இந்தப் பதிவில் கருணையின் தாயாக மட்டும் அன்பின் அன்னையாக விளங்கும் அன்னை தெரேசா அவர்களின் பொன்மொழிகளை தான் காணப்போகிறோம்.
அன்னை தெரசா பொன்மொழிகள் | Mother Teresa quotes in tamil
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள் அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்குத் திரும்பிக் கிடைக்கும்.
மற்றவர்களை எடைபோடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போகும்.
வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை.
நீ வாழ, பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.
எந்தவொரு மெழுகுவர்த்தியும் இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதால் அணைந்து விடுவதில்லை. எனவே, பிறருக்கு உதவுவதை நிறுத்தி விடாதீர்கள். ஏனெனில் அது ஒன்றுதான் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்.
மனம் விட்டு பேசுங்கள், அன்பு பெருகும்.
இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.
உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
இந்த உலகில் நாம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எப்படி அன்பைச் செலுத்த முடியும்?
உங்கள் வெற்றி என்பது, என்ன செய்கிறீர்கள் என்பதைவிட, உங்கள் கனவை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான்.
பகைமையை வளர்க்காதீர்கள் மன்னியுங்கள். பிறரின் தவறை நீங்கள் மன்னித்தால் இறைவன் உங்கள் தவறுகளை மன்னிப்பான்.
இறக்கத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.
தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.
உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
திறமை மலைகளையே நகர்த்தும்.
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் மீது உனக்கு அன்பு செலுத்த நேரம் இருக்காது.
என்னால் முடியாதது உங்களால் முடியும் உங்களால் முடியாதது என்னால் முடியும் இருவரும் இணைந்தால் எல்லாம் முடியும்.
பிரார்த்தனை செய்யுங்கள்! கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். ஆனால் சேவை செய்து பாருங்கள் கடவுள் உங்கள் அருகில் வருவார்.
நம்முடைய உண்மையான தேவைகளைக் கடவுள் மட்டுமே அறிவார்.
சக மனிதருக்கு உதவுவது ஆண்டவனுக்கு உதவுவதாகும். எனவே எச்சமயத்தாரும் ஏழைகளுக்கு உதவத் தயங்கக்கூடாது.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்லவை!
அன்பு செலுத்துங்கள் காலம் மிக குறைவாக இருக்கிறது.
ஒரு செயலைச் செய்வது வெற்றியல்ல, அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி. எதையுமே சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்.
மேலும் நம் அன்னை தெரேசா கூறிய வரிகளைப் போல் மேலும் பல பொன்மொழிகளை படிக்க கீழே காணுங்கள்,