தனிமை கவிதை வரிகள் | Alone quotes in Tamil | Thanimai kavithai

Alone quotes in tamil – இந்தப் பதிவில் நீங்கள் தனிமையில் இருந்தபோது வந்த நினைவுகளை நினைவு படுத்தும் வகையில் தனிமை கவிதைகளை (Thanimai kavithai) காணப்போகிறோம்.

Alone quotes in tamil

தனிமை கவிதை வரிகள் | Alone quotes in tamil

1. நெடுதூர வாழ்க்கைப் பயணத்தில் சின்ன தெளிவைத் தந்தது என் தனிமை உலகம்.

2. சில உறவுகள் நம்மை காயப்படுத்திய போதும் நம்மை ஆறுதல் படுத்தும் ஒரே ஒரு உறவு தனிமை.

3. வலிகள் நிறைந்த வாழ்க்கையில் என்றும் என்னுடனே ஏமாற்றம் அளிப்பது என் இனிய நண்பன் தனிமை.

4. நேரத்திற்கு ஏற்ப உன் நிழல் விழும் திசை மாறலாம்! எந்த காலத்திலும் உன் தனிமையின் நிலை மாறாது!

5. நல்ல பாடங்கள் கற்றுத் தருவது வாழ்க்கையாம்! அந்த வாழ்க்கைக்கு நல்ல பாடங்கள் கற்று தருவது என் தனிமை!

6. கருவறையில் இருந்த அமைதியான சூழலையும் மன உறுதியையும் திரும்பவும் மீட்டுத் தந்தது என் தனிமை.

7. ஆழமான பல சிந்தனைகளையும், அழுத்தமான பல முடிவுகளையும் எடுக்க மன உறுதியை வளர்த்தெடுத்தது என் தனிமை உலகம்.

8. தனிமை சில நேரங்களில் வரம் தனிமை சில நேரங்களில் சாபம் தனிமை சில நேரங்களில் இன்பம் தனிமையே சில நேரங்களில் துன்பம்.

9. யாருமில்லா நேரத்தில் எனை ஆறுதலாக அணைத்துக் கொண்டது இந்த தனிமைதான் யாரோ ஒருவருக்காக எனை இன்று ஏங்க வைப்பதும் இந்த தனிமைதான்.

10. ஆழ்கடலில் கிடைக்கும் சங்கில் வரும் ஓசையை என் தன்மையிலும் நான் அறிவேன் ஆசையாய்.

11. உறவுகளை இழந்தவனின் மனதில் ஒரு தனிமை உறவுகளில் இருந்தும் சிலரின் உள்ளமெங்கும் ஒரு தனிமை.

12. என் வாழ்க்கை தரத்தை யாரும் தொட முடியாத உயரத்தில் என்னை பறக்க வைத்தது என் தனிமை தான்.

13. நேற்று கற்ற என் வாழ்க்கை அனுபவத்தை எல்லாம் திரும்பவும் மறுசுழற்சி செய்து, என்னை சரியான பாதையில் என்னை அழைத்துச் சென்றது என் தனிமை மட்டும் தான்.

14. வாழ்க்கையில் சிலரை இறந்தபின் ஒரு தனிமை வாழ்க்கையில் சிலர் இருந்தும் ஒரு தனிமை.

15. அழ வேண்டும் என்கிற ஆசை வரும் பொழுது நான் தேடிக் கொள்ளும் ஒரு தனிமை! தாளாத துக்கத்தில் என்னைதாலாட்டும் ஒரு தனிமை!

16. வெற்றியோ தோல்வியோ எதையும் சமாளிக்கும் மன உறுதியை தந்தது என் தனிமை உலகம்.

17. வெளியில் சிரித்து உருவத்தை பழித்துப் பேசும் உள்ளத்தை அடையாளம் கண்டு கொள்ள உதவி செய்தது என் தனிமை.

18. பிடித்தவர்களை பிரிந்து வாழும் ஒரு தனிமை! பிடிக்காது சிலருடன் இருப்பது தனிமை!

