வள்ளலார் பொன்மொழிகள் | Vallalar quotes in tamil

Vallalar quotes in tamil – இந்த பதிவில் நமக்கு வள்ளலார் தந்த சிறந்த பொன்மொழிகளை காணலாம்.  இவர் சிறந்த வாழ்க்கை நெறியினை கூறும் பொன்மொழிகளை தந்துள்ளார்.

Vallalar quotes in tamil

வள்ளலார் பொன்மொழிகள் | Vallalar quotes in tamil

மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆசையே.

வெள்ளம் வருமுன்னே அணை போட்டுத் தடுப்பது போல, தீய சிந்தை மனதில் எழுவதற்கு முன்பே தடுத்து நிறுத்துவது மேலானது.

யார் நமக்கு துன்பம் இழைத்தாலும், அஞ்சாமல் வாழ வேண்டும்.

பிறர் தயவை நாடி ஒருபோதும் பிச்சை எடுத்து வாழ்வது கூடாது. அதே சமயம், நம் தயவை நாடி வருவோருக்கு மறுக்காமல் கொடுத்து உதவ வேண்டும்.

சோதனைகள்தான் ஒரு மனிதனை அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன.

கற்பனை அனைத்தையும் கடந்தவன் இறைவன். அவனை நம் கற்பனை எல்லைக்குள் கொண்டுவர இயலாது.

பிறர் தயவை நாடாமல் மனிதன் வாழ வேண்டும். தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் நல்ல மனம் பெற்றிருக்க வேண்டும்.

உண்மையான வாழ்க்கை வாழும் மனிதன், எல்லா உயிர்களும் தன்னுயிர் என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பான்.

குற்றம் புரிவது மனித இயல்பு. அதையும் குணமாக ஏற்று அருள்வது கடவுளின் இயல்பு.

உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களின் உறவை நாட வேண்டாம்.

மண்ணாசை கொண்டு மண்ணை ஆண்ட மன்னவர் எல்லோரும் மடிந்து மண்ணாகி விடுவதை நீ அறிவாய். இருந்தும் நீ ஏன் மண்ணாசை கொண்டு அலைகிறாய்?

யாரிடத்தில் இரக்கம் அதிகப்பட்டிருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்.

கொடுமையான நோன்பு இருப்பதைக் காட்டிலும் உயிர்களைக் கொல்லாமையே விரதங்களில் சிறந்தது.

பிழைப்புக்காக, குணம் இல்லாதவனின் வீட்டு வாசலில் நாய் போல இருப்பது கூடாது.

உயிர்க்கருணை இல்லாதவர் செய்யும் வழிபாடும், தியானமும் எதற்கும் பயன்படாது.

உள்ளத்தில் நல்லதை ஆழமாக எண்ணுங்கள். எண்ணியதை நிறைவேற்ற உடனே செயல்படுங்கள்.

பொய், பொறாமை, கபடம் போன்ற தீய குணங்களை கடவுள் வழிபாட்டால் மட்டுமே அகற்ற முடியும்.

நாம் பல பிறவிகளைக் கடந்து, மேலான மனிதப்பிறவி எடுத்தது இறைவனின் திருவருளைப் பெறுவதற்காகத் தான்.

மனத்தூய்மை உள்ளவனுக்கு அருகில் கடவுள் இருக்கிறார். தூய்மை அற்றவன் பக்கம் அவர் நெருங்கக்கூட மாட்டார்.

அறிவு என்னும் குருநாதரை அலட்சியப்படுத்தும் மனம் தடுமாறித் திரியும்.

கனவிலும் வஞ்சனை எண்ணம் இல்லாத நல்லவருக்கே கடவுளின் அருள் கிட்டும்.

அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை!

நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.

உனக்காக மட்டுமின்றி உன்னைச் சுற்றி இருப்போருக்காகவும் பிரார்த்தனை செய்.

மாமிசம் உண்டு உடலை வளர்ப்பது பாவம். கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம். தவம் செய்வோரை தாழ்த்தி பேசுவது பாவம். தாய் தந்தை மொழியை தட்டி நடப்பது பாவம்.

About Quotestamil.in 99 Articles
This quotes is collected from Various sources. So this quotes credits goes to respective writer.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*