சிறந்த தமிழ் தத்துவம் | Tamil Thathuvam

 இந்தத் தொகுப்பில் தமிழில் உள்ள வாழ்க்கை மற்றும் சிறந்த தமிழ் தத்துவங்களை | Tamil thathuvam காண போகிறோம். வாருங்கள் தமிழ் தத்துவங்கள் பார்ப்போம்!

Tamil thathuvam

சிறந்த தத்துவங்கள் | Tamil Thathuvam

நம் வாழ்க்கையில் நடக்கும் பெரும்பான்மையான விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நம்மால் இந்த வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் மாற்றிவிட முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

நம் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும் துன்பங்களுக்கும் நமக்கு பாடமாக வந்தவை மட்டுமே.

இந்த வாழ்க்கையில் நாம் ஆசைப்பட்டபடி அனைத்தும் நடப்பதில்லை இயற்கையின் விதிப்படியே நடக்கிறது.

காரண காரணம் இன்றி நம் வாழ்க்கையில் எதுவும் நடக்காது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு தொந்தரவுகளும் துன்பங்களும் நம்மை மேம்படுத்தும் ஒரு நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.

கடந்து போன விஷயங்களை மறந்து விடுங்கள் அவை சென்றுவிட்டதை நம்மால் மாற்ற இயலாது.

ஆசைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள் எதிர்பார்ப்புகளை மறைத்துக் கொள்ளுங்கள் பேராசை  படாதீர்கள் இதுவே வாழ்க்கை வெற்றிக்கான மந்திரம்.

பயம் கவலை எரிச்சல் கர்வம் பொறாமை தூக்கம் இயக்கம் போன்ற தீய குணங்களை இன்றிலிருந்து அறவே விட்டு விடுங்கள்.

கண்முன்னே இருக்கும் வாழ்க்கையை மட்டும் முழுமையாக வாழுங்கள்.

உங்கள் வாழ்க்கை கிடைக்காமல் உங்கள் வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார்கள் அலர் அதை நீங்கள் அறியுங்கள். உங்கள் வாழ்க்கையை மட்டும் வாழ ஆசைப்படுங்கள் மற்றவர் வாழ்க்கை அல்ல.

நீங்கள் கவலைப் படுவதாலோ வேதனை பெறுவதால் உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றம் வந்துவிடப் போவதில்லை என்பதை அறிந்து செயல்படுங்கள்.

நினைத்தால் நடந்து விடுமா? என்ற ஒரு சீரிய சந்தேகம் எண்ணம் தான், சிலரின் வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கிறது.

மனிதனுடைய திறமை பெரிதல்ல. சந்தர்ப்பமே அவனை பிரகாசிக்கச் செய்கிறது.

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ஒரு எதிர்பார்ப்பு, அதே நாளில் முடிவில் ஒரு அனுபவம். இதுதான் வாழ்க்கை.

விழுந்தால் தூக்கி விட யாருமில்லை என்பதை உணர்ந்தவனே, தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து வைக்கிறான்.

நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரன மனிதன் தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.

அனுபவங்கள் சிறந்த ஆசிரியர்கள்.ஆனால் அதற்கான பள்ளிக் கட்டணம் அதிகம்.

இருந்த காலத்தை மறந்து வாழுங்கள், எதிர்காலத்தை நினைத்து வாழுங்கள், நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்!

அனுபவம் ஓர் நம்பகமான விளக்கு.அதைத் துணையாகக் கொண்டு நடக்கலாம்.

பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள், அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்!

பேச்சு காலத்தைப் போல் ஆழமற்றது; மௌனமோ சாசுவத்தைப்போல் ஆழமானது.

மனித இனத்தை மகிழ்விக்க எவன் முயல்கிறானோ அவனே வாழ்வின் பலன் 

சூழ்நிலைகளை அனுசரிக்கப் பழகிக் கொண்டால், இந்த உலகம் உங்களுக்கு ஏற்ற பூஞ்சோலையாக விளங்கும்.

எந்த சக்தியாலும் அசைக்க முடியாத சக்தி ஒன்றுள்ளது. அதுதான் மனிதனின் மனோசக்தி.

உங்கள் வாழ்க்கையில் நான்கு விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள் நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம் ஏனெனில் இதனை உடைத்தால் சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும்.

மற்றவர் வாழ்க்கையை அழித்து முன்னேறி அவனை விட அவன் வாழ்வின் உண்மையாக உழைத்து முன்னேறி அவனே இவ்வுலகில் அதிகம் உள்ளனர்.

இந்த பதிவு போல் மேலும் பல பதிவுகளை படிக்க கீழே பாருங்கள்,

தமிழ் பொன்மொழிகள்

பாரதியார் பொன்மொழிகள்

அரசியல் தத்துவங்கள்

நட்பு கவிதைகள்

அன்பு கவிதைகள்

Leave a Comment