Funny Jokes in tamil | தமிழ் ஜோக்ஸ்

இந்தப் பதிவில் உங்களை சிரிக்க வைக்கும் வகையில் தமிழில் உள்ள சிறந்த ஃபன்னி ஜோக்ஸ் காணப்போகிறோம்.

தமிழ் ஜோக்ஸ் | Funny Jokes in tamil

1. நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!

நோயாளியின் உறவினர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

2. நோயாளி : டாக்டர், எனக்கு இனிமே இதயத்தில எந்தப் பிரச்சினையும் இல்லையே?

டாக்டர் : கவலையேபடாதீங்க, இனிமே நீங்க உயிரோட இருக்கிற வரைக்கும் உங்க இதயம் நல்லா வேலை செய்யும்.

3. மனைவி : ஏங்க, உங்க அம்மா இந்த திட்டு திட்டறாங்களே கொஞ்ச கூட கேட்க மாட்டீங்களா?

கணவன் : கேட்டுக்கிட்டுத்தானே இருக்கேன்?

மனைவி : ????

4. கணவன் : என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது?

மனைவி : நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!

5. கணவன் : நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பியிருப்பாரோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.

மனைவி : ஏங்க வீணா அவர்மேல பழியைப் போடுறீங்க?

கணவன் : பின்ன என்ன, வரதட்சணையா வாங்கின ஐம்பதாயிரத்தை எடுன்னு திருடன் கரெக்ட கேட்டானே.

6. கணவன் : சென்ஸார் அதிகாரிங்க வந்திருக்காங்க.

மனைவி : எதுக்காம்?

கணவன் : நீயும் என் அம்மாவும் போடற சண்டையில் அளவுக்கு மீறி வன்முறை இருக்குனு அவங்களுக்குத் தகவல் போயிருக்குதாம்.

7. ஒரு வழுக்கைத் தலை ஆள்:கொஞ்சம் ஏமாந்ததால எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க?

அப்புறம் என்ன ஆச்சு?

வழுக்கி விழுந்துட்டாங்க!

8. பையன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?

அம்மா : விமலா டா…

பையன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய “டார்லிங்”னு கூப்புடுறார்.

9. தூங்கும்போது அலாரம் அடிக்கிற சத்தத்தைக் கேட்டாலே எனக்கு அலர்ஜி…

அதனால…?

அலாரம் செட் பண்ணிட்டு, அது அடிக்கறதுக்கு முந்தியே “டாண்”னு எழுந்து, அதை ப் பண்ணிடுவேன்!

10. சுரேஷ் : பசங்களெல்லாம் பயப்படற மாதிரி சினிமாப்படப் பெயர் சொல்லுடா பார்க்கலாம்.

ரமேஷ் : “காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்.

11. நம்ம தலைவருக்கு ஆஸ்பத்திரியில உடனடியா ரத்தம் கொடுக்கணும்னு சொல்றாங்க..ஆனா அவர் குரூப் ரத்தம் கிடைக்கலை.

அவர் ரத்தம் என்ன குரூப்?

ஊழல் குரூப்பாம்.

12. நோயாளி : டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல.

டாக்டர் : வயிறு வலிக்கும் போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.

13. மனைவி : சாப்பாடு போட வா? 

கணவன் : அடியே இன்னைக்கு நான் ஓட்டல்ல சாப்பிட்டுட்டேன் 

மனைவி : அது சரி எவ்வளவு மாவாட்டிட்டு வந்தீங்க?

14. நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பன்ரீங்க?

நோயாளி 2: டாக்டர் தான் “அரை(றை) மூடி ” டானிக் குடிக்க சொன்னார்.

15. டைரக்டர் : என்னய்யா இது… படத்தோட கதையை சிலேட்டுல எழுதிட்டு வந்திருக்கே.

ஒருவர் : அடுத்த படத்துக்காவது வித்தியாசமா கதை எழுதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க அதான்?

டைரக்டர் : ???

16. கமல் : என்ன டைரக்டர் சார் உங்க படத்துக்கு முதல் நாளே இவ்வளவு அடிதடி?

டைரக்டர் : அப்படியா அப்ப படம் ஹிட்!

கமல் : மண்ணாங்கட்டி! முதல் சீன் முடிஞ்ச உடனே அவ்வளவு பேரும் உடனே தியேட்டரை விட்டு வெளியே போகணும்னு முண்டியடிச்சா அடிதடி வராதா!

17. ஆசிரியர் : மாணவர்களே, எறும்பு பெரிசா? யானை பெரிசா?

மாணவன் : அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம், பிறந்த தேதி வேணும்.

18. ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்-ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்-ல கட்டுவாங்க?

மாணவன்: ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?

ஆசிரியர்: ???

19. மாணவன்: Sir எந்த மாதத்தில் 28 நாட்கள் வருகின்றது?

ஆசிரியர்: என்னிடமே கேள்வி கேட்கிறாயா? பிப்ரவரி மாதத்தில் தான்.

மாணவன்: இது கூட உங்களுக்கு தெரியல Sir எல்லா மாதத்திலும் 28 நாட்கள் வரும்.

20. மாணவன்: செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?

ஆசிரியர்: தரமாட்டேன். ஏன்?

மாணவன்: நான் HOME WORK செய்யலை சார்!

21. ஆசிரியர்: டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள்கிட்டே என்ன வேண்டிக்குவே?

ராமு : அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்-னு வேண்டிக்குவேன் சார்.

ஆசிரியர்: ???

22. ஆசிரியர் : கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான். அது என்ன காலம்?

மாணவன்: அது கொசுவே இல்லாத காலம்.

23. மாணவன் 1: வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது?

மாணவன் 2: எப்படிடா சொல்ற?

மாணவன் 1: திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு?-ன்னு கேட்கறாங்க.

24. ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்க ஆசைபடுர.

மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார்.

25. ஆசிரியர் : ஏன்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடி போடுற?

மாணவன்: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போட சொன்னார்!

26. வாத்தியார் : என்னடா ஆறு மார்க் வாங்கிட்டு சிரிக்கிற, உனக்கு வெட்கமா இல்ல?

மாணவன் : நான் ஒன்னுமே எழுதல, அதுக்கு போய் ஆறு மார்க் போட்டு இருக்கீங்களே, உங்களுக்கு வெட்கமா இல்ல!

27. இண்டர்வியூ அதிகாரி : உங்களுக்கு MS அலுவலகம் தெரியுமா?

மாணவன் : நீங்கள் விலாசம் கொடுத்தால் நான் அங்கே போய் விடுவேன் அவரைப் பார்க்க?

28. இண்டர்வியூவில் அதிகாரி: என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?

மாணவன் : நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!

29. இன்டர்வியூ அதிகாரி: உங்களுக்கு பிடிச்ச ஊர் எது? 

மாணவன்: சுவிட்சர்லாந்து

இன்டர்வியூ அதிகாரி: எங்கே Spelling சொல்லுங்க.

மாணவன்: ஐயையோ. அப்படின்னா கோவா.

30. இண்டர்வியூ அதிகாரி : இந்த இன்டர்வியூவை நீங்க அட்டென்ட் பண்ணினதுக்கு என்ன எதிர்பார்க்கிறீங்க?

வேலை கேட்டு வந்தவர் : லஞ்ச் அலவன்ஸ் மட்டும் கொடுங்க சார்! சாயங்காலம் டிபனுக்கு வேற கம்பெனி இன்டர்வியூ இருக்கு!

இண்டர்வியூ அதிகாரி: !!

31. நோயாளி: பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்.

டாக்டர்: அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க.

32. நர்ஸ் : டாக்டரைப் பார்க்கணுமா? டோக்கன் வாங்கிட்டு உட்காருங்க…

நோயாளி : நான் ஆப்ரேஷன் பேஷண்ட்…!

நர்ஸ் : அப்ப டிக்கெட் வாங்கிட்டு உட்காருங்க!

33. டாக்டர்: நான் தான் உங்களுக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்! 

நோயாளி: அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க?

34. நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC-ஐ காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??

டாக்டர் : ஆமாம் ,

நோயாளி : ஆனா , அந்த Tonic பாட்டில ஒரே ஒரு மூடி தானே இருக்குது ?

டாக்டர் : ?????

35. நோயாளி: காதுல பஸ் ஓடுர மாதிரி சத்தம் கேட்குது டாக்டர் 

டாக்டர்: பரிசோதித்து விட்டு அப்படி ஒண்ணும் எனக்கு… கேட்கலையே! 

நோயாளி: இப்போ ஏதாவது சிக்னல்-ல நின்னுருக்குமோ?

36. நோயாளி: டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!

டாக்டர்: தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தரமுடியும். தலைவலி வேணுமின்னா போய் டி.வி. பாருங்க.

Funny jokes in tamil – இந்த ஜோக்ஸ் போல் காண  விரும்புபவர்கள் கீழே படியுங்கள்,

கடி ஜோக்ஸ்

கணவன் மனைவி ஜோக்ஸ்

மொக்கை ஜோக்ஸ்

சந்தானம் காமெடி

Leave a Comment