Appa kavithai in tamil – இது உலகில் நமக்கு பிடித்தவர்கள் என்று கூறினால் முக்கியமானவர்கள் அம்மா அப்பா அதனால் இந்த பதிவை உலகில் உள்ள அனைத்து அப்பாவிற்கு சமர்ப்பிக்கிறேன் வாருங்கள் அப்பா பற்றிய கவிதைகளை காணப்போகிறோம்.
Appa Quotes in Tamil | அப்பா கவிதை – Appa Kavithai
அங்கிருந்த அம்மாவின் கருவறை புனிதமானது அதுபோல தாங்கி பிடிக்கும் அப்பாவின் கைகளும் புனிதமானது.
பலரது வாழ்வில் கடைசிவரை புரிந்துகொள்ள முடியாத புத்தகம் அப்பா.
தாங்கி பிடிக்க அம்மாவும் தூக்கி நிறுத்த அப்பாவும் இருக்கும் வரை யாரும் வீழ்ந்தது இல்லை.
உன் அப்பாவின் கஷ்டம் தெரிய வேண்டுமானால் அவர் இரவு தூங்கும் பொழுது அந்த சுருங்கிய முகத்தையும் ஆழ்ந்த உறக்கத்தையும் பார்.
தன் தலைக்கு மேலே உட்கார வைத்து நம்மை அழகு பார்க்கும் அப்பாவை நாம் ஒருபோதும் தலைகுனிய வைத்து விடக்கூடாது.
தன் மூச்சு உள்ளவரை என்னை நேசிப்பவர் எனக்காக சுவாசிப்பதும் என் அப்பா மட்டுமே.
ஓலைக்குடிசையில் பிறந்த தன் மகனுக்கு கோடீஸ்வரன் என்று பெயர் வைத்து அழகு பார்த்தவர் அப்பா.
அடித்தாலும் அன்பால் அணைக்கும் ஒரே ஜீவன் என் அப்பா.
இந்த உலகில் ஒரு பெண் பிள்ளையை தந்தையைக் காட்டிலும் வேறு யாராலும் அதிகமாக நேசிக்க முடியாது.
கடவுளுக்கும் அப்பாவுக்கும் சிறு வேறுபாடுதான் உள்ளது கண்களுக்கு தெரியாமல் இருப்பது கடவுள், கண்களுக்கு தெரிந்தும் கடவுள் என புரிந்து கொள்ளப்படாதவர் தான் அப்பா.
பத்து மாதம் சுமந்த தெய்வம் அம்மா வாழ்க்கை முழுக்க சுமக்கும் தெய்வம் அப்பா.
அப்பா நீங்கள் கவிதை அல்ல உரைநடை உங்கள் வாழ்க்கை வரலாறு அல்ல வாழ்க்கையின் எதார்த்தம்.
அப்பாவின் நடமாடும் நிழல்கள் தானே நாமெல்லாம்! அவர் உதிரத்தில் உருவான செடிகள் தானே நாமெல்லாம்!
அப்பாவின் அன்பு எப்போதும் கொண்டாடப்படுவதில்லை ஆனாலும் அவர் நம்மளை எப்பொழுதும் கொண்டாடாமல் இருந்ததில்லை.
மலர்களை மட்டுமே நாம் ரசிப்பதால் வேர்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை அது போல் தான் நம் தந்தையும்.
நம் நிழலில் நம் பிள்ளைகள் வளரும்போது நம் தந்தையை நினைக்க மனம் மறுப்பதில்லை.
வறுமையில் விளிம்புகளில் வாடிக் கிடந்த போது கூட தந்தையின் கண்களில் நான் கண்ணீரை கண்டதில்லை.
ஆண்களெல்லாம் முளைத்தாலும் அப்பா எப்போதும் தனக்காக உழைப்பதில்லை.
பிள்ளைகளின் மகிழ்ச்சியில் என்ன சுகம் காண்பானோ யாருக்கும் தெரியவில்லை!
வேலை முடிந்து தான் வாங்கி வந்த தின்பண்டத்தை பிள்ளைகளை எழுப்பி உன்னைச் சொல்லும் அப்பாவின் அன்பை வளர்ந்தபின் நாமே ஏன் நினைப்பதில்லை?
அச்சாணியை யாரும் அல்லி முத்தமிடுவது இல்லை நீங்கள் அச்சாணி அப்பா.
உங்கள் உருவம் ஒரு கூர்மையான ஆயுதம் ஆனாலும் நீங்களே அந்த ஓட்டத்தின் ஆதாரம்.
ஆறுகடல் நீ தாண்டி அப்பா உன் மனம் வாடி என்னை கரை சேர்க்க துடித்தாய் நீ.
ஊதாரி பிள்ளையாக நான் இருந்த போதிலும் ஊமையாய் நீ நின்று என் தேவைகளை தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்தாய் நீ.
உடலாலும் மனதாலும் நீ உடைந்த போதிலும் ஊக்கம் தந்து என்னை வழிநடத்திய தெய்வம் என் அப்பா.
தோல் மீதும் மார்பு மீதும் என்னை சாய்த்து என் வழிகளை எல்லாம் தாங்கி வழிகாட்டும் கலங்கரை விளக்காய் என் பாதைகள் முழுக்க வெளிச்சம் தந்தாயே அப்பா.
நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது அப்பாவின் கஷ்டம் எனக்கு புரியவில்லை இப்பொழுது நான் அப்பாவை ஆனபின் அப்பாவின் வழியை அறிந்தேன்.
உருவமில்லா கடவுளும் கேட்டால்தான் கொடுக்க முன்வரும் ஆனால் என் தந்தையின் முகத்தை பார்த்தால் மட்டும் போதும் எல்லாம் என் காலடியில் கிடக்கும்.
வானளவு உன் யாகத்தை கணக்குப் போட முடியவில்லை என்னால் உன் அளவுக்கு இங்கே யாரும் இல்லையே அப்பா.
வறுமைக் கோட்டில் நீர் கிடந்தாலும் என் பசியை போக்க மறந்ததில்லை ஒருபோதும்.
அப்பா ஆராரோ பாடி தாலாட்ட அறியாத தாயும் நீயே.
ஆயிரம் சோகங்கள் இருந்தாலும் அதனை முகத்தில் காட்டாத நல்ல நாயகனும் நீயே.
உன் தோள்களில் எனை சுமந்து நீயும் செய்தாய் அன்பின் ஆட்சி.
மேலும் இது போன்ற அழகான உறவுகளைப் பற்றிய கவிதைகளை படிக்க,