காதல் கவிதை | Kadhal Kavithai in tamil

 இந்த பதிவில் காதலியர் காதலர்களுக்காக காதலை வர்ணித்து அழகான காதல் வரிகளை கொடுத்துள்ளேன். இந்தக் கவிதைகள் அனைத்தும் காதலை பற்றி அமைந்திருக்கும்.

Kadhal Kavithai in tamil

காதல் கவிதை | Kadhal kavithai in tamil

அவள் என்னை வெறுத்த பின்னும் நான் அவளை நேசிக்கிறேன். ஏனென்றால், அவளின் தாயை விட அவளை அதிக நாள் என் மனதில் சுமந்தவன் நான்.

அன்பே நீ என் அருகில் இருந்தாலும் இல்லை என்றாலும் உன் காதல் அன்பு மட்டும் என்னை பிரியாதே.

உனக்காக என் மனதில் இடம் இல்லை ஆனால் உன் காதலுக்கு உண்டு அன்பே.

காலம் சென்றாலும், கனவுகள் மறைந்தாலும், கவிதைகள் அழிந்தாலும், என் உயிர் பிரிந்தாலும், காற்றோடு தொடர்ந்து வருவேன், உன் காதல் என்னும் அன்புக்காக.

காதல் என்பது ஒரு மனித உயிர் போல பலரிடம் காதல் வந்தாலும் ஒருவரிடம் மட்டுமே வnழ ஆசைப்படுகிறது.

கனவு என்பது தூக்கத்தில் இருந்து கண் திறக்கும் வரை தான் ஆனால் காதல் என்பது வாழ்வின் கண் மூடும் வரை.

ஒரு பெண்ணை உண்மையாக நேசித்து பார், பல பெண்கள் உன் எதிரில் இருந்தாலும் உன் கண் அந்த பெண்ணை மட்டும் தான் தேடும்.

மழைத்துளி எப்படி மண்ணின் மீது விழும் பொழுது அழகானது அதுபோல் நான் உன் காதலில் விழும் பொழுது அழகானேன்.

கடலின் அலை எப்படி ஓய்வதில்லையோ அது போல் தான் நம் காதலும் ஒரு நாளும் ஓயாது.

உன் கண்ணை பார்த்தவுடன் நான் உன் கண்ணில் உள்ள என் உருவத்தை பார்க்க வில்லை உன் காதலை பார்த்தேன்.

காதலியே மனைவியாக வந்து விட்டால் அவன் அதிர்ஷ்டம் பெற்றவன் ஆனால் மனைவி அவன் காதலாக மாறினால் அவன் வாழ்வில் இன்பம் பெற்றவன்.

உறவுகளை உடைத்து, உணர்வுகளை தகர்த்து, உடமைகளை தொலைத்து, உண்மைகளை மறுத்து, உலகை மறந்து, உயிர்மட்டும் விழித்திருப்பதுதான் காதல்.

என் இதயத்தை துடிக்க வைத்தாய்! என் உயிருக்குள் உயிராய் வந்தாய்! இறுதியில் உன் காதலையும் தந்தாய்.

பெண்ணே உன் விழிகள் பேசும் வார்த்தைகள் எனக்கு புரியவில்லை ஆனால் உன் காதலின் மௌனம் என்னை பேச வைக்கிறது.

உன் அழகை ஆராய்ந்து பார்க்க நான் ஆராய்ச்சியாளரும் இல்லை!  உன் அழகால் என்னை  கொல்ல நீ ஒன்றும் கொலை காரியும் இல்லை!

காதல் என்பது மூன்று எழுத்து தான் ஆனால் இந்த காதலை தேடி பலர் தலையெழுத்தையே தொலைக்கின்றனர்.

சூரியனைப் பார்த்து பூக்கும் சூரியகாந்தி பூ போல! நீ என்னை பார்த்த உடனே முகம் பூக்கும் என்பதை நான் அறிவேன்.

உன் அருகில் இருந்த பொழுது நான் உன்னை காதலித்தேன் என்பதை விட உன்னை விலக்கி இருக்கும் போது இன்னும் காதலித்தேன்.

காயப்பட்ட இதயத்திற்கு ஒரே ஆறுதல் காயப்படுத்திய நீ.

பெண்களின் காதல் பூவிலுள்ள பனித்துளி போல அழகானது. ஆண்களின் காதல் வேரில் உள்ள நீரைப்போல ஆழமானது.

பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோஷமாக இருக்கின்றனர் உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகின்றனர்.

விலகி போனாய் நெருங்கி வந்தேன்! வெறுத்து போனாய் விரட்டி வந்தேன்! இனி நிச்சயம் வற்புறுத்த மாட்டேன்! உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்.

நேற்று நானாக! இன்று நீயாக! நாளை நாமாக வாழ ஆசை!

உன் இதழ்களை போல் உன் கண்களுக்கும் பொய் சொல்ல கற்றுக்கொடு, அது உன் காதலை காட்டிக்கொடுக்கிறது.

உன் மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும் உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்டவர்கள்.

இது போல பதிவுகள் நம் இணைய தளத்தில் இருக்கின்றது அதனையும் படித்துப் பாருங்கள்.

Leave a Comment