இந்தத் தொகுப்பில் கத்திரி வெப்பம் மற்றும் கோடை வெயில் பற்றிய கவிதைகளை (veyil patriya kavithaigal) தான் காணப்போகிறோம்.
உள்ளடக்கிய தலைப்புகள்
- Veyil kavithai
- sunset quotes in tamil
- sunrise quotes in tamil
- சூரிய வெப்பம் கவிதை
- ஞாயிறு பற்றிய கவிதை
- தர்பூசணி கவிதைகள்
Summer quotes in tamil | கோடை வெயில் கவிதைகள்
ரத்தமே ஆவியாகும் அளவுக்கு வேகுது ராத்திரி நிலவு கூட சூரியனா தாக்குது.
கத்திரி கத்திபோல கபாலத்தில் விழுது சுத்தியும் கானல்நீர் சுடுதண்ணீரா சுளுது.
மஞ்சள் பூசி விட்டதுபோல் மண்ணெல்லாம் தெரியுதே மண்ட மயிறு பஞ்சு போல கருகுதே.
குளிர்சாதன அறை கூட கொடுக்கலையே குடிசை விட்டு சுகத்தை கூடம்குளம் ஆக்குதே கோடை வெயிலின் என்அகத்த.
உச்சிவேளை நேரத்தில பச்சைத் தண்ணீர் எரியுதே ஊறப்போட்ட எலுமிச்சையா உடம்பு வெயர்த்து நனையுதே
சுற்றி இருக்கும் கட்டடத்தில் மோதி மோதி காற்றுகூட சாகுது பட்டணத்தை விட்டு மனம் பட்டிக்காட நாடுது.
வீதி சுசுட்டிடுமே இரு பாதம் நொந்துடிமே எங்கும் காயும் செய்களுமே கீறல் தோன்றிடுமே.
ஏப்பா சூரியனே கொஞ்சம் கோபம் தனிச்சுகோ கோடை மழையை கொஞ்சம் தந்து பூமிப்பந்தை நனைச்சு போ.
இப்படியே நீயிருந்தால் எரிந்து போகும் எங்க பூமி இரக்கம் கொஞ்சம் காட்டுவாயா என் கண்ணு பார்த்த வானச்சாமி.
இது போல் மேலும் பல இயற்கை பற்றிய கவிதைகளை படிக்க,
துரோகம் கவிதை | Drogam quotes in tamil
மழை பற்றிய கவிதைகள் | Malai kavithai in tamil