காதல் தோல்வி கவிதைகள் | Love Failure quotes in tamil

Love failure quotes in tamil – இந்தப் பதிவில் காதலில் தோல்வி அடைந்தவர்களுக்காக காதல் தோல்வி கவிதைகளை பதிவிட்டுள்ளேன்.

அனைவரது வாழ்க்கையிலும் காதல் தோல்வி ஏற்பட்டிருக்கும் அந்த வலிகளை உணர்த்தும் வகையிலும் மற்றும் காதல் கேள்வி அடைந்தவர்களின் வழியைக் கூறும் வகையிலும் கவிதைகள் இருக்கக்கூடும்.

Love Failure quotes in tamil

காதல் தோல்வி கவிதைகள் | Love Failure quotes in tamil

எனக்கான அடையாளம் தந்தவளும் அவளே அதையே இன்று தேட வைத்தவளும் அவளே.

யாராலும் கொடுக்கமுடியாது அன்புதான் உன் காதல் அதனால்தான் என்னால் மறக்க முடியவில்லை.

மனம் விட்டு பேச எத்தனையோ இருக்கு ஆனா கேட்க தான் நீ அருகில் இல்லையே.

யார் இருந்தாலும் இல்லாத உன்னை தான் சொந்தம் கொண்டாட ஆசைப்படுகிறது மனசு.

என் ஏமாற்றத்திற்கு நீ காரணம் இல்லை நான் உன் மீது வைத்த அதித எதிர்பார்ப்பே காரணம்.

போய் வருகிறேன் என ஒரு பொய்யாவது சொல்லி விட்டு போ உன்னை எதிர்பார்த்தே என் காலத்தை கழித்து கொள்கிறேன்.

மனதில் ஓரத்தில் உடைந்த படகாய் கரை ஒதுங்கியது நீ உடைந்து போன காதல் மிதவை.

காதலில் உளறும் எல்லா வார்த்தைகளும் அழகுதான் ஆனால் ஏனோ ஒரு சில வார்த்தைகள் காதலை அணு அணுவாய் கொள்கிறது.

நிஜத்தில் வேணாம் நீ கலைந்து போய் இருக்கலாம், ஆனால் என் கனவில் நீ ஒருபோதும் கலைய மாட்டாய்.

ஒளிந்து வைக்க தெரிந்த என் மனசுக்கு இன்னும் உன்னை மறக்க தெரியவில்லை.

எண்ணம் போல் வாழ்க்கை அமையவில்லை என்றாலும் என் எண்ணத்தில் என்றும் வண்ணம் நீ தான்.

நீ இன்று வாழ முடியாது என்ற நிலைக்கு அழைத்துச் சென்ற பின் தான் தட்டி விட்டு செல்கிறது இந்த காதல்.

நீ விரும்பி நான் விரும்பாதது நமக்குள் ஒன்றே ஒன்று தான் அது நம் பிரிவு.

வாழும் காலத்தில் வாழமுடியாமல் வாழ்ந்த காலத்தை தேடி திரிகிறேன் உன் நினைவுகளை சுமந்தபடி.

போகும்போதே நீயே என்னைக் கொன்று போயிருக்கலாம் உன் நினைவுகள் இப்பொழுது என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொள்வதைக் காட்டிலும்.

அரும்பாகி மொட்டாகி பூவாகி உதிர்ந்து சருகாய் போவதில் காதலும் மலரும் ஒன்றுதான்.

நினைத்ததை விட அதிகமாக உணர வைத்து விட்டாய் உன் பிரிவால் காதலை.

உன் நினைவுகள் என்றும் அணையா விளக்காய் இருக்கும் என் உயிர் உனக்காக.

நிஜமாக அருகில் இருந்தாலும் மனதளவில் ரொம்பவும் விலகி சென்று விட்டாய் காதலே.

இந்த ஏமாற்றத்திற்கும் வலிக்கும் காரணம் நான் அன்று உனக்காக என்னை மாற்றிக் கொண்டது.

என் காதல் இணையாது என்று தெரிந்தும் சேர்த்து வைத்து கொள்கிறது இந்த கனவும் கற்பனையும்.

எளிதாக நீ என்னை விட்டு மறைந்து கொண்டாய் அப்படியே என்னிடம் சொல்லிவிட்டு போய் இருக்கலாமே.

