தன்னம்பிக்கை கவிதை | Self confidence quotes in Tamil

இந்தப் பதிவில் நமது தன்னம்பிக்கையை ஊக்கமூட்டும் சில தன்னம்பிக்கை வரிகளை பார்ப்போம்.

தன்னம்பிக்கை கவிதை | Self confidence quotes in Tamil

“ஒரு நொடி துணிந்தால் வாழ்க்கையை முடித்துவிடலாம். ஆனால் ஒவ்வொரு நொடியும் துணிந்தால் அதே வாழ்க்கையை வென்று விடலாம்.”

“முடிவெடுத்தால் முடியாதது ஒன்றுமில்லை துணிந்துவிட்டால் வெற்றி தூரத்தில் இல்லை.”

“விழுவது தவறல்ல, வீழ்ந்து அப்படியே கிடப்பதுதான் தவறு.”

“யாரிடம் கற்பது? விடாமுயற்சியை கடலிடம் கற்றுக்கொள்! கடமை தவறாமையை கதிரவனிடம் கற்றுக்கொள்! உத்வேகத்தை காட்டாறு பார்த்து கற்றுக்கொள்! சுறுசுறுப்பை தேனீக்களிடம் இருந்து கற்றுக்கொள்! உழைப்பை எறும்புகள் இடம் இருந்து கற்றுக் கொள்! இறுதியாக உன் வாழ்க்கையை நீ வாழ கற்றுக் கொள்!

“போராடும் வரை வீண்முயற்சி என்பார்கள், வென்ற பின் விடாமுயற்சி என்பார்கள்.”

“ஆயிரம் உறவுகள் நம் வாழ்க்கையில் இருந்தாலும் அவரவர் வாழ்க்கையை அவர்கள் தான் எதிர் கொள்ள வேண்டும். அவரவர் மனம் அவரவர் பாதை அவரவர் பயணம் அவரவர் வாழ்க்கை.”

“இன்றைய வலி நாளைய உன் லட்சியத்தின் வெற்றிக்கான அறிகுறி.”

“பேச்சில் நம்பிக்கையும் மூச்சில் நாணயமும் வைத்தால் என்றும் வெற்றி நிச்சயம்.”

“நமக்கு முன்னாடி இவ்வளவு பெரிய சமுத்திரம் இருக்குன்னு கவலைப்படாதே அதுக்கு முன்னாடி நான் மட்டும் தனியா தைரியமா தில்லா நிக்கிறேன்னு சந்தோஷபடு…”

“வலியில் துவண்டு கவலையை சந்தித்து அவமானங்களை கடந்து துரோகம் எதிர்கொண்டு வாழ்கின்ற நாட்களில் துளிர்த்தெழும் புன்னகைகதான் உயிர்களின் ஆகச்சிறந்த நம்பிக்கையின் பலம்.”

“எதிர்காலம் உள்ளங்கை ரேகையில் இல்லை அது உன் உள்ளத்தில் உள்ளது.”

“நேரம் சரியில்லை இது திறமை இல்லாதவன் இன் வெத்து பேச்சு. நேரம் பற்றவில்லை இது வெற்றி வீரரின் உயிர் மூச்சு.”

“வாழ்க்கை சொர்க்கமாக மாறும் நரகம் ஆவதும் அவரவர் கையில்தான் (குணம்) இருக்கிறது.”

“மெதுவாக சென்றாலும் முன்னேறி செல்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.”

“செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான்.”

“தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.”

“ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள் நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்.”

“நம்மை மதிக்காதவர்களை எண்ணி நாம் மனம் வருந்தக் கூடாது, முதலில் நாம் நம் மதிப்பை உணர்ந்தால் தான் தன்னம்பிக்கை வளரும்.”

“தன்னம்பிக்கை இருக்கும் வரை தலைக்கனம் நம்மை நெருங்காது! தலைக்கனம் இருக்கும் வரை தன்னம்பிக்‌கை நம்மிடம் நிலைக்காது!”

“உன்னை நீ இழக்கும் நேரம்… உன்னை கெட்டியாக எட்டி பிடிக்கும் கை நம்பிக்கை அது தான் உந்தன் தன்னம்பிக்கை.”

“எல்லாமே நம்ம நேரம் எல்லாமே நம்ம நேரம் சொல்லும் விதத்தில் தான் உள்ளது (தன்னம்பிக்கை).

“இழந்தது எதுவாயினும் அதைவிட சிறந்தது கிடைக்கும் என்பது நம்பிக்கை, கிடைத்து எதுவாயினும் அதுவே சிறந்தது என நினைப்பது தன்னம்பிக்கை.

“முடியும் என்ற ஒன்றை வார்த்தையில் தான் உயிர் பிரிக்கின்றது இந்த அழகிய வண்ணத்துப்பூச்சிகள்.. #நம்பிக்கை ஒன்றே மாறாததும் மாற்ற முடியாததும்.”

“யார் சொன்னது உனக்கு உதவ யாரும் இல்லை என்று நீ மட்டும் முயற்சி செய்ய பயிற்சி எடுத்தால் காலம் முழுவதும் உனக்குள் குடியிருப்பேன் என்றுமே உதவ இப்படிக்கு உன்னுடைய தன்னம்பிக்கை.”

“வெற்றி என்னும் மைல்கல்லை அடைய துணை செய்யும் மிகச்சிறந்த ஆயுதமே நம்பிக்கை அதை மட்டும் வளர்த்துக் கொள்ள உன்னை முழுவதுமாக தயார் படுத்திக் கொள்.”

“வாழ்க்கையில் பிறந்தோம் இறந்தோம் என்று இருக்காமல் சிக்கல்களை எதிர்கொள்ளும் போது மட்டும் தான் உனது உள் வலிமை  திறமைகள் திறமையை வெளிப்படும்.”

“எத்தனை சோதனைகள் வந்தாலும் இடர்பாடுகள் அங்காங்கே கிடந்தாலும் உனக்கும் மனம் தளராத உழைப்பு ஒன்று இருக்குமேயானால் உன் எண்ணம் அடி நீ உயர்வது நிச்சயம்.”

“நீ அறியாமல் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் நீ பொறுப்பு இல்லாமல் இருக்கலாம் ஆனால் என்று நீ செய்வது தவறு எனத் தெரிந்தது அதை மீண்டும் மீண்டும் செய்கிறாயோ அந்த நிமிடமே நீ செய்யும் அனைத்து தவறுகளுக்கும் நீதான் பொறுப்பு.”

“மேலும் இது போன்ற பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதையும் படித்துப் பாருங்கள்.”

Leave a Comment