அழகான காதல் கவிதைகள் – Love quotes in tamil

இந்தப் பதிவில் உங்களின் காதல்களை உணர்த்த சில காதல் கவிதைகளை இங்கு பதிவிட்டுள்ளேன். உலகிலேயே மிக அற்புதமான உணர்வு காதல் அதனை வெளிப்படுத்த வார்த்தையால் இயலாது அதனை அழகான சில கவிதைகள் மற்றும் காதல் வரிகள் மூலமாக வெளிப்படுத்தலாம்.

Love quotes in tamil

அழகான காதல் கவிதைகள் – Love quotes in tamil

நினைக்காத பொழுதிலும் காணாத கனவிலும் உணர முடியா உறைந்து போன என் நிஜம் நீ.

உன் வருகையை எதிர்பார்த்து தினமும் உதிர்ந்து கொண்டே இருக்கும் என் காதலும் காலமும்.

அவளும் நானும் இணைந்தால் சிறு துளி மழை கூட இருவருக்கும் அடை மழை தான்.

உன் விரல் கோர்த்து நடக்கையில் எல்லாம் என்னமோ உலகமே என்னை சுற்றி வருவதாய் எனக்குள் வருவதாய் எனக்குள் ஒரு மதிப்பு.

நான் எத்தனை கேள்வி கேட்டாலும் அத்தனை கேள்விகளுக்கும் வெட்கம்,  அந்த வெட்கத்தில் எத்தனை பதில்கள் உள்ளதோ.

நீ என்னை எத்தனை முறை கேட்டாலும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் நீ தானே.

வெட்கத்தை மூடி மறைக்க முடியாமல் உன் அணைப்புக்குள் இடம் தேடி மொத்தமாய் உன்னுள் கரைந்து போகிறேன்.

நிஜமாக நீ தொலைவில் இருந்தாலும் மனதளவில் உன்னோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் காதலே.

 அருகில் இருந்தால் தான் பற்றிக்கொள்ள வேண்டும் அல்ல நீ தொலைவில் இருந்தாலும் என்னை பற்றி க் கொள்ளும் உன் காதல் தீ நீ.

என் கருப்பு வெள்ளை வாழ்க்கையில் மின்னலாய் வந்து ஒளி தந்தவள் நீ.

எப்போதும் தாங்கிக் கொள்ள அவன் அருகாமையில் இருப்பதால் நான் ரெக்கை இன்றி பறக்கிறேன்.

சின்ன சின்ன சண்டையில் இருந்து மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறோம் எங்கள் காதலை.

யார் சொன்னாலும் பிடிக்காத வார்த்தை தான் ஏனோ அவன்  சொல்கையிலே மீண்டும் மீண்டும் கேட்டிட தோன்றுகிறது. போடி!

உந்தன் முகப்பருக்களை உன் முகத்திலேயே விட்டுவிடு பகலிலும் நட்சத்திரங்களை பார்க்கட்டும் இந்த உலகம்.

என் வானவில்லில் மட்டும் எட்டாவது நிறமாக எப்போதும் நீ இருப்பாய்.

காதலில் எதிர்பார்ப்பு இருந்தா அது காதலே இல்லை எதிர்பார்ப்பு இல்லாமல் எதிர்ப்பார்க்காமல் நேரத்தில் வருவதுதான் காதல்.

நீ ரசிக்கும் தருணங்களில் மட்டுமே துள்ளி அழகாய் நகர்கிறது மணித்துளிகள்.

இசைத்தட்டு சுழல்வது போல சூழலும் இவள் விழி சூழலில் மையம் கொண்ட காதல் புயல் நீ.

என் காதலி தரும் ஒரு சிட்டிகை மகிழ்ச்சி வாழ்வின் சுவையை கூட்டி விடுகிறது.

உன் கொஞ்சலில் உன் கொஞ்சலில் உன் என் திமிர் கொஞ்சம் கூடி தான் போகிறது.

இல்லாத கனவெல்லாம் கனவில் வந்து என் உறக்கத்தை களவாடி போகிறது.

வெல்வது நீயாக இருக்கும் எனில் வீழ்வதில் என்றும் எனக்கு சுகமே.

பிரிந்து போனாலும் அன்பு போகாது உன் மீது கொண்டது காதல் அது மோகம் அல்ல.

பிரமித்துப் போனேன் என்னிடம் மட்டுமே கோபப்படும் அதீத அன்பை பார்த்து உணர்கையில்.

மீண்டு மீண்டு மீண்டும் தொலைந்து போக ஆசை உன்னுள்.

உயிராய் உணர்வாய் என்னோடு கலந்து விட்ட உன்னை உடலால் மட்டுமே பிரிந்து செல்ல முடியும்.

தொல்லையாக தான் இருக்கு தொல்லை செய்யாமல் நீ தொலைவில் இருப்பதால்.

முடிவில்லாத பயணமாய் அவளுடன் கனவிலும் நினைவிலும்.

நினைவில் பூக்கும் துளியில் கூட என் தேகம் எங்கும் உன் வேர்வை வாசமே.

உன்னைத் தவிர எதையும் ரசிக்க மனம் வரவில்லை ஏழு அதிசயமாக இருந்தாலும் கூட.

நீ அருகில் இருந்தாலே மெல்லிசையாக கேட்கும் பாடல் கூட துள்ளல் ஆய் ஒரு ஆட்டம் போட மனம் ஆசைப்படுகிறது.

எதைப் பார்த்தாலும் உன்னைப் போலவே தெரியும் என் காதல் பிழை நீ.

அன்பே கொஞ்சம் பேசினாலும் கொஞ்சி பேசிடு.

