ஔவையார் பொன்மொழிகள் | Avvaiyar quotes in tamil

Avvaiyar quotes in Tamil – இந்த பதிவில் ஆத்திச்சூடி எழுதிய ஔவையாரின் பொன்மொழிகளை தான் காணப்போகிறோம்.

Avvaiyar quotes in Tamil

ஔவையார் பொன்மொழிகள் | avvaiyar quotes in tamil

வேதம் முதலான மறைநூல்களைப் படிப்பதைக் காட்டிலும் ஒழுக்கத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இருப்பதே நல்லவர்களின் பண்பாகும்.

நல்ல உணவுக்காக காத்திருக்கும் கொக்கு போல, வாய்ப்புக்காக காத்திருப்பவனே அறிவாளி.

பிறவுயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த விரதமாகும்.

மற்ற செல்வங்கள் எல்லாம் நம்மைவிட்டு விலகினாலும் அழியாத செல்வமாக நம்மிடமே நிலைத்து நிற்கும் செல்வம் கல்விச்செல்வம் மட்டுமே.

உங்கள் மனம் தெளிந்த நீரைப் போல இருப்பதற்கு முதலில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

யாரிடமும் கோபம் கொண்டு, சண்டை போடாதீர்கள். சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் மனதில் நிம்மதி கெடுவதை தவிர, பயன் ஏதும் ஏற்படுவதில்லை.

நல்லோருக்குச் செய்த உதவி கல்மேல் பொறித்த எழுத்தாக நிலைத்திருக்கும். தீயோருக்குச் செய்த உதவி நீர்மேல் எழுதிய எழுத்தாக சுவடு தெரியாமல் அப்போதே அழிந்து விடும்.

தென்னை மரம் இளநீர் தருவது போல, நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நன்மையைத் தரும்.

துன்பம் நம்மை அடுக்கடுக்காக வந்து தாக்கினாலும், மனந்தளராமல் ஊக்கத்தோடு செயல்படுபவனிடம் செல்வம் சேர்ந்து விடும்.

பிறருடைய உடைமைகளை குறிப்பாக நிலங்களை ஏமாற்றியோ அல்லது பலவந்தப்படுத்தியோ பறித்து அனுபவிப்பது பெரும் பாவச் செயலாகும்.

தாயிற் சிறந்ததோர் கோவில்லை.

பாலைக் காய்ச்சினாலும் சுவை குறைவதில்லை. அதுபோல, நல்லவர்கள் வறுமையிலும் நேர்மை இழப்பதில்லை.

உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம்.

நல்லவர்களைக் காண்பது, அவர் சொல் கேட்பது, அவர்களோடு உறவாடுவது எல்லாம் வாழ்வை உயர்த்தும்.

ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய வேண்டும்.

கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு அழகு.

கற்க வேண்டிய நூல்களைக் கற்று உனது அறியாமையை நீக்கிக் கொள், அதேபோல் நல்ல நூல்களைக் கற்பதிலிருந்து விலகக்கூடாது.

நல்ல செயல்களை நீயே முன் நின்று செய்வதுடன், மனம் அறிய உண்மையாக வாழ்வதே நேர்மையான வாழ்க்கை.

எந்தப் பொருளின்மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை.

கோடி பணம் கொடுத்தாவது நல்லோர் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பலவிதமான நூல்களையும் படித்து ஆராய்ச்சி திறமை பெறு.

சோம்பல்தான் தீமைக்கும், துன்பத்திற்கும் காரணம்.

சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்.

தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் செய்யாதே, பிறர் வேண்டினாலும் செய்யாதே.

சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.

தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.

1 thought on “ஔவையார் பொன்மொழிகள் | Avvaiyar quotes in tamil”

Leave a Comment