சானக்கியர் பொன்மொழிகள் | Chanakya quotes in tamil

 Chanakya quotes in tamil – இந்தப் பதிவில் வாழ்க்கையை முன்னேற்றக் கூடிய சாணக்கியர் பொன்மொழிகளை தான் காண போகிறோம்.

சானக்கியர் பொன்மொழிகள் | Chanakya quotes in tamil

Chanakya quotes in tamil

சுறுசுறுப்பு, மனஉறுதி என்ற வெற்றிக்குதிரைகளில் பயணம் செய்வான் புத்திசாலி.

-சாணக்கியர்

இழந்த செல்வம், ஏற்பட்ட அவமானம், கேட்ட வசைச்சொல் ஆகியவற்றை விவேகமுள்ள மனிதன் வெளியே சொல்லமாட்டான்.

-சாணக்கியர்

மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.

-சாணக்கியர்

ஆசிரியர், தலைவன், நண்பன், அறிவாளி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்யவேண்டாம். அதுமட்டுமல்ல…. முட்டாளிடமும் வீண்வாதம் வேண்டாம்.

-சாணக்கியர்

பயமும் தயக்கமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

-சாணக்கியர்

திறமையுள்ளவரின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

-சாணக்கியர்

அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது

-சாணக்கியர்

உன் சுதந்திரத்திற்கு ஆபத்து நேரும்படி உன் நண்பனுக்குச் சுதந்திரம் அளிக்காதே.

-சாணக்கியர்

துணிவு இல்லாததால் பல திறமைசாலிகள் வீணாகிவிடுகின்றனர்.

-சாணக்கியர்

குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.

-சாணக்கியர்

தன் வலிமையைக் கணித்த பிறகே செயலில் இறங்கவேண்டும்.

-சாணக்கியர்

நேற்றைய புயலை நினைத்து இன்றைய பூந்தென்றலுக்கு ஜன்னல்களை அடைக்க மாட்டான் புத்திசாலி.

-சாணக்கியர்

கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.

-சாணக்கியர்

சோம்பேறியும் திருடனும் ஒன்றே.

-சாணக்கியர்

லட்சியம் நிறைவேறும் வரைஅதைப்பற்றி வெளியில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

-சாணக்கியர்

தர்மத்தைச் சார்ந்திருப்பவன் செத்த பின்னும் வாழ்கிறான் தர்ம சிந்தனையற்றவனோ, வாழும்போதே செத்தவன் ஆகிறான்.

-சாணக்கியர்

சோம்பேறியும், திருடனும் ஒன்றே.

-சாணக்கியர்

மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.

-சாணக்கியர்

கடுமையாக உழைப்பவனுக்கு கவலைப்பட நேரமிருக்காது.

-சாணக்கியர்

நியாயம் இல்லாதவனுக்குக் கோபம் வரும்.

-சாணக்கியர்

அடுத்தவர் வீட்டை நீ உலுக்கினால், உன் வீடே உன் தலைமீது விழும்.

-சாணக்கியர்

தன் பதவி குறித்து கர்வம் கொள்ளாதவன் அந்த பதவியின் மரியாதையை உயர்த்துகிறான்.

-சாணக்கியர்

வீழ்ந்து கிடப்பவனுக்கு வீழ்ச்சி கிடையாது என்பதை அறிந்தவன் புத்திசாலி.

-சாணக்கியர்

உற்சாகம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

-சாணக்கியர்

கோபப்படுவதைவிட அமைதியாக இருப்பவன் ஆபத்தான எதிரி என்பதை அறிந்தவன் புத்திசாலி.

-சாணக்கியர்

தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவந்தான் வலிமையானவன்.

-சாணக்கியர்

வாழ்நாள் முழுவதும் அறிவைத் தேடுவதைவிட செயல்படுபவனே சிறந்தவன்.

-சாணக்கியர்

இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.

-சாணக்கியர்

ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.

-சாணக்கியர்

உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது.

-சாணக்கியர்

விதியையே நம்பியிருப்பவன், மனிதர்களை இழந்து, எந்த செயலையும் செய்யாதவனாக, அல்லது எடுத்த காரியங்களையெல்லாம் சரிவர நடக்காமல் அழிவடைவான்.

-சாணக்கியர்

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.

-சாணக்கியர்

ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.

-சாணக்கியர்

பேச்சிலும், செயலிலும், சிந்தனையிலும் உண்மையாக நடந்து கொள்வதைவிட வேறு விரதமோ, தவமோ தேவையில்லை.

-சாணக்கியர்

ஆடையைப் பார்த்து மனிதனை அளவிட மாட்டான் புத்திசாலி.

-சாணக்கியர்

ஒருவருடைய நடத்தைதான் நண்பர்களையோ, விரோதிகளையோ உருவாக்குகிறது.

-சாணக்கியர்

தேவையான செலவை செய்யத்தயங்குபவன் முட்டாள்.

-சாணக்கியர்

உயர்ந்த குணமுடையவர்கள் எப்போதும் தன்னலத்தைப் பற்றி கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் உலக நன்மைக்கான செயல்களில் ஈடுபடுகிறார்கள் தாமும் இவ்வுலகிலேயே வசிப்பதால், உலக நன்மையானது தமக்கும் நன்மையாகவே மாறிவிடுகிறது.

-சாணக்கியர்

கொடுக்கும் கொடையைவிட கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது.

-சாணக்கியர்

நேர்மையும் லாபமும் ஒரே பையில் அடங்குவதில்லை.

-சாணக்கியர்

உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.

-சாணக்கியர்

பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.

-சாணக்கியர்

ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.

-சாணக்கியர்

உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள். அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள். பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து. தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.

-சாணக்கியர்

ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.

-சாணக்கியர்

மேலும் இது போல சில பொன்மொழிகளை கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.

Leave a Comment