William shakespeare quotes in tamil | சேக்ஸ்பியர் தத்துவங்கள்

இந்த பதிவில் ஆங்கில பிரபலமான கவிஞர்களில் ஒருவரான சேக்ஸ்பியர் தத்துவங்கள் தான் காண போகிறோம்.

William shakespeare quotes in tamil

சேக்ஸ்பியர் பொன்மொழிகள் | William shakespeare quotes in tamil

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு கொள்வது தான் வளர்ச்சியின் அடையாளம்.

நீ செல்லும் பாதையைச் சரியாகத் தேர்ந்தெடு. பிறகு அந்தப் பாதையில் உன் பயணத்தைத் தொடங்கு.

பொற்காலம் என்பது நமக்கு முன்னாள் உள்ளதே தவிர நமக்கு பின்னால் இல்லை.

அனுபவம் ஓர் உயர்ந்த நகை. அது அறியதாகத்தான் இருக்கும். ஏனெனில் மிகவும் கூடுதலான விலை கொடுத்தே அதை வாங்க வேண்டியதாயிருக்கின்றது.

வாழ்வென்னும் ஆடையில் இன்பம் துன்பம் என்னும் இரு நூல்களும் இருக்கவே செய்யும்.

காற்றைவிட கடும்வேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்.

எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், சிலரிடம் நம்பிக்கை வையுங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.

காதலிக்க  உணர்ச்சி மட்டும் போதும் கைபிடிக்க அறிவும் நம்பிக்கையும் வேண்டும்.

மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு; மனிதனை வெறுக்காதே.

செல்வம் என்பதுதான் மனித சமுதாயத்தை அழிக்கக்கூடிய கொடிய விஷம். ஏன் என்றால், உலகில் செல்வத்திற்காக நிகழ்ந்துள்ள கொலைகள், வேறு எதற்காகிலும் நிகழ்ந்தவற்றை விட அதிகமானதாகும்.

எனது நூலகமே எனக்குப் போதிய பெருஞ்செல்வமாகும்.

பழிவாங்குதலைக் காட்டிலும் மன்னித்தல் நிச்சயமாக பெருமை உடையது.

நீ போக வேண்டிய இடத்திற்கு மூன்று மணி நேரம் முன் கூட்டியே கூட சென்றுவிடலாம். ஆனால் ஒருநிமிடம் கூட பின்தங்கி விடக்கூடாது.

கருணைதான் பெருந்தன்மையின் அடையாளம்.

தைரியமே நம்முடைய மிக நெருங்கிய நண்பன்.

வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும் போதுதான், நாம் கால்கள் இடறி விழுந்துவிடுகிறோம்.

ஒரு தவறான சண்டையில் உண்மையான வீரம் இருக்க முடியாது.

நண்பனுக்குக் கடன் கொடுத்தால், நண்பனும் போய்விடுவான். கடனும் போய்விடும்.

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள் ஒவ்வொரு கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவார்கள்.

எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்; ஆனால் சிலரிடமே பேச்சு கொடு. எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள்; ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே.

நேரத்தைத் தள்ளிப் போடதே. தாமதித்தால் அபாயமான முடிவு ஏற்படும்.

பிடிவாதமுள்ளவன் நஷ்டத்திற்கு அதிபதி.

உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.

நண்பனிடம் கடன் வாங்குபவர்கள் நட்பை விற்று விடுகிறார்கள்.

தண்ணீரில் ஏற்படும் வட்ட அலைகள் பெரிதாகிக் கொண்டே போய்க் கடைசியில் மறைந்துவிடும் அதுபோல புகழ் பெருகிக் கொண்டே போய்க் கடைசியில் ஒன்றுமில்லாமல் மறைந்துவிடும்.

பலவற்றை கேளுங்கள், ஒரு சிலவற்றை மட்டும் பேசுங்கள்.

சுருங்கச் சொல்வதே பேச்சுத்திறனின் உயிர்நாடி.

நீங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், பின்பு உங்கள் நேரத்தை அது வீணாக்கும்.

துன்பங்கள் வரும்போது தனியாக வருவதில்லை, அவை மொத்தமாகவே வருகின்றன.

அறிவற்ற சினேகிதனிடம் சேர்வதைவிட புத்திசாலியான விரோதியை அடைவதே மேல்.

நீந்துங்கள் அல்லது முழுகுங்கள்.

மாறுதல் கண்டவுடன் மாறும் அன்பு அன்பாகாது.

பெண்ணின் இதயத்தை பேச்சால் வெல்ல முடியாதவன், நாக்குள்ள மனிதனல்ல.

காதல் வசப்பட்டவர்களும், கவிதை வசப்பட்டவர்களும், கள் வசப்பட்டவர்களும் சும்மாயிருக்க மாட்டார்கள்.

நீங்கள் கண்ணீருடன் இருந்தால், இப்பொழுதே அதை சிந்த தயாராக இருங்கள்.

மனதில் திருப்தி ஏற்பட்டிருந்தால் வாழ்வில் வறுமை வந்தாலும் அது வறுமையாகத் தெரியாது.

ஏழையானாலும் உள்ளத்தில் போதிய திருப்தி இருப்பின் அதுவே பெரிய செல்வமாகும்.

தர்ம காரியங்கள் எதுவும் செய்யாமல் பெறப்படும் புகழ் அழியக்கூடியது.

நல்லதொன்றும் கெட்டதொன்றும் எதுவுமில்லை. நாம் நினைப்பதுதான் அதை அவ்வண்ணம் ஆக்குகிறது.

இனிய நண்பா, ஒரு சிறிது நேரம் உன்னைப்பற்றி நான் எண்ணினால், என் இழப்புகள் அனைத்தும் மீட்கப்பட்டு, என் வேதனைகள் தீர்கின்றன.

நாகரீகம் மனிதனைவிட அவனது உடைகளையே மிகவும் தேய்த்து விடுகிறது.

மனிதனின் தீய குணங்களைப் பித்தளைத் தட்டில் பொறிக்கிறோம். அவர்களின் நற்குணங்களை ஓடும் தண்ணீரில் எழுதுகிறோம்.

கொள்ளைக்காரன் பணக்காரனைக் கொள்ளையடித்து ஜீவனம் செய்கிறான். முதலாளி ஏழையைக் கொள்ளையடித்து ஜீவனம் செய்கிறான்.

அரசியல்வாதி கடவுளையும் ஏமாற்றக் கூடியவன்.

கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்கு, சமுதாய வாழ்வு சுகமாக இருக்காது.

தீமையான வார்தைகளால்தான் தீமையான செயல்களும் இரட்டிப்பாகி விடுகின்றன.

இந்த பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள் மற்றும் இது போல் மேலும் சிறந்த பொன்மொழிகளை படிக்க கீழே காணலாம்,

தமிழ் தத்துவம்

சேகுவேரா பொன்மொழிகள் | Che guevara quotes in tamil

தமிழ் பொன்மொழிகள்

பாரதியார் பொன்மொழிகள்

Leave a Comment