Feb 28, 2021

Natpu kavithai in tamil | நட்பு கவிதை வரிகள்

Natpu kavithai in tamil - இந்த தொகுப்பில் நட்பின் அவசியத்தையும் மற்றும் நட்பு என்ற உறவின் உன்னதத்தை உணர்த்தும் கவிதை வரிகளைக் கீழே காணப்போகிறோம்.


  • natpu quotes in tamil
  • நட்பு கவிதைகள்
  • Friendship Day quotes in tamil
  • நட்பு பற்றிய வரிகள்

natpu kavithai tamil


Tamil Natpu kavithaigal | நட்பு பற்றிய கவிதை வரிகள்


1. நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவது அல்ல அது நம் வாழ்க்கை தலை எழுத்து முடியும் வரை இருப்பது.


2. கவிதை என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து! காதல் என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து! நட்பு மட்டும் தான் என்றைக்கும் இனிக்கும் கரும்பு!


3. வானத்தில் இருக்கும் நட்சத்திரமும் நண்பர்களும் ஒன்றுதான் எனினும் நண்பர்களும் நட்சத்திரம் எப்போதும் கூட்டமாகத் தான் இருக்கும்.


4. தகுதி தராதரம் பார்த்து வராத ஒன்று நட்பு மட்டும்தான். நட்பிற்கு தகுதி தராதரம் பார்ப்பவர் எல்லாம் யாருக்குமே நட்பாக இருக்க தகுதி இல்லாதவர்கள்.


5. நான் நேசிப்பது மலரையும் நட்பையும் தான். ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம் அதுபோல் தான் நட்புக்கு பாசம் அதிகம்.


6. நமக்குள் இருக்கும் திறமைகளை ரகசியங்களையும் யாரால் கொண்டு வர முடிகிறதோ இல்லையோ நம் நண்பர்களால் கண்டிப்பாக கொண்டு வர முடியும்.


7. நண்பர்கள் இல்லாத வாழ்க்கை வெறுமையை கொடுக்கும்.


8. ரோஜா அளவிற்கு நான் ஒன்றும் அழகில்லை ஆனால் என் மனசு அழகு. ஏனெனில் அதில் என் நட்பு இருக்கிறது.


9. உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயங்கள் அதில் ஒன்று உணவு, இரண்டாவது உடை, மூன்றாவது இருப்பிடம் மற்றும் நான்காவது தூய்மையான ஒரு நட்பு.


10. உரிமையாக பேசுவது, ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, எதிர்பார்ப்பின்றி பழகுவது, குற்றம் குறைகள் இருந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அன்பினால் மகிழ்வது, மனதில் பட்டது எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் வெளிப்படுத்துவது, உதவி என்று வந்தால் உயிரை கொடுக்கும் அளவிற்கு ஆதரவு அளிப்பது என அனைத்தும் இங்கே கிடைக்கப்பெறும் உறவு தான் நட்பு.


11. நாம் சந்தோஷமாக இருந்தால் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் சோகமாக இருந்தால் அது நம் நண்பனுக்கு மட்டுமே தான் புரியும்.


12. உரிமை கொள்ள ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளதைப் புரிந்து கொள்ள

நண்பா உன் ஓர் உறவுபோதும்.


13. நட்பு ஆழ்கடல் போன்றது! கரையில் தேடினால் சிப்பிகள்  கிடைக்கும், மூழ்கி தேடினால் தான் உன்னைப் போலண் முத்துக்கள் கிடைக்கும்.


14. வெளிப்புறத்தில் சிரிப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் உள்ளுக்குள் நம் மனம் அழுவது நம் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.


15. நாம் அறிந்தால் தான் கண்ணீர் துளிகள் வரும் ஆனால் நல்ல நண்பன் அருகில் இருந்தால் கண்ணீர் துளிகளும் நம்மை விட்டு பிரிந்து செல்ல, எங்கும் உன் நட்புனால்.


16. நட்பு ஒரு புத்தகம் போன்றது! அதை சில நிமிடங்களில் அழித்து விடலாம் ஆனால் அதை எழுத பல ஆண்டுகள் ஆகும்.


17. நண்பர்களை கவனமாக தேர்ந்தெடு உனது வாழ்க்கையையே மாற்றும் உன்னதனமான உறவு அது.


18. அன்பென்னும் அருமருந்தை அகமகிழ்ந்து அருந்திதினம் இன்புற்று இருப்போம் வா! தாய், தந்தை, குரு, தெய்வம் இவற்றோடு நட்பென்னும் உயிர்ச்சொல்லை கலப்போம் வா!


19. நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன். ஆனால் என்னால் வரைய முடியவில்லை ஏனெனில் ரோஜாவின் வாசத்தை எப்படி வரைய முடியாது அது போல் தான் நம் நட்பின் பாசத்தையும் வரைய முடியவில்லை.


20. நண்பர்களை கண்ணாடி நிழல்போல் தேர்ந்தெடு ஏனெனில் கண்ணாடி பொய் சொல்லாது, நீழல் உன்னை விட்டு என்றும் செல்லாது.


Friendship quotes in tamil | Natpu quotes tamil


21. நண்பர்களின் தவறுகளை பெரிதாக எடுத்துக் கொல்லாதே ஏனெனில் நண்பர்கள் தான் உன் உணர்வுகள் உறவுகள் அல்ல.


22. காதலில் மட்டும்தான் பிரிவின் வேதனை அதிகமில்லை நட்பிற்கும் பிரிவின் வேதனை இருக்கிறது அது காதலை விட உயர்ந்தது.


23. நம்மிடம் உள்ள திறமைகளை கண்டறியும் ஒரு சிறந்த கருவியாக இருக்கிறது நட்பு.


24. பல்லாயிரம் சொந்தங்கள் நாம் தேடிப் போனால் கிடைக்கும் ஆனால் நாம் தேடிப் போனாலும் கிடைக்காத சொந்தம் நண்பர்கள்.


25. நாம் போகும் இடம் எல்லாம் நண்பர்கள் கிடைக்கலாம். ஆனால் சில நண்பர்கள் மட்டுமே இதயத்தில் இறுக்கமாக இடம் பிடித்து விடுவார்கள் அவர்களை என்றும் மறக்க, வெறுக்க தெரியவில்லை ஏன்?


26. ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல ஒரு துளி கண்ணீர் கூட வராமல் தடுப்பதுதான் நட்பு.


27. உதவிக்கு யாருமில்லை என வருந்தாதே உனக்கு துணையாக நான் இருக்கிறேன் தைரியமாக போராடு என்று சொல்பவன் தான் உண்மையான நண்பன் பயந்து ஓடுபவன் நல்ல.


28. நீ உன்னுடைய வாழ்க்கையில் உயரும் பொழுதுதான் உன் திறமை என்ன என்று நீ அறிவாய் ஆனால் நீ உன் வாழ்க்கையில் இருந்து கீழே விழும் பொழுதுதான் யார் உண்மையான நண்பர்கள் என்று அறிவாய்.


29. உன் வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் வைத்துக் கொண்டால் உன் வாழ்க்கையில் தோல்விக்கு இடமில்லை.


30. எல்லா விதத்திலும் ஒத்துப்போவது நட்பல்ல இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதை தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.


31. நட்பு என்பது குழந்தையைப் போல இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை விட்டுப் பிரியாமல் புன்னகை மாறாமல் இருக்கும்.


32. உன்னுடைய தவறை எவன் எடுத்து கூறுகிறானோ அவன் தான் உன் உண்மையான நண்பன் ஆவான்.


33. நட்பை விலைக்கு வாங்க முடியாது தகுதியானவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகின்றது.


34. ஆல மரத்தின் வளர்ச்சியை விழுதுகள் சொல்லும் நட்பின் வளர்ச்சியை நினைவுகள் சொல்லும்.


35. நல்லவர்களோடு நட்பாயிரு நீயும் நல்லவனாய் இரு.


36. உன்னுடைய பிறப்பு முதல் நீ இறக்கும் வரை உன் கூடவே பயணிக்கும் உன்னதனமான உறவே நட்பு இதற்கு வயது ஒன்றும் அவசியமில்லை.


37. பாதியில் விட்டுட்டு போக இது காதலும் இல்லை பாதியில் கலைய இது கனவும் இல்லை இது உண்மையான நட்பு.


38. எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு.


39. இந்த உலகம் உங்களை விட்டுச் செல்லும் போது உங்களை தேடி வரும் அவனே உண்மையான நண்பன்.


இதுபோல் நட்பை பற்றிய பல கவிதைகளைப் படிக்க,


Tamil Amma Kavithai | அம்மா கவிதைகள்

அன்பு கவிதை வரிகள் | Anbu Kavithai Tamil

இயற்கை கவிதை | Nature quotes in tamil

பாரதியார் பொன்மொழிகள் | Bharathiyar quotes in tamil

No comments:

Post a Comment