வாழ்க்கை தத்துவங்கள் | Valkai thathuvam

Valkai thathuvam – நம் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் மகிழ்ச்சிகள் என அனைத்துமே இருந்திருக்கும் இது அனைத்தும் நமக்கு பல அனுபவங்களை கற்றுத் தந்திருக்கும். இந்த அனுபவத்தை எல்லாம் இந்த பதிவில் அழகான வாழ்க்கைத் தத்துவங்களாக பதிவிட்டுள்ளேன்.

Valkai thathuvam

வாழ்க்கை தத்துவங்கள் | Valkai thathuvam tamil

சில கனவுகள் நிஜமாக எண்ணி மகிழ்வதும், சில விஷயங்களை கனவாக எண்ணி மறுப்பதும் தான் வாழ்க்கை.

சில நொடி தவறுகள் வாழ்க்கையின் பெரும்பகுதி கண்ணீருக்கு காரணம் ஆகின்றது.

என்னடா வாழ்க்கை? என்ற காலம் மாறி, எங்கடா வாழ்க்கை என்ற காலம் ஆனது.

பூமிக்கு அடியில்  இடம் பிடிக்க பூமிக்கு மேல் நடக்கும் போராட்டங்கள் தான் வாழ்க்கை.

தன்னைத்தானே வருத்திக் கொள்பவர்கள் கோழைகள் அல்ல. மனதில் உள்ள வலிகளை பிறர் மீது திணிக்கத் தெரியாதவர்கள்.

இவர்கள் ஏன் இப்படி? என்று நினைப்பதை விட, இவர்கள் இப்படி தான் என்று விலகி விடுவது நிம்மதி.

ஓரிடத்தில் நீ அவமானப்படுத்தப்பட்ட அவ்விடத்திலிருந்து நிரந்தரமாகவே விலகிவிடு. அன்பு, பாசம் என மீண்டும் சேர்ந்து நின்றால், உன் அவமானங்கள் மீண்டும் நிரந்தரமாகிவிடும்.

இனிப்பாய் இருந்தால் விழுங்கி விடுவார்கள், கசப்பாய் இருந்தால் துப்பிவிடுவார்கள், உப்பாய் இருங்கள் அப்போது தான் சரியாய் உபயோகிப்பார்கள்.

வாய்ப்பு என்பது  பரித்துக்கொள்வது அல்ல, திறமையினால் நாம் தேடிக் கொள்வது! அதனால் உன் திறமையை நீ கவனம் செலுத்தி முன்னேறு.

எனது கதை அழுக்காக இருந்தால், இந்த சமூகம் அழுக்காக இருக்கிறது என்று அர்த்தம். என் கதை உண்மையின் பிரதிபலிப்பு மட்டுமே.

எவ்வளவுதான் அழுது தீர்த்தாலும். சில வலிகள், சில காயங்கள் மனதை விட்டு நீங்குவது இல்லை.

நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்தாலும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சற்று ஓரமாய் நில்லுங்கள்.

ஆசைப்படாத மனம் வேண்டும் நிம்மதியான வாழ்க்கை வாழ.

நேருக்கு நேர் எதிர்ப் அவனை கூட நம்பி வீ்டு. குறை கூறுபவனை நம்பாதே.

யாராக இருந்தாலும் சரி, அதிகம் பேசாமல் அளவோடு பேசி வந்தால் அனைவருக்கும் நலம்.

யாரிடமும் உங்களுக்கான நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் அவர்கள் வைத்திருப்பது அவர்களுக்கான நியாயங்களை தான்.

வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால் உன் கால்களால் நடந்து போ, மற்றவர்கள் முதுகில் ஏறி போகாதே.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முள்ளில்லாத கெடிகாரம் போன்றதே, அது நின்றாலும் பயன் இல்லை அது ஓடினாலும் பயனில்லை.

அனுபவங்கள் தான் வாழ்க்கை வாழ்க்கை என்னும் புத்தகத்தை எழுத மிகவும் அவசியம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மற்ற நபர்களுக்கு பகிருங்கள்.

Life quotes in tamil | வாழ்க்கை தத்துவம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular