அப்துல்கலாம் பொன்மொழிகள் | Apj Abdul Kalam Quotes in tamil | Abdul Kalam ponmoligal

Abdul kalam quotes in tamil – இந்தப் பதிவில் நம் இந்தியாவிற்கும் மற்றும் நம் தமிழ்நாட்டிற்கு பெருமை வாங்கித்தந்த ஐயா டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகளை தான் காணப் போகிறோம்.

ஐயா டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் ஆவார் மற்றும் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, ஆசிரியர் மற்றும் சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர் எனப் பல பணிகள் புரிந்துள்ளார்.

ஐயா அப்துல் கலாம் அவர்கள் இந்திய அறிவியல் தந்தை எனவும், இந்தியாவின் ஏவுகணை நாயகன்எனவும் அன்னை அனைவராலும்  அழைக்கப்படுவார்.

சரி வாருங்கள் அப்துல் கலாம் ஐயா கூறிய சிறப்பான பொன்மொழிகள் பார்ப்போம்.

Abdul kalam quotes in tamil

அப்துல்கலாம் பொன்மொழிகள் | Abdul kalam quotes in tamil

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.

ஒரு நல்லப் புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம். ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம்.

நீ அழுது உன் தாய் சிரித்த தினம் உண்டெனில் அது உன் பிறந்த நாளாக மட்டுமே இருக்கும்.

வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

கிளி வளர்த்தேன் பறந்து விட்டது. அணில் வளர்த்தேன் ஓடி விட்டது. மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்து விட்டது.

பயந்தால் வரலாறு படைக்க முடியாது.

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால் ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.

துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.

உன் கைரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.

உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்.

நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.

உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!

சோதனைகளை மீறிய சாதனையில்தான் மகிழ்ச்சி இருக்கிறது!

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் அதை வென்று விடலாம்.

என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

இந்த‌ உலகத்தில் பிறந்த‌ அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த‌ பக்கத்தை இந்த‌ உலகையே படிக்க‌ வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

ஒருமுறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் இலட்சியம்!

கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.

மாணவர்களின் மிக முக்கியமான இலக்கணம், கேள்வி கேட்பதே.

தோல்விகளை எதிர்கொள்ள  கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.

தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது. ஒரு இலக்கை நோக்கி செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

உன் வாழ்வினுள் வரும் அனைத்து சங்கடங்களும் உன்னை அழிக்க வரவில்லை, உன் திறைமையயும் மற்றும் உள்மன சக்தியையும் வெளிபடுத்த ஒரு வாய்ப்பை அளித்து செல்கிறது.

சவாலுக்கே தெரிவியுங்கள், நீங்களும் வீழ்த்தமுடியாத ஒரு சவலானவர் தான் என்று.

பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.

உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள். பறக்க கற்றுக் கொள்ளுங்கள். உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.

முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்!

நாட்டின் மிகசிறந்த மற்றும் திறைமை மிக்க மூளைகள் பள்ளியறையின் கடைசி பெஞ்சில் இருக்கதான் வாய்ப்பு அதிகம்.

வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போக வேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!

தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.

அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த இலட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!

இளைஞர்களின் அறிவுச் சுடரை ஏற்ற வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு.

நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவரும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட அவன் இதயத்தைக் கொள்ளை கொள்வது சிறந்தது!

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.

காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!

உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே பறந்து செல்லுங்கள்.

நீ செல்லும் பாதைகளில் தடைகள் ஏதும் இல்லை என்றால் அது நீ செல்லும் பாதை அல்ல, யாரோ ஒருவர் சென்ற பாதை.

வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம். ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உண்மையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!

அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.

நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.

சரியான காரியத்தை செய்ய எளிமையான வழி என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். தாயின் முகத்தில் புன்னகை அரும்ப செய்யும் காரியத்தை செய்யுங்கள். அதனை நேர்மையாகவும், கடின உழைப்புடனும் செய்யுங்கள்.

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது.

ஒருநாள் நிச்சயம் விடியும். அது உன்னால் மட்டும் முடியும்.

பல்லாண்டுகளுக்கு முன் என்ன செய்தோமோ அதையே மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்வது தோற்கடிக்கப்பட்ட பாதையில் பயணிப்பதை போன்றதாகும்.

மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க துணிவு வேண்டும். தனித்துவமாக இருக்க வேண்டும்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.

ஈடுபாடின்றி வெற்றி இல்லை! ஈடுபாட்டினால் தோல்வியும் இல்லை! சிந்தனை செய்யுங்கள், அதுவே மூலதனம்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலை வேண்டாம்!

வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!

நாம் உடல் நலமுடனும், மன நலமுடனும், மன வலிமையுடனும் வாழ சிரிப்பு அவசியம். அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இசையும், நடனமும் உங்களை மற்றொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். உங்களுக்கு மகிழ்ச்சியும், அமைதியும் தென்றலாக வீசச் செய்யும்.

இந்த பதிவு போல் மேலும் பல சாதனையாளர்களின் பொன்மொழிகள் கீழே கொடுத்துள்ளேன். மறக்காமல் படியுங்கள்,

பெரியார் பொன்மொழிகள்

புத்தர் பொன்மொழிகள்

1 thought on “அப்துல்கலாம் பொன்மொழிகள் | Apj Abdul Kalam Quotes in tamil | Abdul Kalam ponmoligal”

  1. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
    அற்புதமான வரிகள்…

    Reply

Leave a Comment