19. தனிமை ஒரு ஆறுதல் தனிமையோடு தேடல் தனிமை ஒரு நிம்மதி தனிமை ஒரு அமைதி

20. தனிமைக்கு ஒரு எல்லை உண்டு அது தரும் ஆறுதலுக்கும் ஒரு எல்லை உண்டு.

21. எல்லைக்குள் அடங்கும் தனிமை வரம் எல்லைமீறும் தனிமை சாபம்.

22. என்னைச் சுற்றிலும் ஆயிரம் நபர்கள் இருக்கலாம் ஆனால் ஒரு போதும் என்னை ஏமாற்றாமல் இருப்பது என் தனிமை ஒன்றுதான்.

23. எல்லா மனிதர்களுக்கும் தனிமை படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அமைந்து விடாது! இந்த உலகத்தை உற்று நோக்கிப் அவருக்கு மட்டுமே கிட்டும் இந்த தனிமை உலகம் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

24. என் தனிமை உலகில் போட்டி போட மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என் வெற்றியை பறிக்க யாரும் பறிக்க மாட்டார்கள்.

25. கூட்டத்தோடு கூட்டமாக நானும் ஒருவனாக சென்றுகொண்டிருந்தேன் அப்போதுதான் தனிமை உலகம் என்னை வழிமறித்தது இது அல்ல உன் பாதை என தெளிவுபடுத்தியது என் தனிமை உணர்வு.

26. நான் தேடும் தனிமை வரம் எனைத்தேடும் தனிமை சாபம்.

27. தனித் தன்மையை உணரும் பட்சத்தில் தனிமை அமையும் நேரத்தில் தன்னை தானே மீட்டு எடுக்கிறோம்.

28. தனிமை இனிமை என சிலர் சிரிப்பார் கொடுமை என பலர் அழுவர்.

29. சத்தம் இல்லாத தனிமை பொழுதில் யுத்தம் செய்யும் மனதின் நினைவு.

30. பார்க்கின்ற உலகம் யாவும் மெய்யானவை அல்ல எல்லாம் பொய்யானவை என உணர்த்தியது என் தனிமை உலகம்.

31. காலத்தின் கணக்குகளில் கடக்க முடியா பொழுது தனிமை.

32. ரணங்கள் ரகரகமாயினும் ராகமாய் இசைக்கும் ரம்ய குரலாய் ராவோடு ஓங்கி ஒலிக்கும் தனிமை தருணம்.

33. சிலிர்க்க துடிக்கிறது என் மனமும் தனிமையில் கொஞ்சம்.

34. தனித்து இருந்த வீட்டினில் சற்றே சித்தம் நிம்மதி பெருக அடைக்கலம் கொண்டேன் நானே.

35. உணர்ச்சிகளில் இருந்து உள்ளுணர்வுகளோடு உரையாடும் நேரம் தனிமை.

36. யாருமில்லா நேரத்தில் யாரையோ பற்றிய நினைவுகள்.

37. தேடுவேன் தேடிக்கொண்டே இருப்பேன் என்னை முழுமைப்படுத்தி கொள்ளும் வரையில் இருப்பேன் என் தனிமை உலகத்தில்.

இது போன்று பல நம் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும் கவிதைகளை படிக்க,

1 thought on “தனிமை கவிதை வரிகள் | Alone quotes in Tamil | Thanimai kavithai”

  1. 'தனிமை கண்டதுண்டு அதில் தனிசுகம் இருக்குதம்மா' என்றான் பாரதி. ஏனெனில் நம்முடைய சீரிய எண்ணங்கள் பிறப்பதெல்லாம் இரைச்சலில் அல்ல தனிமையில் மட்டுமே.."தனிமை" அறிவாளிகளுக்கும், சிந்தனையாளர்களுக்கும் வரம். ஆனால் முட்டாள்களுக்கோ சாபம்."நான் தேடும் தனிமை வரம் எனைத்தேடும் தனிமை சாபம்".அருமை … வாழ்த்துக்கள் நண்பரே !! …

    Reply

Leave a Comment