நடக்கின்ற போது தான் உனது வாழ்க்கையும் தொடங்குகிறது.


நாம் எவ்வளவு தான் இங்கே பார்த்து பார்த்து சென்றாலும் நம் கண்ணுக்கே தெரியாத சில துயரங்கள் நம்மை தடுக்கி விழ வைக்கிறது அதை எதிர்கொண்டு நடப்பதே! சிறந்தது...


இங்கே எல்லோருக்கும் எல்லாமும் நினைத்தது போல் நடப்பது கிடையாது அதனால் அது  கிடைத்துவிடாது என்பதல்ல அந்த விஷயம் சற்று தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.


இங்கே பார்க்கின்ற ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏதாவது தினமும் ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது அதற்காக பயந்து நின்று தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வது கிடையாது.


நமக்கு என்றைக்காவது ஒருநாள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது பல உயிரிகள் இங்கே.


யாரால் இங்கே தோற்றிர்கள்! எதனால் இங்கே தோற்றிர்கள்! அதை சிந்தித்துப் பாருங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.


வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை வெளியில் இருந்து பார்க்காதீர்கள் அதை அருகில் சென்று பாருங்கள் அதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று உங்களுக்கே தோன்றி விடும்.


உலகத்தில் இங்கே யாரும் நிலைத்து வாழப் போவது கிடையாது! இருப்பது கொஞ்சம் காலம் தான் அதில் மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம்!


உன் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் எல்லாம் அது காலப்போக்கில் காணாமல் சென்று விடும் அதற்குள் உன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காதே!


நம் வாழ்க்கையை நாமே சரி செய்து கொள்ளலாம் யாரையும் நம்பி நாம் இங்கே பிறக்கவில்லை!


பிறரோடு போட்டி போட்டுக் கொண்டு நமது வாழ்க்கையும் தொலைத்து விடுகிறோம்!


ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் ஒரு நிமிடம் பொறுமையாக சற்று சிந்தித்தோம் என்றால் இது ஒரு மாய வாழ்க்கை என்று உணர்வீர்கள்.


நம் கண்ணீரை நம் கையை துடைத்துக் கொள்ளும் போது மனம் தெளிவான முடிவிற்கு வந்து விடுகின்றது.


கரையும் மெழுகில் இருளைக் கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்.


மேலும் இது போன்ற பல பொன்மொழிகள் மற்றும் கவிதைகளை கீழே கொடுத்துள்ளேன் மறக்காமல் படித்து பாருங்கள்.


தன்னம்பிக்கை வரிகள் | Motivational quotes in tamil

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.