வேதாத்திரி மகரிஷி பொன்மொழிகள் | Vethathiri Maharishi Quotes in Tamil

 Vethathiri Maharishi Quotes in Tamil – இந்த பதிவில் சிறந்த தத்துவ ஞானியான வேதாந்திரி மகரிஷி அவர்களின் பொன்மொழிகளை தான் காண போகிறோம்.

Vethathiri Maharishi Quotes in Tamil

வேதாத்திரி மகரிஷி பொன்மொழிகள் | Vethathiri Maharishi Quotes in Tamil

மனத்தூய்மை, சத்தான உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு இவற்றைப் பின்பற்றினால் உடல்நலத்துடன் வாழலாம்.

இன்றைய உலகில் பணத்திற்கும், பண்புக்கும் போட்டி நிலவுகிறது. இதில் பண்பு தான் தோற்றுப் போய் நிற்கிறது.

பிறர் மீது கோபம் கொள்ளும் போது அந்தக் குறை நம்மிடம் இருக்கிறதா என்றும் சிந்திக்க வேண்டும்.

அனைத்தும் ஒன்று என்று அறிந்தவன் செய்யும் செயல்கள் அனைத்தும், அன்பின் வெளிப்பாடாக இருக்கும்.

அமைதி எங்கு தேடினாலும் கிடைக்கப் போவதில்லை. மனதின் உள்ளிருந்து தான் அதைப் பெற்றாக வேண்டும்.

உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே.

உணவில் எளிமை, உழைப்பில் நேர்மை, ஒழுக்கத்தில் உயர்வு இந்த மூன்றும் உத்தமர்களின் இயல்பு.

கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது. எதிலும் அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது.

ஆசையை சீர்படுத்தி வாழ்ந்தால் வாழ்வே ஆனந்த மயமாகி விடும்.

உழைப்பால் மனிதன் தலைநிமிர்ந்து வாழலாம். மற்றவர்களையும் வாழ வைக்கலாம்.

உள்ளத்தில் பகையுணர்வு இருந்தால் யாரையும் வாழ்த்த முடியாது. வாழ்த்திப் பழகிவிட்டால் பகையுணர்வு நீங்கும்.

ஆசைகளை அடியோடு ஒழிக்க முடியாது. அதை சீரமைத்துக் கொள்வதே நல்லது.

நீ யார் என்று அறிய ஆர்வம் எழுந்து விட்டால், அது உன்னை அறியும் வரையில் அமைதி பெறுவதில்லை.

எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதனுக்கு கோபம் வராவிட்டால் அவன் ஞானம் அடைந்ததாகப் பொருள்.

பேராசை, கோபம், கவலை, பொறாமை எண்ணங்களுக்கு இடம் அளிக்காமல் மனதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இயற்கையுடன் ஒத்துப்போனால் உடல்நலம் பாதித்தாலும், அதை தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும் தன்மை உடலுக்கு கிடைத்து விடும்.

மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கதாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.

ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். உயர்வு பெறுவீர்கள்.

கோபப்படுவது நல்லதல்ல. நன்மை உண்டாகும் எனில் கோபப்படுவது போல நடித்தாலே போதும்.

எல்லாரையும் வாழ்க வளமுடன் என்று சொல்லுங்கள்.

இயற்கைக்கு எப்போதும் மதிப்பு கொடுங்கள். நீதி, நியாயத்தை வாழ்வில் பின்பற்றுங்கள். அப்போது வாழ்வில் வளமும் நலமும் நிறைந்து இருக்கும்.

வாழ்வில் மனத்தூய்மை, ஒழுங்கான உணவுமுறை, அளவான உழைப்பு, ஓய்வு இவற்றை முறையாக கடைபிடித்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

மேலும் இது போன்ற ஞானிகள் மற்றும் அறிஞர்களின் பொன்மொழிகள் கீழே கொடுத்துள்ளேன்.

About Quotestamil.in 99 Articles
This quotes is collected from Various sources. So this quotes credits goes to respective writer.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*