எரிந்தாலும் சேர்ந்து எரியும் நெருப்பாய் உன் ஞாபகங்கள் என்னோடு.

பலவித மாற்றங்களில் என்றுமே மாறாத மாற்றமாய் இருக்கிறது உன் நினைவுகள் மட்டுமே.

தொடமுடியாத தூரத்தில் இருந்தாலும் என்னை கட்டி அணைத்துக் கொள்கிறது உன் உணர்வுகள்.

நீ தயக்கமின்றி தந்த முத்தம் எல்லாம் இப்பொழுது தயக்கத்துடன் என் விழி முன் வந்து வந்து போகிறது.

மகிழ்ச்சியான தருணங்களில் எது என் உண்மையான மகிழ்ச்சி என்று புரிய வந்தது உன் பிரிவுக்கு பின்னால்.

மகிழ்ச்சியான தருணங்களில் அதை பகிர்ந்து கொள்ள நீ இன்றி மகிழ்ச்சியை உணர முடியாமல் தவிக்கிறேன்.

பெரியதாய் காரணம் ஒன்றும் இல்லை உன் பிரிவு ஒன்றை தவிர என் வலிகளுக்கு.

உண்மைக்கும் உண்மைக்கும் இடையில் இதுவரை எந்தவித குறையும் இன்றி உன் நினைவுகள் துணையோடு அமைதியாய் என் தேடல்.

உன் நினைவுகளால் மட்டும் வாழும் நான் உன்னை எப்படி மறவேன்.

சுமக்க முடியாத சுமைகள் எல்லாம் ஒன்றும் இல்லை உன் நினைவுகளுக்கு முன்னாள்.

கனவிலும் நினைவிலும் நாம் எப்பொழுதும் ஒன்றாக இருப்பதால் தான் நிஜத்தில் தனித்து இருக்கின்றோம்.

என் கண்ணுக்குள் கண்ணீர் இல்லை உன் உதட்டுக்கும் உருவம் இல்லை நீ சொன்ன ஒரு சொல்லால் எல்லாம் சிதைந்து போனது அதன் உருவம் மாறி.

தினம் தினம் உன் தேடல்கள் வந்து வந்து போகும், உன் நினைவுகள் எல்லாம் என்னை வாட்டி வதைக்கின்றது நான் உன்னை ஆழமாக நேசித்ததால்.

சின்ன சின்ன ஆசைகள் ஆல் உன்னை சித்திரமாய் வரைந்து வைத்திருந்தேன் என் இதய கூட்டுக்குள் நீ என்னை விட்டு பிரிந்ததால் இறகு இன்றி ஓவியம் பறக்க முடியாமல் தவிக்கின்றது.

செல் அரிக்கும் கல்லறை போல என் உள்ளுக்குள் அரிகின்றாய் இன்னும் சில நாட்களில் என் உடல் காணாமல் சென்று விடும்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்றுவிட்டது கானல் நீருக்குள் உன் காதலை தேடிக்கொண்டே இருக்கின்றேன் இனியும் தேடுவது தொடராது உயிரே என்னை நானே தொலைத்து விட்டு தேடுவது போல உள்ளது.

என்னை உருகி உருகி நேசித்த ஒரு நிழல் எனை மறக்க பார்க்கிறது அதன் நிழலுக்குள் மறைந்து போக எனக்கும் சம்மதமே.

நிலையான நினைவும் இல்லை சுகமான கனவும் இல்லை எதுவும் இப்போது என் நினைவில் இல்லை எல்லாம் உன் பிரிவால் வந்த காதல் வலி தான்.

வானத்தைத் தொட்டு தொட்டு பார்க்கின்றேன் உன் உருவம் வந்து செல்லுமோ என்று எந்த உருவமும் வரவில்லை உன் கைகள் மட்டும் தேடிக் கொண்டே இருக்கின்றது வெறும் காற்றை.

வலிகள் ஆயிரம் இருக்கும் அழத்தான் வார்த்தைகள் இல்லை என் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் மட்டும் வலிக்கின்றது என் வலிகளாக நீ பிரிந்து சென்றதால்.

மேலும் இது போன்ற கவிதைகளை கீழே கொடுத்துள்ளேன் மறக்காமல் படியுங்கள்.

காதல் கவிதைகள்

அன்பு கவிதைகள்

Leave a Comment