pookal kavithai in tamil – இந்த தொகுப்பில் பூக்களின் அழகை வர்ணித்து மற்றும் பூக்களை பற்றிய கவிதையை இங்கு பார்க்கப் போகிறோம்.
pookal kavithai in tamil
1. பச்சை இலை மாளிகையில் பதுங்கி இருந்தாய் மொட்டாக.
2. பகலிலும் நிலா உலா போகும் இரவில் காணாத உன் அழகை காண பூவே.
3. காதலை சொல்லிட கணிதமும் நீதான் பூவே.
4. மங்கையின் கூந்தலுக்கு கிரீடமும் நீதான் பூவே.
5. பவள ஒளி படுகையிலே சட்டென்று மலர்ந்த பூவே.
6. பனித்துளியும் ஆசைகொண்டு உன்மேல் பகல் தூக்கம் போடும்.
7. அழகுக்கு அழகாகிறாய் பெண்ணின் கூந்தல் உன்னை ஏற்கும்போது.
8. காற்றோடு பேசுகிறாய்! உன் வாசத்தை வீசுகிறாய்! உன் புன்னகையால், ஆங்கிலத்தின் அழகை கூட்டுகிறாய்!
9. ரோஜா பூவே என் காதலுக்கு தூதுவராக மாற துடிக்கிறாய் என் காதலியின் கூந்தலுக்குள் இடம்பிடிக்க வருகிறாய்
10. வண்ணத்துப்பூச்சியாய் வசியம் செய்கிறாய் வழியில் படுத்து உண்ணாவிரதம் செய்கிறாய் உனக்காகத்தானே விழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன் என சொல்கிறாய்
11. செங்கதிரவனின் உதிரத்தை குடிக்கிறாய் சேர்த்து வைத்த உயிரை வண்டுக்கு கொடுக்கிறாய் தினம் உன் சினுங்களால் வசியம் செய்கிறாய் என் மனதை!
12. பல வண்ண முகம் காட்டி பஞ்சவர்ண இதழ்கள் விரித்து பஞ்சமின்றி சிரிக்கின்றாய்! நெஞ்சமெல்லாம் இனிகின்றாய்!
13. மனித இறப்பிலும் மலர் மாலையை அழகு சேர்ப்பது நீதான் பூவே.
14. பூத்து விட்ட சோலையில் நீ கொடுத்து வைத்த மாலையில் நீ சேர்த்து வைத்த கூந்தலில் நீ காத்து வரும் கடவுளில் நீ.
15. காற்று வந்து உன் முகம் வருட சற்று நாணம் கொண்டாயோ அங்கும் இங்கும் அசைந்து அழகு நடனம் புரிந்தாயோ
16. பார்த்து ரசிக்கும் அழகு உன்னை பரித்து ரசிப்பது முறையோ காலையில் மலர்ந்த முகம் மாலையில் மயங்குதல் ஏனோ.
17. சிரிக்கின்ற மலரே இதழ் விரிகின்ற அழகே அசைகின்ற அமுதே அசைகின்ற இசையே.
18. பட்டாம்பூச்சியை வரவேற்க சிட்டாக சிறகை விரித்தாயோ! அமுதேனும் தந்து தான் அந்த விருந்தை அளித்தாயோ!
19. இதழின் மென்மை வருட இதயம் துடிக்குது மெல்ல சுவாசம் சுகம் தரும் வாசம் நீ சுகந்தம் தருகின்ற தேசம் நீ
20. மகரந்த மதுரம் உண்டு மது சிந்தும் போதை கொண்டு பூமகளே உன் முகம் கண்டு புது சிந்து பாடுது வண்டு!
21. பூவே இளம் பூவே பூமியில் நானும் உன்னை போல் ஒரு நாள் மட்டும் வாழ்ந்தாலும் பாசமாய் சிரித்திட வேண்டும் நேசமாய் வாழ்ந்திட வேண்டும் மண்ணிலே மனமாக மனதளவில் நல்ல குணமாக.
22. சிறிய பூவாய் இருந்தாலும் சிரிக்கின்றாய் அழகாய்.
மேலும் இதுபோன்று படிக்க,
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள் | Nethaji quotes in tamil
பாரதியார் பொன்மொழிகள் | Bharathiyar quotes in tamil