இந்தப் பதிவில் நம் தமிழ்நாட்டின் முதல்வராகவும் மற்றும் அதிமுக விற்கு கதாநாயகனாக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பொன்மொழிகள் தான் காணப்போகிறோம்.
எம்.ஜி.ஆர் தத்துவங்கள் | MGR quotes in tamil
நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
நாம் எந்தக் காரியங்கள் செய்தாலும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.
கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபடவேண்டும்; அப்போதுதான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.
சமுதாயத்தின் கட்டுப்பாடுகள், ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமைய வேண்டும்.
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்.
உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் த்துதவத்தை நிலைநாட்டுவீர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.
அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.
மொழி, இனம், கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றை மக்களை ஒன்று சேர்ப்பதற்கும் சமுதாயத்தை உயர்த்துவதற்கும் மேம்மைப் படுத்துவதற்கும் பயன்படவேண்டும். இந்த உயரிய குறிக்கோள்தான் தமிழ்ச் சமுதாயத்தின் குறிக்கோளாகும்.
நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.
உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளி விடுவீர். உழைப்பவரே உயர்ந்தவர் எனும் த்த்துவத்தை நிலைநாட்டுவீர்! புதிய சமதர்ம சமத்துவச் சமுதாய அமைப்புக்கு முன்னேறும் சக்தியாகத் தலைமை தாங்கிடுவீர்.
இந்த பதிவு போல் மேலும் பல தலைவர்களின் சிறந்த தத்துவ பொன்மொழிகளை படிக்க,
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்