Nethaji quotes in tamil | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்

Nethaji quotes in tamil – இந்தத் தொகுப்பில் நம் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூறிய பொன்மொழிகளை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

Nethaji quotes in tamil

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள் | Netaji Subhash Chandra Bose quotes in tamil

1. சரித்திரம் மகா சக்தி பெற்றது. அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல.

2. முதலில் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவனே உலகை மாற்றத் தகுதியுடையவன்.

3. சாதிக்க முடியாததைக் கூட சாதிக்க முடியும். தன்னம்பிக்கை எனும் மனோ சக்தியால்.

4. எந்த ஒரு சமுதாயம் தன் சுற்றத்தை விட்டு பிற நாட்டுடன் கூட்டுறவு வைத்துக் கொள்ள பயப்படுகிறதோ அதன் வீழ்ச்சி எதிர்பார்க்கக் கூடியதே.

5. தலைவனை தேட முடியாமல் போனாலும் போகட்டும் அதற்காக நீங்கள் உங்களுடைய காரியத்தை நிறுத்தாதீர்கள். நாளடைவில் நீங்களே தலைவனாக வந்துவிட முடியும்.

6. உண்மையான நண்பனாக இரு – அல்லது உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ பாதி நம்பிக்கை  உடையவனாகவோ இருக்காதே!

7. இறைவன் நமக்கு செல்வத்தை கொடுக்க வில்லையே என்று கவலைப்படாதே. நமக்கு உயிர் எனும் பெரிய செல்வத்தை கொடுத்திருக்கிறான். அதனைக் கொண்டு எதையும் சாதிக்கலாம்.

8. எந்தச் செயலும் செய்யாமல் பயனற்றுக் கிடக்கும் மனிதர்கள் உயிரற்றவர்கள். அவர்கள் வெறும் புழுப் பூச்சிகளை போன்று இந்த உலகத்தில் இருப்பார்கள் சரித்திரத்தில் இடம் பெற மாட்டார்கள்.

9. உயர்ந்த சிந்தனைகளின் வழியாகவும் சளையாத உழைப்பினாலும், பயனற்றுப் போகும் வாழ்க்கையை, அழியாத ஒரு இலட்சியத்திற்கு தாய் நாட்டின் விடுதலைக்காக ஈடுபட செய்ய வேண்டும். அதுவே நம் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்.

10. ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்காது போனால் அரை நிமிஷங்கூட நாம் இவ்வுலகில் வாழ்வை நடத்த முடியாது. இந்த மனித சமூகம் அத்தகையதோர் ஒற்றுமை இராவிட்டால் கட்டாயம் அழிந்தேவிடும்.

இதுபோல் பல உன்னதமான தலைவர்களின் பொன்மொழிகள் படிக்க,

பாரதியார் பொன்மொழிகள் | Bharathiyar quotes in tamil

சாக்ரடீஸ் பொன்மொழிகள் | Socrates quotes in tamil

Leave a Comment