Election quotes in tamil | அரசியல் பொன்மொழிகள்

Election quotes in tamil - இந்தத் தொகுப்பில் நம் நாட்டின் அரசியலை பற்றிய தத்துவங்களையும் மற்றும் கவிதைகளையும் காணப்போகிறோம்.


உள்ளடக்கிய தலைப்புகள்

  • political quotes in tamil
  • அரசியல் தத்துவங்கள்
  • அரசியல் கவிதை

election quotes in tamil


அரசியல் தத்துவங்கள் | Election quotes in tamil


1. ஜனநாயகத்தின் கூர்மையான ஆயுதம் வாக்குரிமை அதன் முனை மழுங்காமல் காப்பது நம் கடமை.


2. ஓட்டு என்பது வீட்டை விற்பது போன்றது வீட்டை தொலைத்தால் என்ன கதியோ அதேபோல் ஓட்டை தொலைத்தால் அதே கதிதான் நாட்டிற்கு.


3. ஆளத் தெரியாதவன் கையில் ஆட்சி வலிமை தெரியாதவன் கையில் வாக்குரிமை.


4. ஓட்டு என்பது சொத்து இல்லை விற்கும் உரிமை உனக்கே இல்லை.


5. ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு சின்னமேடா அனைவரும் பணம் தான் கனவேடா.


6. சொல்வதை செய்வோம் என்றார்கள் ஆனால் சொல்லும்படியாக செய்தது யாரும் இல்லை.


7. வந்தாரை வாழவைக்கும் தமிழனுக்கு தன் வாழ்வை இழந்து கொண்டிருப்பது தெரியவில்லை.


8. அறிக்கைகள் வார்த்தைகளை மட்டுமே இனிக்குதடா அது செயலுக்கு வர தங்குதடா


9. கருப்பு காந்தி காமராஜரையே தோற்கடித்தவர் தானே நாம், சிறிதளவாவது சிந்தியுங்கள்.


10. நாளும் நவகிரக தரிசனம் நம் வாசலில் ஆம் ஒன்பது அமைச்சர்களை ஒருசேர பார்க்கலாம் நம் வீதியில்.


11. மாணவன் முதல் மீனவன் வரை மாண்டவர்கள் ஆயிரம் மண்ணை காப்பவனே நம்மையும் காப்பான் என்பதை புரிந்து கொள்.


12. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பார்கள் இங்கே அறத்தினை அழித்தவனே அரசியலில் பிறக்கின்றான்.


13. சிலருக்கு ஆசைப்பட்டு கல்லறைக்கு வழி செய்கின்றனர் சில மக்கள்.


14. ரூபாயில் ஆசை காட்டி கோடியில் வாழத்துடிக்கும் பேராசை காரர்களின் வேட்டை துவங்கியது.


15. புரட்சித் தேவையில்லை என்றால் புரட்சியாளர்களுக்கு வாக்களி விழித்தெழு! தமிழை தமிழனை தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க.


16. விற்கப்படுவது ஓட்டுகள் மட்டுமல்ல வாழ்வுதான் என்பதை உணராத வரையில் அறத்தினை புறம் தள்ளி ஆண்டு கொண்டு தான் இருப்பார்கள் நம்மளை அடிமையாக்கி.


17. ஏழை மக்களே உங்களின் உரிமை இழக்காதீர்கள் மற்றும் உங்கள் உயிர்களை இழக்காதீர்கள்.


18. துவங்கியது தேர்தல் வேட்டை சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும்  ஜாலக்காரர்களின் அற்புத வேட்டை.


19. இங்கே உள்ள அரசியலில் பகுத்தறிவு தூண்டவில்லை, அளிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்.


20. பகுத்தறிவை கையில் எடுத்தார்கள் நமக்கும் சேர்த்து அவர்களே சிந்தித்தார்கள் நம்மை சிந்திக்க விடாமல் வைத்திருப்பதுதான் பகுத்தறிவா.


22. தூக்கி எறியப்படும் ரூபாய் நோட்டுகளில் மறைத்து வைத்துள்ளனர் ஓட்டுக்களை சாமானிய மக்கள்.


23. தமிழனை ஆள தமிழை கையில் எடுத்தார்கள் சிலர் அதில் வெற்றியும் பெற்றார்கள்.


24. சிக்கிக் கொண்டோம் இலவசம் என்னும் பேர் அறைக்குள் மீள்வது எளிதல்ல மகிழ்ச்சியாய் வாழ்வதும் எளிதல்ல.


25. ஓட்டு என்பது வீ்டு போல தான் வீட்டினை விற்றால் நடுத்தெருவில் நிற்பது போல தான் ஓட்டை விற்றால் அதே நிலைமைதான்.


26. நீ காட்டும் நல்லவரை அரியணையில்வை அதற்கெனவே உன் ஆட்காட்டி விரலில் இடப்படுகிறது மை.


27. ஓட்டுப்போடும் உரிமை கூட உயர்ந்தது தான் கருவை போல.


28. சிந்தித்து வாக்களிப்பீர் வாக்குகளில் வாழ்வை இழக்காமல் இருக்க.


மேலும் இதுபோன்று தத்துவங்கள் இங்கு உள்ளது,


பெரியார் பொன்மொழிகள்

ஹிட்லர் பொன்மொழிகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.