வலிகள் கூட என் தேவையில் ஒன்றாகிப் போனது உன் அரவணைப்பில் உருகி கரைந்திட.

தீராத நேசம் தீராத மோகம் என்றும் என் நீயே. நீ இரவாய் நான் விடையே இல்லாத நம் காதலில்.

அடுக்கடுக்காக கட்டி வைத்த ஆசை முட்டைகள் கொட்டி தீர்க்க காத்திருக்கிறது உன் கண் அசைவுகாக.

இன்று அல்ல என்று உன்னை உன்னை கண்டேனோ அன்றோ போனது தான் இதுவரை கிடைக்கவில்லை என் இதயம்.

காதல் நம்மளை எந்த அளவிற்கும் இறக்கி அளவிற்கும் அதேபோல் காதல் நம்மளை எந்த அளவிற்கு முன்னேற்றி அழகு பார்க்கும்.

உன்னை காணாமல் நான் வருந்தி கவிதைகள் எழுதினேன் ஆனால் கவிதைகளில் உள்ள வார்த்தைகளோ உன் அழகு காணாமல் வருந்துகிறது.

நான் அன்பை எவரிடத்தில் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் ஆனால் காதலி ஒருவரிடத்தில் மட்டும் தான் பகிர முடியும்.

எதையும் எதிர்க்கும் என் மனது நீ ஒரு நிமிடம் பேசாமல் இருப்பதை எதிர்கொள்ள முடியவில்லை.

உன் மனதை அறிய ஆசைப்பட்டேன் ஆனால் என் மனதை மற்றவர்கள் புரிந்து கொண்டனர் மற்றவர்களிடம் ஆறுதல் கேட்டதால்.

நீ என்னிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைத்தேன் அது என்னுடைய அன்பு அப்பொழுது தெரியவில்லை அது உன்னுடைய சுதந்திரம் என்று புரிந்தும் உனக்கு தெரியவில்லை அது என்னுடைய அன்பு என்று.

உன் கரம் பிடிக்க ஏங்கினேன் ஒரு முறை அல்ல எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா வயதிலும்.

யாரென்று தெரியாதவர்களுக்கு கிடைக்கும் அன்பு கூட முன்பு காதலித்து அவர்களுக்கு கிடைப்பதில்லை இதுதான் காதலின் ஆழம்.

உன்னை கண்டும் காணாமல் செல்கிறேன் ஆனால் உன் மனதிற்கு நடிக்கத் தெரியவில்லை வலிக்கின்றது.

நான் உன்னை வெறுத்து போல நடிக்கிறேன் ஆனால் என் மனதிற்கு நடிக்கத் தெரியவில்லை நீ என்னை வெறுத்தாலும் உன்னை நான் ரசிக்கிறேன் உன் கண்ணில் காதல் தெரிவதால்.

சிப்பி நான் முத்து நீ கடலாய் நம் காதல் விழி நீ மொழி நான் மௌனமாய் நம் உரையாடல்.

Romantic love quotes in tamil

குடை பிடித்தும் நனைந்துவிட்டது அவள் இதழுலுக்குள் என் இதழ்கள்.

என் கூட்டில் உன் சூட்டின் கதகதப்பும் என்னாளும் வாழ்ந்திடவே நினைக்கிறேன்.

உன் மூச்சுக்காற்று பட்ட இடமெல்லாம் அனலாய் கொதிக்கிறது உன் சீண்டலும் தீண்டலும் இன்றி அணையாமல்.

கொடுப்பதை விட வாங்குவதே மிக மகிழ்ச்சி கூடியது அன்பாக இருந்தாலும் சரி மொத்தமாக இருந்தாலும் சரி.

எட்டி நின்று நீ பார்க்கும் போதெல்லாம் கிட்டவந்து கொஞ்ச சொல்கிறது உன் அழகு.

குரு குரு பார்வை அப்படி என்னை பார்க்காதே மறுபடியும் என் குறும்புத்தனங்கள் முதலில் இருந்து தொடங்கி விடும்.

அன்பே உன் வெட்கத்தை ரசிப்பதற்காகவே உன்னை சீண்டிப் பார்க்கத் தோன்றுகிறது.

நீ தந்த காயங்கள் எனக்கு வலிக்கவில்லை மாறாய் தித்திக்கிறது இதழ்களில் விழுந்ததால்.

பசியே எடுப்பதில்லை நீ அருகில் இருந்தால் பசி அடங்குவதில்லை.

உன்னை ரசிக்கும் போது துளித்துளியாய் தேனீர் சுவைக்கும் ஜென் துறவியின் மனநிலையை உணர்கிறேன்.

உறக்கம் கலைந்து விழிக்கும் போது நீ உறங்கும் அழகை பார்த்து ரசிப்பதற்காகவே பின் தூங்கி முன் எழுந்த நாட்களின் நினைவுகளை போதையுடன் மடித்து வைத்து எழுகிறேன்.

கொடுக்கத் தவறிய முத்தம் ஒன்று கூட்டி கொண்டு இருக்கிறது தனது வட்டி கணக்கை.

உதட்டு சாயத்தை கலைத்த அவனே அதை மீண்டும் முத்தத்தால் மீட்டு தா.

மேலும் சில காதல் சம்பந்தமான கவிதைகள் மற்றும் பொன்மொழிகளை கீழே கொடுத்துள்ளேன் அதையும் மறக்காமல் படித்து பாருங்கள்.

காதல் கவிதை | Kadhal Kavithai in tamil

காதல் தோல்வி கவிதைகள் | Love Failure quotes in tamil

2 thoughts on “அழகான காதல் கவிதைகள் – Love quotes in tamil”

Leave a Comment