Ambedkar quotes in tamil – இந்தப் பதிவில் சாதியை எதிர்த்து மற்றும் சட்ட மேதையான டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொன்மொழிகள் தான் காணப்போகிறோம்.

டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் | Ambedkar quotes in tamil
நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது என் கடமை.
பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்.
ஒரு இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
எப்போதும் ஊக்கமாக சமூகசேவை செய்தால் உங்கள் முன்னோர்களால் சாதிக்க முடியாததை உங்களால் வெகு சுலபமாகச் சாதிக்க முடியும்.
தீண்டாமை என்பது சாதித் துவேஷத்தில் இருந்து வளருகிற ஒன்று. சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பதென்பது நடக்கக் கூடியதல்ல.
சாதியை உடைப்பதற்கு உண்மையானத் தீர்வு கலப்பு மணமே. வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது.
ஒரு தேசத்தின் ஒற்றுமை என்பது அதன் ஆன்மீக ஒற்றுமையே. இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இனத்தவரே.
ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
பணம், பட்டம், பதவிகளுக்காக நாம் போராடவில்லை, நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காவும், மனிதர்களாக வாழ்வதற்காவுமே போராடுகிறோம்.
தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைப் போல தரணியில் மோசமானவன் எவனுமில்லை.
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!
மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது!
குருட்டு பக்தி தன்னறிவை இழக்கச் செய்யும், பகுத்தறிவை பயன்படுத்தாமல் யாருடைய வாக்குறுதியையும் நம்பக்கூடாது.
இலட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்கு பதிலாக, கட்டளைக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகிவிடுகிறது.
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்.
சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!
மனித சமுதாயம் சட்டத்தின் மூலம் கட்டுப்பட வேண்டும் அல்லது அறத்திற்குக் கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் மனித சமுதாயம் சுக்கு நூறாக உடைந்து போகும்.
ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.
வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்.!
உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்… அவர்களும் குடிமக்கள்தான்; ஆனால், குடிமக்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் கட்டிய வரியிலிருந்து பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பள்ளியில் அனுமதிக்க முடியவில்லை. அவர்கள் கட்டிய வரிப் பணத்திலிருந்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால், அவர்கள் அந்தக் கிணற்றிலிருந்து குடிதண்ணீர் எடுக்க முடியாது.
உங்களுடனான எங்கள் சமாதானம் எம் சந்ததியருக்கு யாம் கொடுக்கும் ஒரு கோப்பை விஷம். ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு!
இந்து சமூகம் என்பது ஒரு கோபுரம் போன்றது. அதன் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், இந்தக் கோபுரத்துக்குப் படிக்கட்டுகள் கிடையாது. ஆகவே, ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு ஏறவோ இறங்கவோ முடியாது. ஒருவர் எந்தத் தளத்தில் பிறந்தாரோ அந்தத் தளத்திலேயே மடிகிறார். கீழே உள்ள தளத்தைச் சேர்ந்தவருக்கு எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் அவர் மேலே உள்ள தளத்துக்குச் செல்வதற்கு எந்த வழியும் இல்லை. அதேபோல், மேலே உள்ள தளத்தைச் சேர்ந்தவர் எந்தத் தகுதியும் திறமையும் இல்லையென்றாலும் அவரைக் கீழே உள்ள தளத்துக்கு இறக்குவதற்கு எந்த வழிவகையும் இல்லை.
இந்த வலைதள பதிவு போல் மேலும் பல சிறந்த பொன்மொழிகளை படிக்க கீழே,