Friendship Quotes in tamil – இந்தப் பதிவில் நட்பு பற்றிய கவிதைகளை தான் காணப் போகிறோம். நட்பின் அழகு உணர்த்தும் கவிதைகள் உங்களுக்காக பதிவிட்டுள்ளேன்.
நட்பு என்று சொன்னாலே அனைவருக்கும் பிடிக்கும் அதனால் தான் இந்த பதிவில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நட்பின் அழகான கவிதை வரிகளை உங்களிடம் அர்ப்பணித்து உள்ளேன்.
நட்பு கவிதைகள் | Friendship Quotes in tamil
பல உறவுகள் பணத்திற்காக தேடி வரும் சில உறவுகள் பாசத்திற்காக தேடிவரும் அதுதான் நட்பு.
ஆயிரம் விண்மீன்கள் ஆகாயத்தில் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவு தான் அதேபோல ஆயிரம் உறவுகள் மண்ணில் இருந்தாலும் வாழ்க்கைக்கு அழகு நட்பு தான்.
நண்பர்கள் என்ற செல்வம் உன்னைத் தேடி வர சிரிப்பு என்ற கருவி உன் முகத்தில் இருந்தால் போதும்.
உறவு யோசிக்க வைக்கும் காதல் நேசிக்க வைக்கும் கவிதை வாசிக்க வைக்கும் நட்பு தான் நம்மளை எப்பொழுதும் மகிழ்ச்சியாய் வைக்கும்.
நட்பு மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமானது.
நண்பர்கள் உன்னிடம் காசு பணம் எதிர்பார்ப்பதற்கு அவர்கள் ஒன்னும் உன்னுடைய சொந்த பந்தங்கள் கிடையாது.
ஒரு உண்மையான நட்பு ஆயிரம் உறவு களுக்கும் மேலானது.
சண்டையிட்டுக் கொண்டு பாதி நாளும் சிரித்து மகிழ்ந்து பாதி நாளும் போகிறது நம் ஒருநாள் வாழ்க்கை.
சாதி மதம் இனம் எங்களுக்குள் வேறு ஆனால் எங்களுக்குள் இருக்கும் நட்பு ஒன்றுதான்.
தோல்வியில் நான் சாய்ந்தாலும் சாய்வது உனது தோழாக இருக்கும் தோழா. வீட்டில் நான் உயர்ந்தால் ஏறி நிற்பது உன் தோலாக இருக்கும்.
பார்த்து சென்று வா எனச் சொல்லும் தாயின் அன்பை விட உன்னால் முடியும் மச்சான் வென்று வா எனச் சொல்லும் நண்பன் என்றும் நமக்கு ஒரு படி மேல்.
வெற்றியும் உன்னோடு தோல்வியும் உன்னோடு இன்ப துளிகளும் உன்னோடு துன்ப வழிகளும் உன்னோடு மெய்யும் உன்னோடு பொய்யும் உன்னோடு என் கண்ணீரும் உன்னோடு புன்சிரிப்பும் உன்னோடு.
தாயின் மடி தரும் அரவணைப்பையும் உனது தோழமை தரும் தோளோடு கண்டேன். தந்தை தரும் பாசத்தை உணர்ந்த உறுதுணையான பேச்சோடு கண்டேன்.
என்மீது காட்டும் உன்னோட அன்பை உண்மையிலேயே அளவீடு என்னால் முடியாது நண்பா. ஆனால் உன்னை விடவும் அன்பு காட்ட என்னால் முடியும் என்ற நம்பிக்கை உண்டு.
நம்மில் என்றும் இந்த அங்கு போர் தொடர்ந்து கொண்டிருக்க ஆசை துடிக்கிறது அந்த ஆசைக்கு விரட்டும் ஆற்றல் உண்டு என்றும் நான் அறிவேன் தோழா.
கடற்கரை மணலில் எழுதும் வெறும் எழுத்து அல்ல நட்பு இதய ஆழத்தில் குத்தப்படும் பச்சை.
கருவறை சுகம் எனக்கு ஞாபகம் இல்லை நான் தனிமையில் உறங்கிக்கொண்டிருந்தாள் வகுப்பறை சுகம் என் மனம் விட்டு நீங்கவில்லை ஏனெனில் சுகமான நினைவில் தந்த என் நண்பர்களினால்.
துன்பம் நிறைந்த என் வாழ்வில் இன்பம் மயமாய் மாறியது நண்பா நீ என் அருகில் இருக்கும் பொழுது.
கண்ணீர் காண கண்களும் கண்ணீர் விட்டு கலங்குகிறது உன்னை பிரிய நினைக்கும் போது நண்பா.
சிப்பிக்குள் பிறக்குது முத்து சின்ன சிரிப்பில் தான் பிறக்குது நட்பு.
நம்மை அறிந்து நன்மைகள் செய்வதை விட நம்மை அறியாமல் நன்மைகள் செய்வதே நட்பு.
கவலை கொள்ளாதே என்று சொல்வதைவிட கவலையும் நம்மை சிரிக்க வைப்பது நட்பு.
அறியாமையில் இருக்கும் போது நமக்கு அறிவை வளர்ப்பது தான் நட்பு.
பலவீனமாக இருக்கும்போது நமக்கு பலமாக எப்பொழுதும் துணையாக நிற்பது நம் நட்பு.
கைகொடுத்து பேசுவது மட்டுமல்ல நம்பிக்கை கொடுத்து தன்னம்பிக்கை வளர்ப்பது நம் நட்பு.
வாழ்க்கையில் பாதியில் வாழ்ந்தாலும் வாழ்வின் கடைசி வரை கூட வரும் நிழல் ஆக இருப்பதும் நட்பு தான்.
இக்கவிதையில் தாயின் பாலை போல் நட்பின் தூய்மையையும் விளக்க பார்க்கிறேன்.
நான் என்று சொல்லிடும் இன்னொரு உடல் அவன் ஆடைகட்டி கூடவரும் இன்னொரு நிழலவன்.
ஒட்டுமொத்த உறவையும் ஒருசேர கொண்டவன் தொப்புள்கொடி அருத்த பின்னால் துணை வந்த தாய் அவன்.
நேரம் காலம் பார்க்காமல் உதவி செய்பவர்கள் நண்பர்கள் மட்டும் தான்.
ஆயிரம் உறவுகளை விட ஒரு நட்பு போதுமானது நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் சந்தோஷத்திற்கும்.
நண்பனின் குடும்பத்திற்கும் உதவி செய்பவர்கள் தான் நண்பர்கள் தான்.
நண்பர்களுக்கு இடையில் அன்பு மட்டுமே அதிகமாக இருக்கும்.
உயிருக்கு போராடும் பல உயிர்களை காப்பாற்றுபவர்கள் நண்பர்கள்தான் அதிலும் ஒரு நட்பு இருக்கிறது.
நண்பர்களின் அன்பு என்பது ஒளிவு மறைவு இல்லாததே.
தனக்கு கிடைத்த உணவை கூட பகிர்ந்து உன் உண்பவர்கள் இடையில் இருக்கிறது அழகான நட்பு.
காமம் தோற்றிக்கொள்ள அருமையான காதல் அவன் வார்த்தை சண்டை மட்டும் போடும் வலிமையான எதிரி அவன்.
என் சொல்லை அப்படியே கேட்டு செய்யும் மடையஎவன் என் வாழ்வை வெளியிலிருந்து இயக்குகின்ற மதியும் அவன்.
இந்த பதிவு போல் மேலும் பல பதிவுகளைப் படிக்க,