காதல் கவிதைகள் | kadhal kavithaigal

இந்த பதிவில் நம் இணையதளத்தை படிக்கும் நபர் எழுதிய புதிய காதல் கவிதைகள் தான் இப்பொழுது காண போகிறோம்.

மற்றும் இவர் என் நண்பர் இவர் பெயர் கிருபா. சரி வாருங்கள் பார்ப்போம்.

அழகான காதல் கவிதைகள்

​​உன் முகம் பார்த்தால் இதழ்கள் சிரிக்கிறதோ, இல்லையோ! இதயம் நிச்சயமாய் சிரிக்கிறது!

நீ பருகிய தேநீர் சுவை வேண்டி விண்ணப்பம்! ஒலியற்ற மொழியில் பதில் கூறுவாயா!

மழை கண்ட மயிலும், கோபம் தணிந்த அவளும், மயிர்க்கூச்செடுக்கும் காரணிக்கு சிறந்த உவமைகளே காதலிசம்.

அன்பே நீ அருகில் இல்லா நேரத்தில் உன் நினைவுகள் எல்லாம் வரிசை கட்டிக்கொண்டு வழிமறிக்கிறது! வழிப்பறி கொள்ளையன் போல் என்னை களவாட!

கொஞ்சமாய் வெட்கப்படு உன் சிவந்த கன்னம் கண்டு இரவும் சிவந்துவிடப் போகிறது. ஏனோ விடியல் சற்று தாமதமாய் வரட்டும்.

காதல் கவிதை எழுத நினைக்கும் போதெல்லாம் காதலி முகம் நினைவு கொண்டு கவிதை மறக்கிறேன்! அர்த்தமில்லா கவிதைக்குள் அர்த்தமுள்ள நீ.

இன்று எப்படி யோசித்தாலும் வரிகள் வரிசை அமைக்க மறுக்கின்றன. சிந்தையில் உன் சித்து விளையாட்டு கண்ணே.

கருமேக போர்வைக்குள் உறக்கம் கொண்ட நிலவாய் அவள்! இரு விழிகள் போதாது ஓராயிரம் விழிகள் கொண்டு விண்மீனாய் இரவு முழுவதும் அவளை ரசித்தபடி! விடிந்ததும் நான் ஆதவனாய் அவள் என்னுள் கரைந்த நிலவாய்!

திருட வந்த இடத்தில் திருடப்பட்டேன்! தொலைந்தது உன்னிடம் என்று சொல்ல இதயத்தை விட்டு வந்துள்ளேன். முகவரி அறிந்து தபால் செய் காத்திருப்பேன்.

நீயும் உன் கம்மலும் என் பார்வைகள் அலைபாய்கிறது என்று கிண்டல் செய்கிறாய்! உன் கம்மல்கள் எனக்கு எதிரி ஆகும் வரை நானும் உன் விழி வழியே!

​​நான் இரவின் நாயகனும் அல்ல! நீ இரவின் நாயகியும் அல்ல! இருப்பினும் கதாபாத்திரம் ஏற்று நடத்தோம் கனவு இயக்குனரிடம்.

​​காத்திருப்பு பட்டியலில் நானும் சூரியனும் உன் வீட்டு வாசலில்! உறக்கம் கலைந்து வரும் உன் விழிகளுக்கு யார் முதலில் சொந்தக்காரர்கள் என்னும் போட்டியில்.

​​எனக்கான கவிதை என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும்! இந்த இரவு கூட அழகு தான்.

எழுத்துப் பிழைகளை நீக்க முடியாமல் குழம்பி நிற்கிறேன்! நான் வர்ணிப்பது உன்னை என மறந்து!

​உன் உதட்டுச் சாயத்தில் உறைந்து நிற்கும் என்னை உன் கண்மை கொண்டு விழிக்கச் செய்.

​​உன்னில் வினா எழும்போதெல்லாம், ஏன்? என் தொலைபேசி எண்ணை தொந்தரவு செய்கிறாய்? உன் வினாவிற்கான விடைக்காகவா? இல்லை வினாவே நான்தான் என்பதற்காகவா? 

இன்று இந்த இரவும் நானும் உறக்கம் தொலைந்த விழிகளுடன் உன் நினைவுகளால்.

​​நல்லதாய்ப் போயிற்று நீ என்னை நேர் பார்வையில் பார்க்கவில்லை! ஏனெனில், உன்னுடைய ஓரவிழிப் பார்வைக்கே ஓராயிரம் செல்கள் என்னுள் சிதறி விட்டன.

​​என் உறக்கம் திருடப்பட்டது! என் உறக்கம் திருடிய முகவரி யார் என்று பார்த்தால், உன் வீட்டு முகவரியை காட்டுகிறது!

​​அணு ஓட்டத்தை தேடி படித்தவன் நான்! ஆனால் இன்றோ, அணு நேரமும் உன்னோட்டத்தை தேடித் திரிகிறேன்!

​​நீ நினைக்கும் போதெல்லாம் விக்கல் வரும் என்றாய்! இப்பொழுது நீ நினைத்துக் கொண்டே இருக்கிறாயோ? விக்கல் இருமலாய் மாறிப்போனது!

​​தேடுவாய் என்று தெரிந்துதான் தொலைந்தேன்! தேடாமல் இருந்து விடாதே.

​​காக்க வைத்தது என்னவோ நீ காத்திருப்பை உடைத்தது என்னவோ நான்.

​​நானோ மின்னணுவியல் ஆசிரியர்! அவளோ என்னுள் மின் அணுவை செலுத்தும் ஆசிரியை, அவள் விழிகளால்.

​​என் இதழ்களின் ஓய்விடம் உன் கன்னங்கள்.

​இரவுகள் தூங்க மறுக்க உன்னைப் போன்ற நிலவுகளும் ஒரு காரணம்தான்.

​​️சினுங்கி சிரிக்கும் உன் செல்லச் சிரிப்பில் சிக்கிக் கொண்டவனை போல் நான் உன் காதலில் தவிக்கிறேன்.

உன் வீதி உலாவிற்கு வானில் மேகங்களும் தப்பவில்லை.

ஒளிரும் கருமையாய், என் எழுதுகோல் இனிமையாய் உன் மச்சங்கள்.

​​மூன்றெழுத்து வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் புதிர் நீ! காதல்.

​​அன்று விரும்புகிறாய் என்று தெரிந்து தொலைத்தேன்!இன்று விரும்புகிறேன் நம் தொலைத்ததை!

​​என் கன்னம் என்னும் காகிதத்தில். உன் செவ்விதழ்களின் கிறுக்கல்கள்.

​​மங்கையவள் விழியில், ஆணின் வெட்கம் பூமி தொடும் முதல் மழைத்துளி  போல்.️ பூமி அறிந்ததை அவள் மட்டும் அறிவாள்.

​​இன்று என் வீட்டு வாசலில் நியூட்டனின் விதி தோற்றுவிட்டது ஏனோ?என்னவளுக்கும், தீப ஒளிக்கும் நடந்த போட்டியில்.

​​கவிதை யோசித்து ஓய்ந்து விட்டேன்! முடிவில் உனக்கான வரிகளாய் முற்றுப் புள்ளிகளே.

எழுதியவர் – கிருபா

 மேலும் பல கவிதைகளைப் படிக்க கீழே காணுங்கள்,

நட்பு கவிதை

அன்பு கவிதைகள்

Leave a Comment